ஹைதராபாத்: 15 வயதே ஆகும் மாணவனைக் காதலித்து அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கல்யாணமும் செய்து கொண்ட 22 வயது ஆசிரியையால் ஆந்திராவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோமட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ரம்யா (22). அனுமகொண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன் நாகேசுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. நாளாக நாளாக இது காதலாக மாறியது.
நாகேஷின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், 15 வயதே ஆன எங்களது மகன் நாகேஷை ஆசிரியை ரம்யா மயக்கி கெடுத்துவிட்டார். நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை நஞ்சை விதைத்துள்ளார். மைனர் வயதுடைய என் மகனை கடத்தி திருமணம் செய்த ரம்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நாகேஷை அவனது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் நான் ரம்யாவுடன்தான் வாழ்வேன். எங்களை பிரித்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினான். இருந்தாலும் விடாமல் காரில் ஏற்றி அவனை கூட்டிக் கொண்டு போய் விட்டனர் பெற்றோர்.
சமீபத்தில் வந்த செய்தி, எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
இரு வீட்டிலும் எதிர்ப்புக்குப் பின் இருவரும் ஊரை விட்டு ஓடி வேறு ஊரில் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை ஒரு மன இயல் ரீதியாக ஆராய்வோம்.
பதினைந்து வயது சிறுவன், முடிவெடுக்க முடியாத வயது. பெரும்பாலும் பருவ உணர்ச்சிகளால் உந்தப் படும் மனது. பார்ப்பவர்கள் எல்லாம் தனது மனைவியாக நினைக்கும் வயது. சொல்லப் போனால் எந்தப் பெண் வேண்டுமானாலும் இந்த நிலையை உபயோகித்துக் கொள்ளக்கூடிய பற்றிக்கொள்ளக்கூடிய "பஞ்சு"
இப்பொழுது நெருப்பைப் பார்ப்போம்.
கல்வி கற்றுத்தர வந்தவர்,
கற்றுக் கொடுத்தது முறையற்ற "காதல்". இருபத்திரண்டு வயதில் ஓரளவுக்கு மனது பண்பட்டு இருக்க வேண்டும். இவரது உந்துதல் குடும்ப சூழ்நிலையாக இருக்க வேண்டும். திருமணம் என்பது கேள்விக் குறியாக, தன் நிலைமை குறித்த சந்தேகம் இருந்திருக்கவேண்டும்.
இப்பொழுது ஆண்துணை, தான் ஆளுமை செய்ய ஒரு ஆண் (சிறுவன்).
அல்லது இந்த வயதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஒரு பாதுகாப்பு வடிகால் என்று நினைத்திருக்கக் கூடும்.
இதையே ஒரு ஆசிரியன் மாணவியை கூட்டிக் கொண்டு ஓடி திருமணம் செய்திருந்தால் சட்டம் என்ன செய்திருக்கும், ஆசிரியன் கம்பி எண்ணிக் கொண்டிருப்பான்.
ஆணிற்கு பெண் சரி நிகர் சமானம் என்று எவன் சொன்னது. போங்கப்பு
கருத்துகள்
கல்வி கற்றுக்கொடுக்கும்
கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்குக் கண்ணியம் இருத்தல் அவசியம்....இப்படியெல்லாம் நடந்தால் பாவம் இனி பையனுங்கள பள்ளிக்கு அனுப்ப பயப்படுவாங்க பெற்றோர்
மனிதன் பண்பாட்டை மறந்து
மனிதன் பண்பாட்டை மறந்து திரும்ப மிருகமாகிறான்.
சந்துரு
முறையற்ற காதல்!!!!!!!!!!
முறையற்ற காதல்!!!!!!!!!!







