annaa's படம்

இயற்கையின் இனிமை கேளீர் !

அன்ன மென்நடை காணோம்
....அச்சிறு பொட்டினைக் காணோம்.
சின்னக் கொடியிடை காணோம்.
....சேலைகள் எங்குமே காணோம்.
வன்னக் குழல்சடை தரிக்கும்
....வான்கரு மேகமுங் காணோம்
தின்னத் தின்னவே தெவிட்டாத்
....தீஞ்சுவைத் தமிழையுங் காணோம்!

மின்னும் பலவுடை பூட்டி
....மேலுடல் கீழுடல் காட்டி
நன்னும் தமிழ்உடை, செய்கை
....நடத்தையும் பேச்சையுந் தொலைத்தே
மன்னும் தமிழ்க்குடி அழித்தே
....மேலைநாட் டினரெனத் துடிப்பீர்
நன்றென் ஒருசொலைக் கேளீர்.
....நாடுக பண்புறு வாழ்வே!

முன்பந் நாட்களி லுரைத்த
....முன்னவர் மூடரு மல்லர்.
பின்ன வரிவரில் யாரும்
....பெரிதொரு அறிஞரு மல்லர்.
தென்ன வர்குடி நாளும்
....தழைத்திடத் தாங்கியே நிற்பீர்
அன்ன வர்வழி நடந்து
....அறத்தினைக் காத்திடப் புகுவீர்!

நன்றி!

" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,
http://www.viramathiyan.blogspot.com/
http://puthuvithai.blogspot.com/

10
Your rating: None Average: 10 (1 vote)

கருத்துகள்

chandru2110's படம்

கவிதையின் வரிகளும், வரிகளின்


கவிதையின் வரிகளும், வரிகளின் சொற்களும்,சொற்களின் இனிமையும் மிக நன்று.


சந்துரு


uthira's படம்

தின்னத் தின்னவே


தின்னத் தின்னவே தெவிட்டாத்
....தீஞ்சுவைத் தமிழையுங் காணோம்!

உண்மை தான்......
அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


BaLaN's படம்

கவிதை படிக்கும் போதே மனதில்


கவிதை படிக்கும் போதே மனதில் ஒரு தாக்கம், அருமை நயத்துடன் அமைந்த கவிதை, பாரதி படத்துடன் சிறப்பாக அமைந்தது. பாராட்டுகள்.


அன்புடன்

பாலன்


dharshi's படம்

அன்ன வர்வழி


அன்ன வர்வழி நடந்து
....அறத்தினைக் காத்திடப் புகுவீர்!

ஆஹா..! தோழா அருமை..! தமிழ் தாய் உம சிந்தையில் நிக்கிறாள்..!! நீவிர் வாழ்க...!!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

உங்க கவிதைகளை படிக்க இனி


உங்க கவிதைகளை படிக்க இனி தனியா இலக்கணம் படிக்கணும் போல இருக்கே

அருமை
10/10


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...