Siru Kathaigal
ரமேஷ் அன்றைய பரீட்சைகள் முடிந்து பள்ளியை விட்டு வந்ததும்,”அம்மா நாளையிலிருந்து சரியான போர்மா, என் ஃப்ரெண்ட் வினோத் பத்தாம் வகுப்புக்கு டியூஷன் சேர்ந்திருக்கான், நான் என்ன செய்யறது” என அம்மா மேகலாவிடம் கேட்டான்.
“ஏன் கண்ணு, நீதான் எல்லாத்திலேயும் மொத ரேங்க் வர்றீயே, எதுக்குப்பா டியூஷன், பக்கத்து வீட்டு மோகனா அக்கா அவளோட பத்தாப்பு புஸ்தகத்த எல்லாம் தரேன்னு சொல்லுச்சு, நீ அத படிச்சுப்பாரு, புரியாதத ஸ்கூல்ல தொறந்ததும் கேட்டுக்கலாம்” என்றாள்.
“ம்ம் சரிம்மா” என்ற சொல்லி விட்டு அம்மாவை ஒரு சுற்று சுற்றிவிட்டு ஓடினான் தன் கணவனை போல சுவர்களில் விளம்பர படம் வரையப்போய் ஐந்துக்கும் பத்துக்கும் கஷ்டப்படாமல் எப்படியாவது தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என தீராத ஆசை அவளுக்கு.
தன் மகனையே பார்த்துக்கொண்டிருந்த மேகலாவின் கவனம் தன் கணவன் மாரிமுத்துவின் குரலில் கலைந்தது. “என்ன இப்பம்தான் உன் மகனை மொத தடவையா பார்க்கற மாதிரி பார்த்துட்டிருக்க, சாப்பாடு வை” என்றவாறே வந்து உட்கார்ந்தான்!
“ஸ்கூல் முடிஞ்சிடுச்சு இல்ல இந்த பயலுக்கு, நாளையிலேர்ந்து இவனையும் என்னோட கூட்டிட்டு போலாம்னு இருக்கேன், இன்னொருத்தன வச்சு தொழில் கத்துக்கொடுத்து வேலை வாங்கறத விட இந்த பயல இப்பவே சேர்த்துகிட்டா தன்னால தொழில கத்துப்பான்” என்றான் மேகலாவிடம் மாரிமுத்து.
“ஏன்யா? அவன் பத்தாப்பு முடிச்சிடட்டுமே... பின்னாடி … “என இழுத்தாள் மேகலா
“நீ வேற புரியாம பேசற, அவன் இப்பவே நல்லா படிக்கறான், இன்னும் பத்தாப்புல நல்ல மார்க் எடுத்தா, நிறைய செலவு பண்ணி மேக்கொண்டு படிக்கவைக்கனும், இவனுக்கு அடுத்த ரெண்டு புள்ளைகள எப்படி காப்பாத்தறதாம், நானெல்லாம் அஞ்சாம் வகுப்புக்கு மேல படிக்கலே, எல்லாம் போதும் அவன் படிச்சது, நாளைக்கு கூட்டிட்டு போகத்தான் போறேன்”. என முடித்தான்.
“நல்லா படிக்க பயல இப்படி கெடுக்கறீங்க, அவனாவது ஒரு நல்ல படிப்பை படிச்சி வேலைக்கு போவணும்னு இருந்தேன், எப்படியோ போங்க “என கண்ணைக் கசக்கிக்கொண்டு உள்ளே சென்றாள் மேகலா
அன்று காலையில அப்பாவின் சைக்கிளை துடைத்து கொண்டிருந்த ரமேஷை மாரிமுத்து” தம்பி என் கூட வர்றியா ஒத்தாசைக்கு “என கேட்டான் உடனே ரமேஷும் “ சரிப்பா , வர்றேன், எனக்கும் போர் அடிக்குது, இந்த ஒரு மாசம் உங்க கூட தான், ஸ்கூல் திறக்கற வரைக்கும்” என்றவனை பார்க்க முடியாமல் உள்ளே போனாள் மேகலா.
இருவரும் அலுவலகத்தில் நுழைந்ததும், மாரிமுத்துவின் முதலாளி “ஏன் மாரிமுத்து, இது உன் மகனா, சின்ன புள்ளையா இருக்கானே, எப்பிடி இவன வைச்சி வேலை செய்வ, அரசாங்க ஆர்டர் வேற , இத நல்லா செஞ்சாதான் அடுத்த எல்லா ஆர்டரும் நமக்கு வரும்” , என்றார்.
