ஆடி முன் நின்றே வடிவது நோக்க
வடிவது காட்டும் ஆடி உன் கண்ணில்
படிவதுன் மனத்தின் எண்ணம் பிரதிபலிக்க
பாடியாடி விளையாட்டு காட்டுவதுன்னியல்பு
கூடி நிற்கும் கூட்டத்திற்கு நீ கூத்தாடி
காற்றடிக்க கடல் சீறும் கலமது ஆட
இடியிடிக்க மின்னல்வரும் ஒலி பின்பே
முடிகட்டி மன்னனெனவாகினும் ஆடிக்காட்டும்
பிடி சோற்றுக்கேங்கும் பரதேசியெனினும்
மிக்கதொரு மகிழ்ச்சியென மன்னன் காண
மனம் நோக ஆடியின் முன் பரதேசி கலங்க
வடிவத்தின் வாஞ்சை வாளென வாழ்வில்
கொண்ட கோலம் கண்டவருக்கு பொருத்தது
நீலகண்டன் நிஷ்டையிலே நித்தமவனடி போற்று
வாடி நிற்கும் அடியவர்க்கு அவனருள் கிட்டும்
படிப்படியாய் பாதம் வைக்க முன்னேற்றம்
அடாவடி செய்பவருக்கோ கசையடி வீழும்
ஆண்டவனிருக்க ஆடிவிடாதே நாடிச்செல்
வடிவழகுடன் வளம் பெற வாழ்கவளமுடன்
வள்ளலவன் வண்ணமிது பல வண்ணம்
வறுமையொழிய வணங்கு ஆண்டவன் பாதம்
கருத்துகள்
அருமை. அருமை. நல்ல கவிதையை
அருமை. அருமை. நல்ல கவிதையை வழங்கிய நண்பர் சுஷ்ருவாவிற்கு இதோ என் பாராட்டுக் கவிதை.
அடிமேல் அடியெடுத்து அழகுக் கவிதை அசைந்துவந்து
படிப் படியாய் வளர்ச்சி கண்டு முன்னாடி நிற்கையிலே-மனக்
கண்ணாடியில் நான் காணும் காட்சியெல்லாம் உயிர்பெற்று
தள்ளாடித் தள்ளாடி நடக்கும் குழந்தைபோலே சிரிக்குதையா
அருமையான பதிவு......
அருமையான பதிவு...... வாழ்த்துக்கள் 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
"வாடி நிற்கும் அடியவர்க்கு
"வாடி நிற்கும் அடியவர்க்கு அவனருள் கிட்டும்" என்றே இறைவழி காட்டும் நல்ல கவிதை.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
அருமையான தமிழ் வரிகளைக் கொண்ட
அருமையான தமிழ் வரிகளைக் கொண்ட கவிதை.. நண்பரே......
"படிப்படியாய் பாதம் வைக்க முன்னேற்றம்
அடாவடி செய்பவருக்கோ கசையடி வீழும்
ஆண்டவனிருக்க ஆடிவிடாதே நாடிச்செல்"
என்னைக் கவர்ந்த வரிகள்......
ஆண்டவனிருக்க ஆடிவிடாதே இந்த
ஆண்டவனிருக்க ஆடிவிடாதே
இந்த வார்த்தைப்பிரயோகம் சிறப்பாக இருக்கிறது.
இறைவன் முன் ஆணவம் கொண்டு தன்னிஷ்டத்திற்கு ஆட்டம் போடாதே என்றும்
இறைவன் இருக்க பயந்து விடாதே என்றும்
சிந்தனை தருகிறது.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...








