நம்பாதே நல்லவர் இவரெனவே
பொல்லாதார் பொய் நடப்பறியவே
இல்லாத ஒன்றை இருக்குமெனக் காட்டுவார்
அவர்பால் கவனம் கொள் அறிவுடனே!
ஆராய்ந்து அறிவுக்கண் திற
அதிலொரு சூட்சுமம் ஒழிந்திருக்க
நம்பாதே கண்ணது காட்டும் பொய்
நம்பினார் நயவஞ்சகம் செய்வோரை!
நல்லது எதுவென கேட்பின் அறியாமை
தீயது அறிந்து அது சீர்படுமோ முயற்சி
புரிதல் என்பன புலப்பட வெகு நாட்களாகும்
கைவிடாதார் நம்பிக்கையே துணை!
கேட்டறிந்து வினையறிந்தால் வெற்றியாகும்
பெரியோர் கூற்றறிந்து அறிவுகொள் நன்மையே
சிறியோர் செயல் நிலத்திருந்து நீர்தாவும் தவளை போல்
குணமறிந்து கூடின் குழப்பமில்லை யாவும் நல்லவையே!
கல்விதான் உயர்த்தும் உன்னை உலகிலே
இளமையின் சூது அறிந்து கவனம் சிதாறாதே
வளமையுண்டு எதிர்காலம் வல்லவராக நீ மாற
நல்லவையென்பதை நட்பெனக் கொண்டால் நலமே!
இறைதொழுதல் இனிமை தரும் மனிதனாக
மறையோத மாண்பான நல்செயலமையும்
பொல்லாத கருத்துரு கயமையறிந்து தீதானதெனிலும்
உலகம் உய்விக்கும் செயலது போற்றி மனிதம் செய்!
பெண்ணென பேதம் போற்றுதல் பாவம்
ஆணின் உடலம் வேறுபாடு தவிர வேறென்ன
மனமெனும் உள்ளம் சுமக்கும் சுமையொன்றே
கொடுமையிலும் கொடுமை அறியாதார் இழுச்சொல்!
இனமானம் கொள் அது நம்மினம் தமிழினம்
அறியாத அறிவீலிகள் அறம் மாறினாலும் மறுக்காதே
வெறுக்காதே வீணரென வளமது புத்திக்கு இடு
இனமானம் கொள்வார் ஒற்றுமையுடன் நம் தமிழர்!
வீரமென்பது எங்ஙனம் வேண்டுமெனில் அறிவாயோ
அதுயில்லா கோழையிடம் அதிராமல் சொல்லாடல் செய்
உள்ளத்திலும் உடலிலும் வலுகொண்ட பேரிடம் காட்டு
கோபத்தில் குணமிழக்காமல் சிந்தித்து துனிந்து செயல்படு!
(இது ஒரு சிறு முயற்சியே)
என்றும்: சுஷ்ருவா
கருத்துகள்
கண்ணால் காண்பதும் பொய் காதால்
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரித்தறிவதே மெய்!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
இது சிறு முயற்சியா பெரிய
இது சிறு முயற்சியா
பெரிய முயற்சியே

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...