“இல்லய்யா, நானும் இவனை விட சின்ன புள்ளையா இருக்கப்பவே இந்த தொழிலுக்கு வந்தவன், இப்ப கத்து கொடுத்தா தான் பின்னாடி நல்லா வர முடியும், வீட்டில இவனுக்கு அப்புறம் ரெண்டு புள்ளைங்கள காப்பாத்தனும் இல்லீங்கய்யா, படிச்சது வரை போதும்னு தான் இங்க கூட்டியாந்துட்டேன், கண்டிப்பா நல்லா செஞ்சிடறோம்” என்ற சொல்லி முடித்தான்.
ரமேஷிற்கு இப்பொழுது தான் தன் நிலைமை மெதுவாகப் புரிந்தது. அழுகை கண்களை முட்டி கொண்டு வந்தாலும், தன் தம்பி , தங்கையின் நிலை பார்த்து தன் அப்பாவுடன் பெயிண்ட்களை எடுத்துக்கொண்டு நடந்தான்.
விளம்பர பேனரில் எழுத வேண்டிய வாசகம் என ரமேஷின் கையில் ஒரு பேப்பரைக் கொடுத்தார் முதலாளி.
வார்த்தைகளைப் பார்த்த ரமேஷிற்கு அழவேண்டும் போலிருந்த்து அப்பாவிடம் பேப்பரைக் கொடுத்து விட்டு மெல்ல சைக்கிளை நோக்கி நடந்தான். ரமேஷின் பார்வையினை உற்று நோக்கிய மாரிமுத்து தன் கையில் இருந்த பேப்பரில் உள்ள வாசகம் என்னவென்று பார்த்தான்.
ஏதோ குற்றம் செய்தவனைப் போல ரமேஷைப் பார்த்தான். ஏதும் செய்ய முடியாத ரமேஷும் சுவற்றில் பென்சிலால் எழுத தொடங்கினான்.
“பள்ளிக்குச் செல்லும் வயதில் குழந்தைகளைப் பணிக்கு அனுப்பாதே”,
தன் ரெண்டாவது கருவை சுமந்து கொண்டிருந்த ப்ரியா அலைபேசியில் நேரத்தை பார்த்தபோது, இரவு எட்டை தாண்டி பதினோரு நிமிடங்கள் ஆகியிருந்தது. மருத்துவர் அறிவுரைபடி ஏழு மணிக்கு முன்பே இரவு உணவை முடித்து, அதன் பின் உட்கொள்ள வேண்டிய மருந்துக்களையும் சாப்பிட்டாகிவிட்டது. கவலையற்று களங்கமில்லாமல் உறங்கும் மூத்த மகன் நிதினை பொங்கி வழியும் தாய்மையுடன் சற்று நேரம் பார்த்தவள், தன் கண்ணே பட்டுவிடப்போகிறது என்ற எண்ணம் தோன்ற சட்டென்று தலையை குலுக்கிக் கொண்டாள். போர்வையை சரி செய்துவிட்டு, கதவை சிறிதளவு சாத்திவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
தாத்தீ
எனக்கு ஒரு சுருட்டு புகைக்க வேண்டும் என்ற பேராவல் வந்ததை கேட்டால் சிரிப்பீர்கள்.
தாத்தீ க்கு இன்று முதலாமாண்டு நினைவு நாள். முழுஆண்டு லீவில் தான் தாத்தி இறந்து போனாள். அப்பா சித்தப்பா கல்யாணி அத்தை பிள்ளைகள் குட்டிகள் என்று ஒரு பெரிய கூட்டமெ வீட்டில் ஆஜர் . தாத்திக்கு பிடித்ததெல்லாம் படை த்திருந்தார்கள். ஒன்றே ஒன்றை தவிர ...
விருந்தோம்பல்
நான் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, சரியாக சென்னை எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்குள் வந்துகொண்டிருந்தது. ரயிலில் ஏறி என் சீட்டில் ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டேன். நிதானமாக பெய்து கொண்டிருந்த மழை ரயிலின் கூரையில் சீராக தாளம் போட்டுக்கொண்டிருந்தது.
வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். மனது, மாலை நடந்த பள்ளியின் தமிழ் மன்றத்தின் ஆண்டு விழாவை நினைத்து அசை போட்டுக்கொண்டிருந்தது. அந்தக் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறையாவது என்னை அழைத்துவிடுவார்கள். இந்த முறை, என்னை விழாவிற்குத் தலைமையேற்று வள்ளுவரின் விருந்தோம்பலைப் பற்றி சிறப்புரை ஆற்றும்படி கேட்டிருந்தார்கள்.
