பொருளால் வாங்கப்பட்ட
மேடைக் கூத்தாடிகள்
இரவல் புன்னகையுமாய் வீதியல்
மக்கள் ஓட்டை வாங்கி
நாட்டை ஆளவரும்
சுயத் திறனில் நம்பிக்கையற்ற
தொகுதி வேட்பாளர்கள்
கூடி வந்து நின்று
வேடிக்கை பார்த்து விட்டு
பொருளின் தூக்கத்திற்கு ஏற்ப
வாக்களிக்கும் மக்கள்
நாற்காலி பதவிகளுக்காக
ஐந்து வருடங்களுக்கு
ஒருமுறை அரங்கேறும்
அரசியல் நாடகம்
தலைவன் மக்களை சந்திக்காமலே
வெற்றி மாலை சூடி
ஆண்ட தேசம் இது
உடுத்திய உடுதுணிகள் மட்டுமே
தம் சொத்தாக வைத்திருந்த
பெருந்தலைவன் வாழ்ந்த மண்
சற்று சிந்தித்து வாக்களியுங்கள்
வளரும் நம் சந்ததிகளின்
நாளைய நல் விடியலுக்காக
(3 votes)
கருத்துகள்
உடுத்திய உடுதுணிகள்
Submitted by vinoth on செவ்வாய், 22/03/2011 - 3:36pm.
உடுத்திய உடுதுணிகள் மட்டுமே
தம் சொத்தாக வைத்திருந்த
பெருந்தலைவன் வாழ்ந்த மண்
சற்று சிந்தித்து வாக்களியுங்கள்
வளரும் நம் சந்ததிகளின்
நாளைய நல் விடியலுக்காக
எல்லோருக்கும் மிக்ஸி கிரைண்டர் இலவசம் கிடைக்கும் போது எதை யோசிக்க
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
கரையான் புற்றில் பாம்பு குடி
Submitted by rajudranjit on புத, 23/03/2011 - 3:02am.
கரையான் புற்றில் பாம்பு குடி புகுந்தது போல் தான் இந்த் அரசியல்வாதிகள், கோபப்பட்டு வருவது ஒன்றுமில்லை நண்பரே! ஊருடன் ஒத்து வாழ் இல்லையேல் வேறுடன் கெடும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.







