தந்தையின் தவிப்புகளின் தாலாட்டு…! உன் நினைவாலே உயிரேங்க வாடுகின்றேன் அடையாளமில்லாமல் போனதெங்கே உயிரோரம் விடைதேடிப் பாடுகின்றேன் உணர்வெல்லம் உயிர்கடையத் தேடுகின்றேன் விடைகூற வழியில்லா வாக்கியங்கள் வாழ்வேறி விளையாடும் சூத்திரங்கள் வலியோடு நடைபோடும் யாசகமாய் வாழ்கின்றேன் விடியாத காத்திருப்பில் இதயத்தைக் கூர்வாளால் ஒர் கிழிப்பு என்றென்றும் பரிமாறும் உன்னினைப்பு நெஞ்சத்தில் குமுறித்தான் எரிமலையாய் நினைவுகளின் நெருப்பினிலே குளிக்கின்றேன் விழியோரம் பாசத்தால் பாத்திகட்டி விழாக்கோலம் எடுகின்றேன் என் மகனே மொழியெல்லம் தடுமாறும் உயிர் துடிக்க உள்ளத்தில் வெள்ளமென நீயிருக்க… அலைபாயும் ஆறுதல்கள் அகம் ஓயா நிலைகொள்ளா நினைவுகளும் எனுள் மாயா தலைமோதும் தவிப்பெல்லாம் உனை கானா துளைபோடு மெண்ணங்களாய் நிதம் வாடா வெள்ளிக் கிண்ணத்தில பால் சோறு அள்ளித் தின்றிடவே நீ வாடா சொல்லில் கிங்கினியை நீ பூட்டி எள்ளி நகையாட நீ வாடா புத்தம் புது ஆடை காத்திருக்கு போன வழிச் சொல்லாமப் போனதெங்கே நித்தம் விளையாட பொம்மையுண்டு நின்னைக் கேட்கிறது என்னை இங்கு எந்தன் மார்மீது விளையாட உந்தன் பாதங்களைத் தேடுகின்றேன் உந்தன் குறும்புகளில் உறவாட ஏங்கித் தவிகின்றேன் எந்நாளும் பூத்திருந்தேன் புன்னகையக் கான வேண்டி சீக்கிரமே சென்று விட்டாய் சொல்லாமல் ஆத்திரமாய் வந்ததெலாம் அடிமாற காத்திருந்தான் கோட்டைக்குள்ளே காத்திருக்கேன்… காலமெல்லம்… காலமெல்லம்… காலமெல்லம்… அன்பு கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 342 views கருத்துகள் வருத்தத்தில் நாங்களும் வருத்தத்தில் நாங்களும் இணைந்து கொள்கிறோம் நண்பரே :cry: வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments நித்தம் நித்தம் விளையாட பொம்மையுண்டு நின்னைக் கேட்கிறது என்னை இங்கு..........வருத்தத்தில் நாங்களும்.... Venish Aj http://venishaj.blogspot.com Log in to post comments உந்தன் உந்தன் குறும்புகளில்உறவாடஏங்கித் தவிகின்றேன் குழந்தையை இழந்தவர் மனது ஏங்கித் தவிப்பது எங்களையும் வாட்டுகிறது.ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.. Log in to post comments எண்ணியெண்ணி எண்ணியெண்ணி எண்னமாலாத்துயரோடு உங்களோடு நானும்.( :-((" width="50" /> அன்பரசன் Log in to post comments இறப்பு இழப்பாகும்போது இறப்பு இழப்பாகும்போது ஏற்படும் தவிப்பு அவித்தக் கவிதை அழிக்க முடியா மனத் தாக்கத்தின் துக்கமே. வார்த்தை ஆறுதல் வார்க்கிறேன்.ஏற்றுக்கொள்வீர்! Log in to post comments :cry: Log in to post comments புத்திர சோகத்தை காலம்தான் புத்திர சோகத்தை காலம்தான் மாற்ற வேண்டும். Log in to post comments மனம் கனக்கும் சோகம், மனம் கனக்கும் சோகம், நினைக்கையிலே விம்மும் மனம்! :cry: Log in to post comments துயர் நிறைந்த கவிதையைப் துயர் நிறைந்த கவிதையைப் படிக்க எனக்குள்ளும் துயர் நிறைய உங்கள் துயரில் நானும் பங்கெடுக்கின்றேன். யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments :cry: :cry: :cry: தர்ஷினி Log in to post comments புத்தம் புது புத்தம் புது ஆடைகாத்திருக்குபோன வழிச் சொல்லாமப்போனதெங்கேநித்தம் விளையாடபொம்மையுண்டுநின்னைக் கேட்கிறதுஎன்னை இங்கு..... மனதை மிகவும் பாதித்தது உங்களின் வேதனை ஏக்கம்...... என் கண்கள் கலங்கியது!!!!! உங்களின் வேதனை கண்ணீரில் நானும் இணைந்துகொண்டேன்! :cry: :cry: :cry: போன வழிச்சொல்லாமப் போனதெங்கே!!!!! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments வேதனை மிகுந்த வரிகள் வேதனை மிகுந்த வரிகள் Log in to post comments
வருத்தத்தில் நாங்களும் வருத்தத்தில் நாங்களும் இணைந்து கொள்கிறோம் நண்பரே :cry: வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
நித்தம் நித்தம் விளையாட பொம்மையுண்டு நின்னைக் கேட்கிறது என்னை இங்கு..........வருத்தத்தில் நாங்களும்.... Venish Aj http://venishaj.blogspot.com Log in to post comments
உந்தன் உந்தன் குறும்புகளில்உறவாடஏங்கித் தவிகின்றேன் குழந்தையை இழந்தவர் மனது ஏங்கித் தவிப்பது எங்களையும் வாட்டுகிறது.ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.. Log in to post comments
எண்ணியெண்ணி எண்ணியெண்ணி எண்னமாலாத்துயரோடு உங்களோடு நானும்.( :-((" width="50" /> அன்பரசன் Log in to post comments
இறப்பு இழப்பாகும்போது இறப்பு இழப்பாகும்போது ஏற்படும் தவிப்பு அவித்தக் கவிதை அழிக்க முடியா மனத் தாக்கத்தின் துக்கமே. வார்த்தை ஆறுதல் வார்க்கிறேன்.ஏற்றுக்கொள்வீர்! Log in to post comments
துயர் நிறைந்த கவிதையைப் துயர் நிறைந்த கவிதையைப் படிக்க எனக்குள்ளும் துயர் நிறைய உங்கள் துயரில் நானும் பங்கெடுக்கின்றேன். யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
புத்தம் புது புத்தம் புது ஆடைகாத்திருக்குபோன வழிச் சொல்லாமப்போனதெங்கேநித்தம் விளையாடபொம்மையுண்டுநின்னைக் கேட்கிறதுஎன்னை இங்கு..... மனதை மிகவும் பாதித்தது உங்களின் வேதனை ஏக்கம்...... என் கண்கள் கலங்கியது!!!!! உங்களின் வேதனை கண்ணீரில் நானும் இணைந்துகொண்டேன்! :cry: :cry: :cry: போன வழிச்சொல்லாமப் போனதெங்கே!!!!! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162