vanithaselvam1212's படம்

வண்ணக்கிளி போல் பறந்திட ஆசை

வானத்தில் நிலவாய் ஒளிதர ஆசை

கன்னல் தமிழைக் கற்றிட ஆசை

கடலில் மீனாய் நீந்திட ஆசை!

மலர்களைப் போல மணந்தர ஆசை

மலைமேல் மலைமேல் ஏறிட ஆசை

தளர்வோர்க்கென்றும் உதவிட ஆசை

தாய் போல் அன்பைப் பொழிந்திட ஆசை!

பட்டுச்சிறகைத் தொட்டிட ஆசை

பனித்துளியில் முகம் பார்த்திட ஆசை

பட்டாளத்தில் சேர்ந்திட ஆசை

பாரத நாட்டைக் காத்திட ஆசை!

கடமைகள் உணர்ந்து செயல்பட ஆசை

கடின உழைப்பால் வென்றிட ஆசை

மடமையைக் கொளுத்த மனத்தினில் ஆசை

மனிதனாய் வாழ்ந்து புகழ் பெற ஆசை!

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

gnanam02's படம்

உங்கள் ஆசை எல்லாம்


உங்கள் ஆசை எல்லாம் பூர்த்தியடைய வாழ்த்துகள்

dharshi's படம்

நல்லா இருக்கு... தோழி..! கடின


நல்லா இருக்கு... தோழி..!

கடின உழைப்பால் வென்றிட ஆசை
கன்னல் தமிழைக் கற்றிட ஆசை
தளர்வோர்க்கென்றும் உதவிட ஆசை
மடமையைக் கொளுத்த மனத்தினில் ஆசை
மனிதனாய் வாழ்ந்து புகழ் பெற ஆசை!

இவை என்னக்கும் பிடித்த ஆசைகள்........ நன்றி தோழி..!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vanithaselvam1212's படம்

thankyou dharshi


thankyou dharshi


அனிதா,BGDCA


Ragavan's படம்

உங்கள் ஆசை நிறைவடையவே


6

உங்கள் ஆசை நிறைவடையவே கூடாது..
இல்லைன்னா மறுபடியும் ஆசைப்பட மாட்டீங்க...
அதனால திருப்தி படும் அளவுக்கு நிறைவேறட்டும்...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..