நிழலைக் கொண்டு போர்த்தி
வீட்டு முற்றத்தில் ஒய்யாரமாய்
காலங்கள் கடந்து நிற்கிறது
அப்பா நட்ட மரம்
வளர்ந்த பிள்ளைகளின்
சொத்து பாகப் பிரிவு
மண்ணும் பொன்னும் பங்கிட்டபின்
மீதச் சொத்தாக மரம்
எல்லைக் கோட்டில் நிக்குது
நாளைக்கு வீடு வைக்கையில
இடைஞ்சல் வெட்டி போடுங்க
இடைநிலை காரர்களில் ஒருவர்
உங்க அப்பாவின் ஆத்மா
இந்த மரத்தில உறங்குது
அத வெட்டாதிங்க வெட்டாதிங்க
கண்ணீர்மல்க பெருத்த குரலுடன்
ஓடி வந்தாள் அம்மா
கடன் சுமை தாங்காமல்
மரத்தில தூக்குபோட்ட அப்பாவை
சற்றென நினைவு படுத்தியது
அம்மாவின் அந்த அழுகைசத்தம்
தொட்டில் கட்டி தாலாட்டியதும்
ஊஞ்சல் கட்டி விளையாடிததையும்
கதை கதையாக புலம்பினாள்
பெற்ற பிள்ளைகளிடம்
நான் செத்தபிறகு வெட்டுங்க
மரத்தையல்ல கிளைகளைமட்டும்
என் சிதையை எரிக்க
மன்றாடினாள் அந்த தாய்
இந்த மரத்தில் உறங்குகிறது
அப்பாவின் ஆத்மா என்ற
அம்மாவின் ஆழமான நம்பிக்கை
கனிந்தது பிள்ளை நெஞ்சம்
அப்பாவின் ஆத்மாவையும்
அம்மாவின் கடந்த நினைவுகளையும்
சுமந்து நிற்கும் உயிருள்ளமரத்தை
கரங்களால் தொட்டு தடவ
கண்ணீர்கசிந்தது பிள்ளை விழிகளில்
உயிரற்ற பொன்னும் பொருளையும்
பங்கிட்டு மனிதர்கள் பிரிக்கையில்
உயிருள்ள உறவை ஒருபோதும்
பிரிக்க இயலாது உணர்த்துகிறது
உயர்ந்து நிற்கும் மரம்
(3 votes)
கருத்துகள்
அற்புதம்.. உயிருள்ள மனிதர்கள்
Submitted by vinoth on ஞாயிறு, 24/04/2011 - 12:41pm.
அற்புதம்..
உயிருள்ள மனிதர்கள் உயிரில்லா பொருட்களுக்காய் பிரிந்துவிட ....
உயிருள்ள உறவை ஒருபோதும்
பிரிக்க இயலாது உணர்த்துகிறது
உயர்ந்து நிற்கும் மரம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இயற்கை எமக்கு வழிகாட்டி...
Submitted by yarlpavanan on திங்கள், 25/04/2011 - 1:57pm.
இயற்கை எமக்கு வழிகாட்டி...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil










