rajudranjit's படம்

சிங்கம் பிளிற யானை முழங்க‌
பூனை உறும புலி கத்துமோ

கிளி கரைய காகம் பேச‌
மயில் கூவ குயில் அகவுமோ

இனியிது போலே உலகிலாகுமோ
அது வழக்கம் போலிருக்குமோ

மனிதன் மேய மாடு உண்ண‌
நிலம் பரவ காடு அழியுமோ

விலங்கு பேச மனிதன் கத்த‌
கதையது மாறி இயற்கை ஏளனம் செய்யுமோ

தெய்வம் மறைந்திருக்க வணங்குவோர்
காட்சியளிக்க மனிதன் மறைவானோ

இன்பம் தொலைத்து துன்பம் விளங்க‌
தன்னுள்ளம் விரித்து விற்குமோ மானுடம்

கல்லில் சிலை உளியினை அடிக்க
உளியது அதிர பொருளல்ல சிலையென‌

விழிக்கும் வித்தகரே அறிவீரோ இவ்வுலகம்
பழிக்கு அஞ்சா பாதகமான இப்பூமி

தோற்றமறியார் காரணமாயிரம் கண்டார்
குற்றம் என்பதை குணத்தின் செயலெனவாக்கினார்

யுகமென வகுத்தவர் ஒருசாரர் போனாரே
ஜெகமழிய சாதகமானாரே விளங்கா மனிதர்களே

இயற்கை சிந்திக்க பேரழிவு காண்பாய்
வளமென இயற்கை வளர வழியெப்போது?

ஆற்றின் பாதை மாற்றும் சிறு நாணல்
குளத்தின் பயனை மாற்றும் சிறு நுனல்

இயற்கை மாற்றி அற்புதம் படைக்க‌
செயற்கை வளர்க்கும் அழிவில் மனிதன் பாதையோ

கொடுமை கொடுமை இயற்கை சிலிர்க்க‌
அதற்கு முன் சிந்திப்பாய் சினேகமுடன் சிநேகிதனே

வாழ்வு உயர வளமென இயற்கை வாழ‌
சிறப்பென வாழும் அனைத்துயிரும் இவ்வுலகில்

இயற்கை வாழ வழியது கடைபிடி உடன்
உயிர்கள் மகிழ இயற்கை சிரிக்க சத்தியம் செய்!

என்றும்: சுஷ்ருவா

7
Your rating: None Average: 7 (4 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால்


7

இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் கோடி நன்மை இல்லாவிட்டால் பூமி பாழடைந்துவிடும் என்பதை அழகாக உங்கள் கவிதையில் எடுத்து இயம்பியிருக்கிறீர்கள். இதே போன்ற சிந்தனை எல்லோருக்கும் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? இன்றே ஒரு மரத்தை நடுவோம்.... அருமையான கவிதை. பாராட்டுகள் Clap Clap Clap

rajudranjit's படம்

நன்றி ஐயா! இன்றே ஒரு மரம்


நன்றி ஐயா! இன்றே ஒரு மரம் நடுவோம் என்று தாங்கள் சொன்னதற்கு இனங்க ஒவ்வொருவரும் தனது பிறந்த நாட்கள், திருமண நாட்களில் இதுபோல் சிறப்பான ஒரு முறையைப் பின்பற்றினால் இயற்கை செழிக்க ஏதுவாகும் இல்லையா ஐயா!

aro...'s படம்

இயற்கையின் இரு கையில் நம்


7

இயற்கையின் இரு கையில் நம் வாழ்க்கையென்பதி அழகாக சொல்லியுல்லீர்.... Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!

vinoth's படம்

விலங்கு பேச மனிதன்


6

விலங்கு பேச மனிதன் கத்த‌
கதையது மாறி இயற்கை ஏளனம் செய்யுமோ

மனிதன் செயற்கை இயந்திரமாக மாறிவிட்டான். இயற்கை இயற்கையாகவே உள்ளது.

மனிதன் மறுபடி இயற்கையாக மாற இயற்கை தான் வழிவகுக்க வேண்டும்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!

joshi2010's படம்

அருமையான கவிதை நண்பரே... .


8

அருமையான கவிதை நண்பரே... . கவிதை மட்டுமல்ல இயற்கையை நேசிக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றும் சொல்லி விட்டீர்......

"இயற்கை சிந்திக்க பேரழிவு காண்பாய்
வளமென இயற்கை வளர வழியெப்போது?"

இயற்கை வளர்ந்தால் தான்... மனிதனும், செயற்கையும்......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!