vinoth's படம்

புத்தபூமியில் இரத்தஆறு பிணநாற்றம்
இனத்தை துடைத்துவிட்டு
அமைதியேற்றும் இறுதிக்கட்டம்
அலறும் உயிர்களை ஆர்ப்பரித்து
அழிக்கும் கடைசி யுத்தம்
இன்றே கடைசி, இனியில்லை, நிம்மதி.

புதைகுழிகளில் கண்ணீருடன்
புதிய நம்பிக்கையில் பணதில் புளரும்
சந்தர்ப்ப யோக்கியர்களை
கையெடுத்து கும்பிட்டு எதிரிகளிடமே
உதவி கேட்ட மிச்ச உயிர்களும்
இன்றுடன் அழிந்துவிடும்
இனி நிம்மதிதானே

எங்கிருந்தோ வந்து பாரதத்தில் நரங்கி
எழுதிசையும் தங்கள் கொடிகளை நாட்டி
பணத்திற்கும் மதத்திற்கும்
பெரியார் வசனம் பேசித்திரிந்து
தமிழ் கொலைகளை செவ்வனே செய்துவந்த
தமிழ் தலைக்களுக்கு வாக்களித்து
கடைசி நம்பிக்கையையும்
கெடுத்து விட்டு நிம்மதியாய்
காலத்தின் முன் மௌன சாட்சிகளாய் நாம்

எங்கே புரியப்போகிறது தமிழின் புனிதம்
எப்படி புரியும் பாரதத்தின் புண்ணியம்
விடுதலை நாளை நமக்கு பிச்சைப்போட்டதாய்
வீதியெங்கும் ஆங்கிலத்தில் பறைசாற்றி
கூட்டம் போட்டு கல்லறைமீது
இராஜ்யம் கட்டுபவர்கள் ஆயிற்றே
எப்படி புரியும் தாங்கள் குடிப்பதும்
பாரதத்தின் இரத்தம் என
இனி தமிழீழத்தில் கிடக்கும் தலையில்லா
பிண்ட கல்லறைகளில் கட்டட்டும்
புதிய இராஜ்யம், நிம்மதி தானே

போவது பெரியார் வழியாம்
கொல்வது பெரியார் கொள்கைகளை
இதுதான் நாம் கற்ற பாடம்
போதியுங்கள் இதை பிள்ளைகளுக்கும்
தந்தை நடந்து வந்த இரத்த வழிகளை
குடும்மாய் அரசியல் குளம் தோண்டி
மக்கள் நாய்களுக்கு எலும்பு பிச்சையிட்டு
சதைகளை தின்று சதைவளர்க்கும்
மாக்கள், வாழிய பல்லாண்டு

இனி உங்கள் இராச்சியம்
நடப்பதெல்லாம் நல்லதற்கு
நடந்ததும் நல்லதற்கு
உயிரும் சுதந்திரம் கேட்ட
மக்களை அழித்தாகிவிட்டது – இனி
கேட்க நாதியில்லை
குரைத்த நாயும் இப்போது சவக்குளிக்குள்
நிம்மதியாய் தூங்கலாம்

:'( - வினோத்

9
Your rating: None Average: 9 (2 votes)

கருத்துகள்

nesamithran's படம்

இனியில்லை


ந‌ண்பரே

கவிதை அருமை
எழுத்துப் பிழைக‌ளை த‌விர்க்க‌வும்

ப‌ச்சோந்தி அர‌சிய‌ல்வாதிகளின்

முக‌த்தில் அமில‌ம் ஊற்றும் க‌விதை இது....

vinoth's படம்

இனியில்லை


மானம், உயிர் நாடு இவற்றை பணத்திற்காக விற்கும் அரசியல் வாதிகளை ஒழித்தால்தான் இன் நாடு உருப்படும்

கருத்திற்கு நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


ramkumars's படம்

இனியில்லை


உணர்ச்சிப்பெருக்கில் விழும் வார்த்தைகளில்
எழுத்துப் பிழைகள் தவிர்க்கமுடியாது நண்பரே....


??????? ???????? ??????????????


Roy's படம்

அருமை....!!!


அருமை....!!!

vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

மனிதர்கள் தாம் வாழ


மனிதர்கள் தாம் வாழ விலங்கினங்களை அழித்துக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது தன் இனத்தையே அழிக்கத்தொடங்கிவிட்டார்கள்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

ம். உண்மை


ம். உண்மை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...