ஆலமரம் ஆற்றோரம்
ஆற்றோரம் காற்றடிக்கும்
ஆலமரம் காற்றடித்தும்
அசையாமல் நின்றிருக்கும்!
நாணலுண்டு ஆற்றோரம்
நான்குபக்கம் காற்றடித்தும்
தான்வளைந்து கொடுப்பதனால்
தாங்குகிற நாணலுண்டு!
தலைநிமிர்ந்த ஆலமரம்
சாய்வதுண்டு புயல்காற்றில்!
தலைகுனிந்த நாணல்எனில்
தலைநிமிரும் புயல்ஓய்ந்தால்!
தனக்குநிகர் இல்லையென்பார்
சருக்கிவிழ நேர்வதுண்டு!
பணிவுடனே நடந்துகொண்டால்
பலமான வெற்றியுண்டு!
நன்றி : தங்கம்பழனி /http://tamil-children.blogspot.com
(1 vote)




