அழவென்று ஓரினம் செய்தான்- அதை
அகிலத்தில் ஈழத்து தமிழென்று சொன்னான்
விழவென்று உடல் தந்து விட்டான் -அதில்
விலையற்ற உயிரையும் நிலைகொள்ளச் செய்தான்
குளமென்று வழிந்தோட ரத்தம்- அதை
கொட்டவே வெட்டென்று கொடியோரைச் செய்தான்
களவும்பொய் மொழிபேசி உலகை -அவன்
காலமெல்லாம் நன்கு ஏமாற்ற வைத்தான்
குலையாக கொத்தாக வெட்டி -தமிழ்
கொல்லென்று கோடரி கத்தியும் ஈந்தான்
சிலையென்று உலகோரைக்கண்டு -அவர்
சிந்தை மகிழ்ந்திட சாந்தமும் செய்தான்
நிலையென்ன தமீழீழ மண்ணில் -நாம்
நிமிர்ந்தாலும் உயர்ந்தாலும் நெஞ்சைக்கிழித்து
கொலை யொன்றா பாதகன் செய்தான்- உடல்
கொட்டிக் குவித்துமே வெட்டிக் களித்தான்
மலையென்று மேனி குவிந்து -நாம்
மக்கள் தமிழ் இனம் மாண்டிடும்காட்சி
விலையற்றோர் தொலைகாட்சி காட்ட -புவி
வியந்திடக் காண்கிறோம் விம்முவாரில்லை
தலை போன படமொன்று தாயை -அன்புத்
தங்கை பெண்டாட்டியை தரையிலுதைத்து
இலையென்ற கோரமும் செய்து அவன்
இன்பமுற்றான் அந்த வஞ்சகர்த்ம்மை
கரம் தந்து கையைக் குலுக்கி - அவர்
காதில் ரகசியம் மெள்ளவே பேசி
வரம் ஈந்து வாழெனச் செய்யும் - இந்த
வையகமா எம்மை வாழ்ந்திடசெய்யும்
கொலை தானும்,கண்டவர் அன்றும்,- இன்றும்
கொஞ்சமும் நெஞ்சமி ரங்கிடக் காணோம்
கலைவிழா கண்காட்சியாமோ - அவர்
கண்கள் வியந்திட களியாட்டம்தானோ
உளம்மீது உரம் கொண்டு நீயும் இந்த
உலகத்தை மறுபக்கம் உருட்டித் திருப்பு
அழுதாலும் நீரென்றுஓடி - அது
அசையாதகல்லையும் அரித்திடக் காண்பாய்
பொழுதான போகுது வாரீர் - நம்
பந்தங்கள் சொந்தங்கள் பார்த்திடக் காணீர்
முழுதாக இனம்போகமுன்பு - நாம்
மெழுகாக இரும்பினை உருக்கிடவேணும்
கருத்துகள்
மண்ணை விரும்பிய மக்களை
மண்ணை விரும்பிய
மக்களை விரும்பிய
தமிழ் பிள்ளைகள் சாகவில்லை,,,
நம்மாளுகள் என்றும்
நினைவூட்டுவரே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...







