iamnaagaraa's படம்

யந்திர இதயத்தின் பின்புலம்
மந்திர இருதயத் துள்ளொரு
தந்திர ரகசிய மெய்வழி
உன்னதக் களஞ்சியம் உய்ந்திடு.
அன்பது பகிரங் கமாக‌
நெஞ்சது பகிரத் திறப்பாய்.
இங்கது அங்கது என்பார்
உன்னதக் களஞ்சியம் எங்கோ?!
உங்கது நின்னுள் அன்பே!
எப்படி உண்மை மறந்தாய்?!
யந்திர மந்திரத் தந்திரச்
செப்படி வித்தை எதற்கோ?!
அன்பது நின்னியல் அன்றோ!
முப்படி மேலே ஏறு!(மூலாதாரம், சுவாதிட்டானம், மணீபூரக சக்கரங்கள்)
முப்படிக் கீழே தாழு!(சஹஸ்ராரம், ஆக்கினை, விசுத்தி சக்கரங்கள்)
மெய்ந்நடு மார்புள் சேரு!(அனாகத சக்கரம்)
அன்பதன் பாய்ச்சல் பாரு!
பொங்குதே மூச்சாஞ் சாறு!
அன்பது பருகியே வாழு!
அன்பது பகிரவே தேரு!
நெஞ்சகம் இருதயத் தேகு
அன்பது பகிரங்க மாக‌
சற்குரு பகருமோர் வாக்கு
புந்தியில் பரவநன் நோக்கு!
உந்தியில் பரவசம் ஆச்சு!

6.33333
Your rating: None Average: 6.3 (3 votes)

கருத்துகள்

vinoth's படம்

(No subject)


6

Clap Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sumathy.a's படம்

வினோத் உனக்கு ஏதாவது


10

வினோத் உனக்கு ஏதாவது புரிந்துதான் கை தட்டுறாயா? அல்லது ....... எனக்கு ஒன்றும் புரியல. உனக்கு புரிந்தால் சுருக்கமாக கருத்து சொல்லு

sumathy.a's படம்

வினோத் உனக்கு ஏதாவது


10

வினோத் உனக்கு ஏதாவது புரிந்துதான் கை தட்டுறாயா? அல்லது ....... எனக்கு ஒன்றும் புரியல. உனக்கு புரிந்தால் சுருக்கமாக கருத்து சொல்லு

infentarokiaraj's படம்

எனக்கும் ஒன்னுமே


எனக்கும் ஒன்னுமே புரியல.அர்த்தம் சொல்லுங்கள் நண்பரே...

நன்றி...

kumaran's படம்

(No subject)


3

:*


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.