rajudranjit's படம்

அன்னை இந்தியா சிரித்தாள் அழகென‌
நாளைய மக்கள் நலமுடன் வாழ்வாரென‌
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்ப்பத்தியேழிலே
அன்று நாளாம் ஆகஸ்ட்டு பதினைந்தாம்

ஆண்டுகள் அறுபத்திநாலு தொட்டு நின்றதே
அல்லல் படும் அவலங்கள் தூர விலகாமல்
வற்றிய வயிறு வாடிக் கொண்டிருக்க‌
அன்னை இந்தியா அழும்குரல் கேட்கலையோ

பெற்ற பிள்ளைகளில் உத்தமர் காந்தி சிறந்தவரே
அவர் வழி நடப்போர் சிலருண்டுவென சிரித்தாள்
சிரிக்கும் அன்னையின் புத்தியிலுரைக்க‌ மனம் வெதும்பி
ஏனைய‌ப் பிள்ளைக‌ளின் அவ‌ல‌ம் க‌ண்டே க‌ல‌ங்கினாள்

அன்னையின் க‌வ‌லைப் பிள்ளைக‌ளினூழ‌ல் க‌ண்டு
மீண்டும் ப‌ர‌ங்கிய‌ன் கையில் த‌னைய‌ட‌கு வைப்பாரோ
இர‌த்த‌ம் சிந்திய‌ பிள்ளைக‌ள் ஆன்மா விழிக்குமோ
குற்ற‌மொழிக்க‌ மீண்டுமொரு சுத‌ந்திர‌ப்போர் வ‌ருமோ

அன்னையின் புகழ் ஓங்கிட ஒருபுறம்
விதியின் கையில் வஞ்சகர் வலையில்
வீழாமல் காக்கும் பிள்ளைகள் மறுபுறம்
இருப்பதைக் கண்டுமகிழ்ந்தாள் ஆனந்தத்தால்

எத்தனை இன்னல்கள் எத்தனை குழிபறிப்புகள்
அத்தனையும் உயிர்கொடுத்து மீட்டப்பிள்ளைகள்
இறையென்று சொன்னாலும் தகும் முறையது
நம்மை வாழ வைக்கும் உண்மை தியாகிப்பிள்ளைகள்

இந்நாள் அவர்களை நினைவுருத்தும் பொன்னாள்
சிந்திய இரத்தம் மண்ணிலூறி சோலையெனவாக‌
சிந்தையில் வைத்து சிரமது தாழ்த்தி வணங்கிடுவோம்
அன்னையிந்தியா அழகென மிளிர ஜெகம் புகழ்ந்திட‌

முன்னோர் பட்ட துன்பம் நாமதை மறவாமல்
எதுவெனவாக அவர்க்கனவு மெய்த்திடவே ஒன்றாய்
சுதந்திர நன்னாளில் வரும் தலைமுறைக் காத்திட‌
இந்தியனென்றே ஒற்றுமைக் கூடியுழைத்திட மகிழ்வோம்

வாழ்க பாரதம் வளர்க இந்திய அன்னையின் புகழ்
அவளின் பிள்ளைகள் நாம் ஒற்றுமையுடன் காத்திடுவோம்
அன்னையின் மானம் பாரதத்தின் முன்னேற்றம் வளர‌
உயிரென நினைந்தே பாரதம் மீட்ட தியாகிகளுக்கு
நன்றியென சொல்வது ஒற்றுமையாய் நாம் இந்தியனே

4
Your rating: None Average: 4 (1 vote)

கருத்துகள்

inasartrcihy's படம்

இந்தியன் என்று சொல்வதைவிட


4

இந்தியன் என்று சொல்வதைவிட தமிழன் என்று சொல்லி பார்

rajudranjit's படம்

இந்தியனென்றால் இன்பமதிகம்,


இந்தியனென்றால் இன்பமதிகம், தமிழனென்றால் தனிமையிலின்பம்!