வண்டி புதுத்தெருவில் திரும்பும் முன் மனதுக்குள் அய்யோ இந்தத் திருப்பமா என்று ஒரு அதிர்வு ஏற்பட்டது. சொல்லப்போனால் கடந்த ஆறு வருடங்களாகவே ஒவ்வொரு திருப்பமுமே ஒரு வேதனை அனுபவமாகத்தான் இருந்திருக்கிறது. திருப்பங்கள் வாழ்க்கையில் ஒரு புது உத்வேகத்தை அளிக்கும் என்று ஒரு முறை யாரோ சொல்லிக் கேட்டதாய் ஞாபகம். ஆனால் என் வாழ்க்கையில் இன்று வரை அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. நான் யார் என்பதை உங்களுக்குச் சொன்னால்தான் நான் சொல்வது உங்களுக்குப் புரியும். அதைச் சொல்வதற்கு முன் இதோ திருப்பம் வந்து விட்டது. திரும்பும் போது நுகததடி கழுத்தில் இருந்த புண்ணில் படாமல் திரும்பவே முடிவதில்லை. ஆ.... அம்மா... இதோ திரும்பியாய் விட்டது. அப்பப்பா என்ன ஒரு வலி! கண்களில் வழியும் கண்ணீரைக் கூடத் துடைத்துக்கொள்ளத் த்ராணி இல்லாத ஒரு பிற்வியாக என்னை ஏன் படைத்தாய் இறைவா என்று எத்தனையோ முறை ஆண்டவனிடம் கேட்டு விட்டேன். பதில் தான் கிடைக்கவே இல்லை. "ஓவ்.." என்ற வ்ண்டி ஓட்டியின் குரலுக்கு நில் என்று அர்த்தம். ஓ இந்த இடமா? அப்படின்னா அவர் திரும்பி வர கொஞ்சம் நேரம் ஆகும். நாம் நம்ம கதையைத் தொடரலாம். ஒரு மாதிரியாக நான் யார் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் ஒரு வண்டி மாடு. வண்டி மாடுன்னா சாதாரணமா நினைக்காதீங்க. நான் ஒரு மாநில அரசு ஊழியன். கார்ப்பரேஷன் குப்பை வண்டியை இழுக்கும் வேலையில் ஒரு வழியாகப் பத்து வருஷங்களைக் கழித்தாகி விட்டது. இன்னொரு விஷயம் தெரியுமா? இந்தப் பாடெல்லாம் இன்று வரை தான். நாளை எனக்கு ரிடையர்மெண்ட். அதாவது நாளை முதல் நான் வண்டி இழுக்க வேண்டாம். அப்பாடா என்று இருக்கலாம். என் கதையை உங்களிடம் சொல்வது என்று முடிவு எடுத்துப் பல நாள் ஆகி விட்டது. பணி ஓய்வு நாளுக்கு அப்புறம் நிதானமாக ஆற அமற சொல்லிக் கொள்ளலாம்னு இருந்தேன். ஆனால் அதற்கு வழி இல்லை என்பது நேற்று தான் தெரிந்தது. சரி விடுங்க. சுயசரிதை எழுதும் அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆளும் இல்லை. ஓரு வண்டி மாட்டின் வாழ்க்கையில் உங்களை சுவாரஸ்யபடுத்தும் அளவுக்கு பெரிய சம்பவங்களும் இல்லை. எதோ போறதுக்கு முன்ன என் கஷ்ட சுகம் ஒண்ணு ரண்டை உங்க கிட்ட பகிர்ந்துக்கலாம்னு தான். இதோ டிரைவர் அண்ண்ன் வந்துட்டார். ஆனா இனிமேல் திருப்பம் எதுவும் இல்லை. வழியிலும் இல்லை, வாழ்க்கையிலும் இல்லை. பாதையும் பத்து வருஷமா பழகினது தான். அதனால நாம பேசிக்கிட்டே போகலாம். "ட்ர்ர்ர்ர்..." என்ற கட்டளைக்குப் போகலாம்னு அர்த்தம். அண்ண்ன் வண்டியில ஏறவில்லைன்னா, வழியில இன்னும் யாரையோ பார்க்கப் போறார்னு அர்த்தம். வ்ண்டி ஓட்டற ஸ்டீரிங்காப் பயன் படற கழுத்துக் கயிற்றை என் மேலயே போட்டுட்டு மெல்ல நடக்கும் அண்ணன் கூட நடந்து கொண்டே நம்ம கதையைப் பார்க்கலாம். 