rajudranjit's படம்

அன்பின் உருவமே பண்பின் செழுமையே
ஆனைமுகத்தானே கந்தனுக்கு மூத்தோனே!

இல்லம் வளம் பெறவே தொழுதிடுவோம்
ஈசன் தலைமகனை போற்றிடுவோம்!

உலகின் முதல்வனை உத்தம புதல்வனை
ஊர்த்துவ தாண்டவம் ஆடுவோன் மகனை...........

எல்லாம் ஆன அற்புதத் தலைவனை
ஏந்தியே வணங்குவோம் சிரம்தாழ்த்தியே!

ஐயங்களை போக்கும் ஐங்கர மூர்த்தியே
ஒற்றைக் கொம்பால் காவியம் படைத்த கணபதியே!

ஓமெனும் ஓங்காரப் பிரணவமூர்த்தியே
ஒளவைக்கு தமிழ் கொடுத்த ஆண்டவனே!

அஃதுபோல் அகிலமனைத்துளரும் சிறப்புற்றிடவே
கணபதியே காத்திடுவாய் காலமெலாம் உனைத்தொழுதிடவே!

என்றும்:சுஷ்ருவா

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

தும்பிக்கையானை நம்பிக்கையுடன்


7

தும்பிக்கையானை
நம்பிக்கையுடன் வழிபட்டால்
இம்மையிலும் மறுமையிலும்
வெற்றிகள் வந்து சேருமே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

ஆம் உண்மை அன்பரே!


ஆம் உண்மை அன்பரே!

Ponvannan's படம்

தும்பிக்கையானை வழிபட்டால்


8

தும்பிக்கையானை வழிபட்டால் மற்ற எல்லா தெய்வ‌ங்களையும் வணங்கிய பலன் கிட்டும். ஏனெனில் நாம் கணபதியை வணங்காமல் வேறு எந்த தெய்வத்தை வணங்க முடியாது. பிள்ளையார் சுழி போட்டுத்தானே எல்லாவற்றையும் ஆரம்பிக்கிறோம்.
கணபதி உங்களுக்கு 'அ' முதல் 'ஃ' வரை துணையிருப்பான். வாழ்க, வளர்க என வாழ்த்துகிறேன்.

rajudranjit's படம்

நன்றி ஐயா!


நன்றி ஐயா!

vinoth's படம்

என்ன திடீரென ஆன்மிகம் கவிதை


5

என்ன திடீரென ஆன்மிகம் Hmmmm
கவிதை அருமை.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

ஒன்றும் அப்படி விசேஷம் இல்லை,


ஒன்றும் அப்படி விசேஷம் இல்லை, மனதில் தோன்றியது எழுதிவிட்டேன்! நன்றி நண்பரே!