nksonline's படம்

அக்னிக் குஞ்சு !
(குழந்தை தொழிலாளர் கொடுமையை அஞ்சி)
வேதாந்த கவியோகி நாகசுந்தரம்

ஒருநாள் மாலைப் பொழுது !
விளக்கில் திரி போட்டு விளக்கேற்ற
தீப்பெட்டி எடுத்தேன் !
தீப்பெட்டியை உரசி
அன்னையின் சன்னிதியில்
விளக்கேற்றும்போது
ஸ்லோகம் சொல்லவேண்டுமல்லவா ?
அன்னையின் தோத்திரம்
அழகாகக்கூறி ஒளிஏற்றினேன் !
அன்னையின் கருணையால்
அப்போது சிந்தனையில்
அப்பெட்டி தயாரிக்கும்
அவ்விடம் நினைவுக்கு வர
அந்நேரம் இக்கவிதை
அவனிக்கு தந்திட்டேன் !
குழந்தை தொழிலாளர்
எஙகேயும் வேண்டாம் !
தீப்பெட்டி செய்கின்ற
கம்பெனி பலவற்றில்
குழந்தைகள் பணியமர்த்தி
குற்றம் புரிகின்றார் !
ஓ ! சிறுவனே ! சிறுமியே !
நீ பள்ளிக்கு செல்லும் வயதில்
பட்டினிக்கு பயந்து
பெட்டியை தொடுகின்றாய் !
நாங்கள் உரசும் ஒவ்வொரு குச்சியிலும்
உங்களின் ரத்தம் உறிஞ்சத்தான் படுகிறது!
எங்கள் இல்லத்தில் ஒளியேற்ற
நீங்கள் உங்கள் எதிர்காலத்தை
இருளாக்க வேண்டுமா?
தீக்குச்சியை
உரசினால் ஒளி வருகிறது !
அன்னையின் தரிசனம் கிடைக்க
அழகாகக் கிடைக்கிறது !
ஆனால் உன் எதிர்காலம்
தரிசாக அல்லவா கிடக்கிறது !
அரசாங்க உரசலில் கூட
உந்தன் உரசும் தொழில்
உடைபடவில்லையே !
பரிசாக உனக்கு என்ன தருவேன் !
பட்டம் படித்து பெரியவராய் ஆவதுதான்
திட்டம் என்று நீ
தீர்மானமாய் நினைத்தாலும்
ஏழ்மையின் வாட்டம் இருப்பதனால்
பாழும் மனிதர் அதை
பாழாக்கிப் போட்டனரே !
அச்சுத் தொழிலுக்கும்
தீக்குச்சித் தொழிலுக்கும்
அழகாய் உனை அமர்த்தி
கூழுக்கே வாழ்க்கையென்று
குறுகிட வைத்தனரே !
உன் வீட்டிலே அடுப்பெரிய
உழைக்கின்றாய் மருந்திடையில் !
அக்கருத்து தெரிந்திடாமல்
அப்பனோ அந்த மருந்திடையில் !
இரண்டு மருந்திற்கும்
இடையிலே நீ நொந்து
ஏங்கித் தவிக்கையிலும்
எங்கள் பண்டிகையில்
குத்து விளக்கேற்ற
கொடுக்கின்றாய் குச்சிகளை !
எங்கள்
விழாவில் விளக்கேற்ற
வேண்டுமுந்தன் உத்தியோகம் !
எங்கள் மனிதர்கள்
இங்கே புகைபிடிக்க
உங்கள் உத்தியோகம்
உதவி செய்யுதப்பா !
உதறி விடு உன் உத்தியோகம் !
எங்கள் இல்லங்கள்
இருளாகிப்போனாலும்
உன் உள்ளம் ஒளிபெறவே
உதறிவிடு உன் உத்தியோகம் !
ஆடம்பரமாக
ஆயிரம் பேர் கூடும்
அழகான விழாவினிலே
குத்துவிளக்கேற்ற
குச்சி இல்லையென்று
காட்டம் கொண்டாலும்
பட்டம் பெற நாங்கள்
பள்ளிக்கு செல்வோம் என்று
போக்கிவிடு உன் உத்தியோகம் !
படிப்பை உதறிவிட்டு
பெட்டியிடம் உறவெதற்கு?
சுட்டிக் குழந்தைகளே
சுறுசுறுப்பாய் எழுந்திடுங்கள் !
பள்ளியிலே சென்றமர்ந்து
பாடத்தினை படித்திடுங்கள் !
பட்டினி போட மாட்டாள் எங்கள்
பராசக்தி துணைவருவாள் !
ஏனென்றால்
இவ்வளவு நாளாக
அவள் சன்னிதியில்
ஏற்றிய குச்சியெல்லாம்
உந்தன் அக்னிக் குஞ்சுதானே !
நன்றி மறக்க மாட்டாள் !
நல்லவளை நீ நம்பி
நாளை பள்ளி சென்று விடு !
அக்னிக் குஞ்சு உன்னை நான்
அங்கேதான் காணவேண்டும் !
முதலாளிப் பெரியோரே
மனம் விட்டு கேட்கின்றேன் !
பஞ்சு மெத்தையிலே
பகட்டாக வாழ்வதற்கு
பிஞ்சு உள்ளங்களை
பணியமர்த்திப் பார்க்காதீர் !
குடிகாரத் தந்தைகளை
குச்சி செய்ய வைத்துவிட்டு
படிக்கின்ற பிள்ளைகளை
பள்ளிக்கு அனுப்புங்கள் !
நாளைய பாரதம் அந்த
நாயகர்கள் உணர்ந்திடுங்கள் !
உணர்ந்திடவே இக்கவிதை !
உண்மையாக ஏற்றிடுவீர் !
ஓம்சக்தி !

6.625
Your rating: None Average: 6.6 (8 votes)

கருத்துகள்

dharshan85's படம்

ரொம்ப சூப்பர் தோழா


8

ரொம்ப சூப்பர் தோழா
Clap Clap Clap Clap Clap Clap


Dharshan. S
Your Friend


vinoth's படம்

(No subject)


6

Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


srinivasan.K's படம்

நல்ல கருத்து!


5

நல்ல கருத்து!


பாமரன்


yarlpavanan's படம்

சின்னஞ் சிறிசுகள்


10

சின்னஞ் சிறிசுகள் படிக்க
ஊக்கம் கொடுக்க வேண்டியவர்கள்
அவர்களைப் பணிக்கு அனுப்பினால்
நாடு எப்படி உருப்படும்?


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

அருமை


4

அருமை

rlalitha's படம்

(No subject)


6

Clap Clap Clap


என்றென்றும் நட்புடன்,
ரா.லலிதா குமாரி


Ponvannan's படம்

குழந்தைகளின் எதிர்காலத்தை


7

குழந்தைகளின் எதிர்காலத்தை வீணடிக்கும் கயவர் கூட்டத்தின் செயலை வெளிக்கொண்டு வந்த கவிதை. மிகவும் நன்று.