'ஆகா என்ன சுகம்...' கழுத்துக் கயிறு புண்ணைச் சுற்றி இருக்கும் சுகப் பகுதியில் லேசா உரசும் போது ஏற்படற ஆனந்தம் என்னவோ அலாதிதான். இன்பமும் துன்பமும் இரு முனைகள்னு கோவில் ஸ்பீக்கர்ல ஆர்மோனியத்தோட பாடுவாறே.. ஆங் முருகதாஸ் ஐயா பாட்டு ஒண்ணு கேட்டு இருக்கேன். ஆண்டவனுடைய படைப்பில் இதுக்கு என் கழுத்துலயே ஒரு சாட்சி இருக்கிற்து வினோதம்தான். புல் பட்டாலே உயிர் போக வலிக்கும் சிரங்குப் புண்ணைச் சுற்றி தொட்டாலே சுகம் தரும் ஒரு பகுதியைப் படைத்து இருக்கும் ஆண்டவன் படைப்பை என்னவென்று சொல்வது? அதனால் தான் சிரங்கு பிடிதவன் கை சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க. அந்த இன்பத்தை அநுபவித்தாதான் புரியும். துன்பம் வந்தாலே பின்னால் இன்பம் வருவது நிச்சயம் அப்படின்னு ஒரு பேச்சாளர் சொன்னது ரொம்பவும் சரி தான். பத்து வருஷத் துன்பத்துக்கு மிக விரைவில் விமோசனம் கிடைக்கப் போவது அதற்குச் சாட்சியாக இருக்கிறது. என்னடா! ஒரு மாடு இவ்வளவு தத்துவம் பேசுதேன்னு நினைக்கிறீங்களா? ந்ம்ம ஆபீஸ் பக்கத்துல ஒரு கோயில் இருக்குங்க. அங்க தினந்தோறும் மாலை வேளைல ஸ்பீக்கர்ல நல்ல நல்ல அருளுரைகள் எல்லாம் போடுவாங்க. நல்லா காத்து வாங்க்கிக்கிட்டே, வாயில அசை போட்டுக்கிட்டு, வாலால ஈ விறட்டிக்கிட்டே அதைக் கேட்கிற சுகம் இருக்கே..! ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னெல்லாம் 'என்னடா இது ஒரு வாழ்க்கை' அப்படின்னு அலமந்து போவேன். அதுவும் ஒரு தடவை உடைந்து போன நுகத்தடியை மாத்தின போது அதுல இருந்த ஒரு சிலாம்பு குத்தி கழுத்துல புண் வ்ந்து அவதிப்பட்டேன் பாருங்க. மனசே உடைந்து போகும். அப்ப வண்டி ஓட்டிக்கிட்டிருந்த கஜா அண்ணன் பயங்கறமா அடிச்சு வண்டி ஓட்டுவார். கழுத்துல வலி உயிர் போகும். புண் இருப்பதை அவர் கொஞ்சம் கூட மதிக்க மாட்டார். ரொம்ப நாள் கழிச்சு புண் கட்டி போல் மாறி இருந்த போது, கழுத்தில் நுகத்தடியை மாட்ட முடியாததால் அவர் ஆஃபீஸரிடம் சொல்லி அவர் மேலுக்கு லெட்டர் எழுதி பர்மிஷன் வாங்கி ஒரு வழியா மாட்டாஸ்பத்திரி டாக்டரிடம் அழைத்துப் போனார்கள். அவர் புண்ணை விட அதிகம் வலிக்கும் ஒரு ஊசி போட்டு மேலே தடவ ஒரு களிம்பு கொடுத்து அடுத்த வாரம் வரச்சொல்லி அனுப்பினார். ஆனால் களிம்பை நேரதுக்குத் தடவி விட ஆளில்லாததாலும், மறுபடி டாக்டரிடம் அழைத்துப்போக வக்கில்லாததாலும் புண் ஒரு