pakee's படம்

அன்புள்ள அப்பா...

அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள்
ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள்

உருகும் உன்னத மெழுகு நீங்கள்
தேயும் ஒப்பற்ற சந்தனம் நீங்கள்

தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் நீங்கள்
திறமைகளை பயிற்று வித்த ஆசான் நீங்கள்

சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள்
சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள்

ஒய்வறியாது உழைக்கும் செம்மல் நீங்கள்
ஒரு நாளும் கவலை கொள்ளாதவர் நீங்கள்

கடமையைக் கச்சிதமாய் முடித்தவர் நீங்கள்
மடமையை முழுமூச்சாய் எதிர்த்தவர் நீங்கள்

பகுத்தறிவை எனக்கு கற்பித்தவர் நீங்கள்
மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கை தந்தவர் நீங்கள்

எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்றவர் நீங்கள்
எவருக்கும் அஞ்சாமல் வாழ்பவர் நீங்கள்

வாழ்வியல் கருத்துக்களை வழங்கியவர் நீங்கள்
வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுபவர் நீங்கள்

உலகிற்கு வரக் காரணமானவர் நீங்கள்
உலக அறிவை உணர்த்தியவர் நீங்கள்

"அப்பா" உறவிற்கு இலக்கணம் வகுத்தவர் நீங்கள்
அன்பை பொழிவதில் இமயத்திற்கு நிகர் நீங்கள்...

5
Your rating: None Average: 5 (5 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

அழகான சொல்களால் அப்பாவைப்


7

அழகான சொல்களால்
அப்பாவைப் பற்றி
அடுக்கி உள்ளீர்கள்...
அப்பா இன்றி
நானுமில்லை...
உங்கள்
பாவண்ணம் நல்லாயிருக்கு!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Tamil's படம்

நண்பர்களே தயவு செய்து வேறு


1

நண்பர்களே

தயவு செய்து வேறு தளங்களில் இருந்து பதிவுகளை இங்கே பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அது மிக முக்கிய பதிவாக இருப்பின் அவ்வாறு போட வேண்டிய கட்டாயத்தில் தயவு செய்து பதிவின் நிஜ முகவரியையும் எழுதியவர் பெயரையும் பதிவில் குறிப்பிட்டு அந்தந்த தளத்திற்குரிய மரியாதையையும் கொடுக்க வேண்டுகிறோம். மேலும் எழுத்தாளறின் அனுமதி பெற்றே பதிவை வெளியிட வேண்டுகிறோம்.

தளம் சிறப்பாக செயல்பட தங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றிகள்


tamilnanbargal.com


saravanamuthu's படம்

(No subject)


4

Clap Clap Clap

rajudranjit's படம்

நண்பரே! தமிழ் தளம்


3

நண்பரே! தமிழ் தளம் கூறியிருப்பது உண்மையா? அப்படியென்றால் யார் இதக் கவிதையை எழுதியது என்பதை நமது தள நண்பர்கள் அறிந்து கொள்ள‌ தெரிவிப்பீராக!

கவிதை நன்றாகவுள்ளது!

pakee's படம்

eraeravi அவர்கள் எழுதிய கவிதை


10

eraeravi அவர்கள் எழுதிய கவிதை

http://eluthu.com/kavithai/13365.html


இன்னும் என் இதயம் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது
காதலிப்பதற்காக அல்ல, சாதிப்பதற்காக...

www.PakeeCreation.Blogspot.Com