amazysara's படம்

அடடா எது எடுத்தாலும் அழகாய் உருக்குதே.....!!

நீ
முகம் காட்டாமல்
முக்காடிட்டு சென்று விட்டாயாம்...?
பகலெல்லாம் காட்டமாய்
சுட்டெரிக்கிறது
சூரியன் எல்லாரையும்...!!
****************************************
எழுதப்படாமல் வெறுமையாக நகர்கிறது
அடுத்த நாளை நோக்கி
என் டைரி குறிப்புகள்
உன்னை காணாத நாட்களில்...?
முத்தமிட்ட நாட் குறிப்போ
நுரைத்து தள்ளுகிறது பக்கமெல்லாம்
கவிதையாக...!!
*****************************************
"எது எடுத்தாலும் பத்து ரூபா..."
என தெருவில் கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தவன்
உன்னை பார்த்ததும் இப்படி நினைத்தான்...
"அடடா எது எடுத்தாலும்
அழகாய் உருக்குதே.....!!"என்று.
*********************************************
உன் தோழியாகி
பிரபலமாக
துடிக்குது ஒரு பெண்கள் கூட்டம்...

உன் தோழனாகி
காதல் சொல்ல
நேரம் தேடுகிறது ஒரு ஆண்கள் கூட்டம்.....

இதில் என்னை மட்டும் விதிவிலக்காக
இவர்களை தேர்வு செய்யும்
தோழனாக
பக்கத்திலேயே வைத்து கொண்டாய்..!

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

kadhar's படம்

அருமை


அருமை Clap

Lakshmi2010's படம்

அருமையான கவிதை..... ""எது


அருமையான கவிதை.....
""எது எடுத்தாலும் பத்து ரூபா..."
என தெருவில் கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தவன்
உன்னை பார்த்ததும் இப்படி நினைத்தான்...
"அடடா எது எடுத்தாலும்
அழகாய் உருக்குதே.....!!"என்று."

இப்படியும் இருக்குமோ.......

amazysara's படம்

உங்கள் கருத்துக்கு நன்றி


உங்கள் கருத்துக்கு நன்றி தோழி...மேலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
.வாழ்க வளமுடன்.

kirikasan's படம்

கவிதையை ரசித்தேன். அருமை!


கவிதையை ரசித்தேன். அருமை! Clap

amazysara's படம்

உங்கள் கருத்துக்கு நன்றி


உங்கள் கருத்துக்கு நன்றி ...மேலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

அருமை...


அருமை...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..