இயற்கை சிரிக்க
மனிதன் செய்தது
என்ன?
மனிதன் மகிழ
இயற்கை தருகின்றது
ஏராளம்!
மனிதன் வாழ்வு
மறையும் காலம்
அதனளவு!
மனிதன் மாற்றம்
இயற்கை சிரிக்க
அவமானம்!
பிறக்கும் குழந்தை
வளரும் மனிதன்
முன்னேற்றம்!
இதை விட்டு
மனிதா நீ அறிந்தது
என்ன?
உன்னை காக்கும் இயற்கை
உன்னையுமறியாமல் உண்மை
நீ அறிவாயோ!
நீ பிளக்கும் பூமி
அழிக்கும் காடுகள்
பொருக்கும் இயற்கை!
காற்றை மாசாக்கி கெடுக்கின்றாய்
காசுக்கு காற்றை விற்கின்றாய்
அவமானம்!
எல்லாம் இலவசம் இயற்கையின்
அரசாட்சி கோலோச்ச வளமை
அறிவாயோ நீ அறிவீலியே!
நாகரீக மாற்றமென்று பெருமைகொண்டே
அநாகரீக வளர்சியென சிறுமை வளர
ஒரு தீண்டத்தகாத இனமே மானுடம்!
இயற்கைக் கோபம் கொள்ளுமே
வாழ்க்கை மாற்றம் அலங்கோலம்
மனிதா உடன் திருந்து!
இயற்கை மகிழ நீ வாழ்வாய்
இயற்கை வளர உதவி செய்
வாழும் மனிதயினம் வளமாக!
என்றும்: சுஷ்ருவா
கருத்துகள்
இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால்
இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் இயற்கை உன்னை காக்கும். உண்மைதான். ஆனால் மனிதன் இயற்கையை மறந்துவிட்டானே. அதை ஞாபகப் படுத்தத்தான் இந்தக் கவிதையோ? நல்ல கவிதை.
இயற்கை சிரிக்க மனிதன்
இயற்கை சிரிக்க
மனிதன் செய்தது
என்ன?
மனிதன் மகிழ
இயற்கை தருகின்றது
ஏராளம்!
====================







