தமிழா! தமிழா! பேசுவது தமிழா!
பழக்கம் வழக்கம் மாற்றுவது தமிழா!
தமிழன் வாயாலே கக்குவது எல்லாமே
இந்திய மாநில மொழிகளின் கலவையா தமிழா!
போத்துக்கேய, ஆங்கிலேய மொழிகளின் திணிப்பா தமிழா!
தலையை நிமிர்த்தித் தமிழனென்று மிடுக்கோடு நடைபோட
பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!
ஆங்கில அ(ஹ)லோ, ஃபலோ தமிழானால் பாரும்
வணக்கம், பின்பற்று என்று சொல் தமிழா!
இந்தி மொழி ஜோடியும் உருது மொழி தமாஸும்
இணையென்றும் வேடிக்கையென்றும் எடுத்துச் சொல் தமிழா!
பிரெஞ்சில குசினி டச்சில கக்கூஸ் என்றும்
வடமொழியில பிரச்சனை கன்னடத்தில சமாளி என்றும்
தமிழிலே கலந்து சொல்ல வேண்டாமப்பா...
அவற்றை அடுப்படி, கழிப்பறை, கலகம், தீர்வுகாணென
செந்தமிழில் எடுத்தாளப் பழகிவிடு தமிழா!
பிறமொழிச் சொல்களை மறக்காமல் அடைப்புக்குள் எழுதிவிடு
தூயதமிழில் தெளிவுபெறும் வரையாவது நம்மாளுகள் புரிந்திடவே!
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!
கருத்துகள்
இனிய தமிழ் இனி என்றும்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தாலாட்டுப் பாடி தமிழ் வளர்த்த
தாலாட்டுப் பாடி தமிழ் வளர்த்த தமிழினத்தில் பிறந்த நாம் இனிய தமிழை கண்டிப்பாகப் பேணுவோம். திருமந்திரம், திருவாசகம், திருவருட்பா, திருப்புகழ், திருக்குறள் போன்ற பொன்னான நூல்களைக் கொண்ட நாம் சிறப்பான தமிழில் உரையாடுவோம்.
நன்றாகச் சொன்னீர்கள் அன்பரே!
நன்றாகச் சொன்னீர்கள் அன்பரே! நல்ல வழிக்காட்டல்! அதனுடன் ஐயா பொன்வண்ணன் அவர்களின் அறிவுரையும் சிறப்பென அமைந்துள்ளது,சரியாக நாம் பின்பற்றினால் தமிழ் இனி இனிமையானதாக அமையும் தானே!

தங்களைப் போன்றவர்களால் தான்
தங்களைப் போன்றவர்களால் தான் தமிழ் இன்னமும் வாழ்கின்றது........ 
அருமையான உங்கள் கவி
அருமையான உங்கள் கவி தமிழுக்கே பெருமை.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் நாம்கூடி.......
உரிமையோடும், உணர்வோடும் இளங்கவி.












