விடலை பருவங்களில்
அகன்று நின்று
மாலையிட்ட
மங்கை உருவில்
உயிருக்குள்
காதலின் வருகையில்
உறங்கியிருந்த பருவம்
விழித்துக்கொள்ள
ஒவ்வொரு நாழிகையிலும்
வாழ்க்கை இனித்த தருணங்கள்
கண்ணாடியின்றி
இருவிழிகளில்
முகம் பார்த்ததும்
உணவு வெறுத்து
அவளிதழ் உமிழ்நீரில்
பசியாறியதும்
விடியல்வரையிலும்
உறங்காமல் தொடர்ந்த
அமுத இரவுகளும்
பனியில் நனைந்த
மலர் போல்
புன்னகை துளியிட்டு
உறக்கம் கலைத்ததும்
பேச வார்த்தையற்று
நீண்ட மவுனங்களும்
இடம் மறந்து
காட்டிய குறும்புகளில்
வெட்கப்பட்டு சிணுங்கியதும்
வெளியூரு பயணங்களில்
வீதியில் கைகோர்த்து
நடந்ததும்
உறவுகளின் விருந்தோம்பலில்
உண்ணாமல் நேரம்கழித்ததும்
இடைவெளி தருணங்களில்
கைபேசி அடிக்கடித் துடித்தும்
காற்றுக்கும் இடம்மறுத்த
தனிமைகளும்
விடுப்பின் இறுதிநாளில்
கண்ணீரில் நனைத்ததும்
விமானதளத்தில்
ஆயிரம் விழிகள்பார்க்க
நெற்றியில் முத்தமிட்டு
திரவியம் தேட
கடல்கடக்கையில்
உயிருள்ள ஜடத்திற்கு
துணையாக உன்னுடனான
அழகிய தருணங்கள் மட்டும்
கருத்துகள்
அழகிய காதல்
அழகிய காதல் நினைவுகள்
அற்புதமான நேரங்கள்
அருமையான கவிதை நண்பரே
"Direction is more important than speed.
We are so busy looking at our speedometers that we forget the milestone"
அருமை அருமை. தனிமையின் காதல்
அருமை அருமை.
தனிமையின் காதல் வருடல்களை வடித்துவிட்டீர்கள்..
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தாம்பத்தியத்தை மிகவும்
தாம்பத்தியத்தை மிகவும் மென்மையாக சொல்லிருக்கீர்கள். அருமை.
சந்துரு
எதை குறிப்பிட்டு
எதை குறிப்பிட்டு சொல்வது..
மிகவும் நுட்பமான உள்ளுணர்வுகளை அழகாக வார்த்தையால் தொடுகிறீர்கள்...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..