அன்னகி காலைல 8 மணி இருக்கும் அம்பத்தூர் பஸ் ஸ்டாப் பக்கதுல இருந்த சந்துல 8 ஆட்டோங்க வரிசையா நின்னுகிட்டு இருந்துச்சு .ரோட்டில் செல்பவர்கள் ஆட்டோக்களை கடந்து செல்லும்போது எங்க சார் போகணும் என்று கேட்ட படி நானும் வேறு சில ஆடோகாரர்களும் பேசி கொண்டு இருந்தோம் .ஒரு 40 வயது மதிக்க ஒருவர் தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் எங்களை நோக்கி வந்தார் . ஆட்டோவா சார் எங்க சார் போகணும் என்று அவரை பார்த்து கேட்டேன் . இல்லபா இந்த addressku எப்டி போகணும் என்று கேட்டு ஒரு பத்திரிகையை நீட்டினார் .
ஒரு திறந்தவெளி உணவகம்....
விளக்குகள் எரியாம ஒவ்வொரு மேசையிலேயும் மெழுகுவர்த்தி மட்டும் எரிஞ்சிட்டு இருக்கு..
ஸ்வேதா ஒரு சின்ன டென்ஷன்னோட, கைகடிகாரத்த பார்த்திட்டே , பல்லால கீழ் உதட்ட கடிச்சிட்டே ஒரு நம்பர்க்கு போன் பண்றா. போன்பண்ணிட்டு மொபைல்ல காதோரமா வச்சா..
2 ரிங்குக்கு அப்புறம் ஒரு ஆண் குரல் ...
பிரதிப் : (போன் எடுத்த உடனே) ஸாரி...ஸாரி...
ஸ்வேதா : எவ்வளவு நேரம் வெயிட் பண்றது...
முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.
ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள் வேலைக்காரர்கள் இருவருடன் புறப்பட்டான்.
“இப்ப இன்னான்ற? வந்ததுலேந்து பாக்கறேன், சொம்மா கூவிக்கினே இருக்க?”
“எங்க போன? அத சொல்லேன் மொதல்ல.”
“சொல்லாங்காட்டி இன்னா செய்வ? நானே அல்லாடிட்டு வந்துருக்கேன். சொம்மா நொய் நொய்னு நொச்சுக்கினு. போ அப்பால. சொல்றேன்ல, போய்யா அப்பால.” கண்ணை கசக்கிக்கொண்டே அடுப்பை ஊதி ஊதி சோறு பொங்கிக்கொண்டிருந்த ராமாயி எரிந்து விழுந்ததில் தனபாலன் முனகிக்கொண்டே மூலையில் சென்று முடங்கிக்கொண்டான்.
“மல்..ல்..லி..ஈ..’
... .... ...
யெடீ.. மல்லி..!
“ஓ....... என்ன.. ... ஐயா இப்படி சவுண்டு உடுரீக..? “
ஈர கையை முந்தானை தலைப்பில் துடைத்து கொண்டே பாலனின் மனைவி மல்லிகா தன் குடிசைவீட்டின் பின்பக்கத்தில் இருந்து வருகிறாள்.
“என் ராசாக்கு என்னாச்சு.. குளிக்காம வயகாட்டுமண்னோட வந்து இருக்கு.... குளத்துலே தண்ணீ வத்தி போச்சாக்கும்..?”
பாலன் கோபமாக பேசும்போது மல்லிகா இப்படிதான் சிணுங்கி பேசி அடக்கி விடுவாள்.
திருக்குறள் கதை (423) மெய்ப்பொருள் காண்ப தறிவு
இரண்டு நாளாகவே அந்த வெள்ளைப் பசு சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்தது. மனைவி சொன்னாள் " என்னங்க ! பக்கத்து தெருவுல உங்க நண்பர் மாணிக்கம் வீட்டிலயும் இப்படித்தான் இருந்ததாம். அவருகிட்ட போய் கேட்டுட்டு வாங்க ! என்றார்.
மாணிக்கத்திடம் போய் கேட்டேன். " சார் ! உங்க பசு இரண்டு நாளா சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்ததா ?
ஆமாம் !
நீங்க என்ன செஞ்சீங்க ?
அரை லிட்டர் வேப்பெண்ணையை எடுத்து, லேசா சுட வச்சு வாயிலே ஊத்தினேன்.