kirikasan's படம்

எத்தனைதான் இன்னும்வேண்டும் இறைவா- நீ
எடுத்தவரை போதும் என்ப தில்லையா
மொத்தமும்தான் கொள்ள வேண்டுமென்பதா - இவர்
முடியும்வரை கொள்வதென்ற சித்தமா
ரத்தமெல்லாம் கொட்டிகொட்டி ஆண்டவா - நாம்
ராப்பகலா அழுதுமின்னு மென்னடா
செத்த பாம்பை அடிப்பது போல் இன்னுமா - நாம்
சாகுமொரு இனம் அழிக்க எண்ணமா

வெற்றுடலம் தந்ததுவும் உன்செயல்- அதில்
வித்தெனவே தந்தஉயிர் உன்பொருள்
சுற்றிவரும் உலகிலெலாம் வாழ்பவர் - சுகம்
சொட்டுகின்ற இன்பவாழ்வு கொள்கையில்
சற்று மெமை ஈவிரக்க மின்றியே - இறை
சங்கரனே கொல்ல ஆடும்தாண்டவம்
சுற்றிப்பேய்கள் நின்று தோலைப் பிய்த்துமே - எமை
சித்திரவதை செய்வது போலாகுதே

என்னபாவம் செய்து விட்டோம் வாழ்விலே நாமும்
ஏது இந்த மண்ணில் கொண்டகுற்றமோ!
சின்னவராய் செந்தமிழைப் பேசியே - நாமும்
செய்யும்பிழை ஏது தினம் சாகிறோம்
மன்னவனாம் எங்கள் உயிர் காத்தவர் - தூய
மனமதிலே உத்தமராய் வாழ்ந்தவர்
உன்னதமாய் கொண்ட அவர் இலட்சியம் ஏன்
உதிரமதில் கரைய வைத்தாய் தெய்வமே!

நல்லவர்கள் என்பதுஇவ் வுலகிலே - ஏதும்
நனமையற்ற பிறவிஎன்னும் கொள்கையோ?
சொல்வதெலாம் சத்தியமென் றாகிடில் - இவர்
சுத்தமாக வாழும் தரம் இல்லையோ
கல்மனது கொண்டு வெட்டிக் கொல்பவர் - தமைக்
காத்திடவே உன்மனது சொல்லுதோ
வல்லவனே நீயிருப்ப துண்மையோ - நம்
வாழ்வு என்ப தென்னபேயின் கையிலோ

மொத்தமாகக் தமிழினத்தைச் சுட்டுமே - பெரும்
மூர்க்கனாக பகையளிக்க நம்மையும்
கத்தியழும்குரல் இசைக்கு திருநடம் கொண்டு
காலெடுத்து ஆடுவது மேனடா
பித்தனென்று உன்னைச் சொன்னபோதிலும் - அன்று
பிள்ளை புத்திகாதில் சொன்ன போதிலும்
அத்தனாக அன்னை பாதி கொண்டதும் - உன்
புத்தி பாதியாகிப் போன ஏதுவோ?

கண்ணிரண்டும் கொண்டு எம்மைபாராய்யா - உன்
கனலெறித்தகண்ணை மூடு தேவையா
பெண்ணைப் பிள்ளை தாய் தனித்து சிறையிலே- போட்டு
பேசரும் வல்வினைமுடித்து கொல்கிறார்
எண்ணி மனங்கொண்டு அருள் தந்திடு - நீயும்
எம்மினத்தைக் காத்து உயிர் தந்திடு
வண்ணமெழும் வாழ்வுதனை வாழவும் - எம்
வளமிழந்த மண் செழிக்க வைத்திடு !

(கடவுளை இயலாமையின்போது கோபத்தில் நிந்தனைசெய்து பாடுவது இலக்கியத்தில் உண்டு அதனால் பக்திமான்கள் என்மீது கோபப்பட வேண்டாம்)

7.28571
Your rating: None Average: 7.3 (7 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

வெற்றுடலம் தந்ததுவும்


5

வெற்றுடலம் தந்ததுவும் உன்செயல்- அதில்
வித்தெனவே தந்தஉயிர் உன்பொருள்
சுற்றிவரும் உலகிலெலாம் வாழ்பவர் - சுகம்
சொட்டுகின்ற இன்பவாழ்வு கொள்கையில்
சற்று மெமை ஈவிரக்க மின்றியே - இறை
சங்கரனே கொல்ல ஆடும்தாண்டவம்
சுற்றிப்பேய்கள் நின்று தோலைப் பிய்த்துமே - எமை
சித்திரவதை செய்வது போலாகுதே!

இதில் யாருக்கும் கோபமில்லை நண்பரே! உண்மையைத் தான் சொல்லியுள்ளீர்கள்!

tamilparks's படம்

(No subject)


8

bye


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


joshi2010's படம்

"கண்ணிரண்டும் கொண்டு


9

"கண்ணிரண்டும் கொண்டு எம்மைபாராய்யா - உன்
கனலெறித்தகண்ணை மூடு தேவையா
பெண்ணைப் பிள்ளை தாய் தனித்து சிறையிலே- போட்டு
பேசரும் வல்வினைமுடித்து கொல்கிறார்
எண்ணி மனங்கொண்டு அருள் தந்திடு - நீயும்
எம்மினத்தைக் காத்து உயிர் தந்திடு
வண்ணமெழும் வாழ்வுதனை வாழவும் - எம்
வளமிழந்த மண் செழிக்க வைத்திடு !"

தமிழினம் சுதந்திரக் காற்றை சுவாஷிக்க அருள் புரிவாய் இறைவா.......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


aro...'s படம்

உணர்வுகள் பிழிய


7

உணர்வுகள் பிழிய பட்டிருக்கின்றன.../
Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


yarlpavanan's படம்

அன்பு காட்டுவதும் காட்டும்


8

அன்பு காட்டுவதும்
காட்டும் அன்பு முற்றினால்
திட்டித் தீர்ப்பதும்
வணங்குவோர் செயலென
இம்மணித்துளி வரை
வாழ வழி விட்ட
கடவுளுக்கே தெரியுமப்பா!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kirikasan's படம்

ஆகா இத்தனை பாராட்டுக்களா?


ஆகா இத்தனை பாராட்டுக்களா? கவலையிலும் உள்ளம் மகிழ்கிறது.
தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!