கட்டியாக உருவாகி விட்டது. கஜா அண்ணன் ஓவரா தண்ணி அடிச்சு குடல் வெந்து போய் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு என்னைப் போலவே கவனிக்க ஆள் இல்லாமல் செத்துப்போனார். என்ன தான் என்னைக் கொடுமைப்படுதியவர்ன்னாலும் அவருடைய மரணம் என்னை ரொம்பப் பாதிச்சது. அவருக்கு அடுத்தவரை வேலைக்கு நியமிக்கும் வரை ஒரு பத்து நாள் எனக்கு ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் கட்டியும் கொஞ்சம் வலி குறைந்து இருந்தது. அடுத்து எனக்கு ட்ரைவரா வந்த பாபு அண்ணன் ஒரு அப்பிராணி. ஆனா அவரும் அவருடைய மனைவி தர்மமும் எனக்கு சாமி மாதிரி. அந்தம்மா பேர் மட்டும் தர்மம் இல்லை. அவங்களே தர்மத்தின் வடிவம் தான். தினமும் அவங்க வீட்டு வாசலுக்கு வரும் போது எனக்குன்னு அரிசி களைஞ்ச தண்ணியிலே ராத்திரி மீந்ததெல்லம் போட்டு கொஞ்சம் உப்பும் போட்டு ஒரு ஆனந்தமான பானத்தை எனக்குன்னு வெச்சிருப்பாங்க. எனக்குப் பேர் வெச்சதே அந்த அம்மாதான். காய்கறி நறுக்கும் போது மீந்ததெல்லாம் எனக்குன்னு எடுத்து வெச்சிருப்பாங்க. அவங்கதான் என் கழுத்துப் புண்ணைப் பாத்து பதறிப்போய் பாபு அண்ணனை ஒரு பிடி பிடிச்சாங்க. ஈஓ ஐயா கிட்டயும் சண்டைக்குப் போனாங்க. அவர், "குப்பை வண்டி மாட்டுக்கு லீவ் வேணும்னா அது வரை நீங்க வேணா குப்பையை அள்ளிக் கொட்டுங்க" அப்படின்னு ஒரு பேச்சுக்கு சொல்லப்போய் அந்த அம்மாவும் அவங்க புருஷனுமா நிஜம்மாவே கூடையிலே குப்பையை அள்ளிக் கொட்டியது என்னாலெ மறக்கவே முடியாது. ரண்டு நாளில ஈஓ ஐயாவுக்கு விஷயம் தெரிஞ்சு அவர் பரிதவிச்சுப் போய்ட்டார். அவரே நேரே வந்து, "என்னம்மா நீ? ஒரு பேச்சுக்குச் சொன்னா உடம்பு சரியில்லாத பொம்பளை நீ போய் இதெல்லாம் செய்துகிட்டு. விடு! நான் இதுக்கு வேற் வழி பண்ணறென்" அப்படின்னு சொல்லி, சொன்ன மாதிரியே ஒரு மோட்டார் வண்டியை ஏற்பாடு செய்தார். தர்மம்மா தினமும் மஞ்சளும் சுண்ணாம்பும் சோப்புக்கட்டியுமா தேச்சு என் கட்டி மேல போட்டு விடுவாங்க. எனக்குக் கொஞ்சமும் வலிக்காம இதம்மா அவங்க அதைப் போடும் போது இவங்களுக்கு எப்படி நன்றி செய்யப்போறேன்னு நினைச்சு என் கண்ணுல இருந்து தண்ணியா வரும். எனக்கு வலிக்குதுன்னு நினைச்சி அவங்க, "கொஞ்சம் பொருத்துக்கோடா ம்ணி. வலியோட வேதனை என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். நானும் உன்னைப் போல வியாதிக்காரி தான். கவலைப் படாதே. எல்லாம் நேரம் வந்தா சரியாப் போய்டும்". அப்படின்னு ஆறுதல் சொல்வாங்க. இதுக்கெல்லாம் சரியாகுற் நிலைமை எப்பவோ தாண்டிப் போயிடுத்துன்னாலும் அவங்க வார்த்தை ரொம்ப ஆறுதலா இருக்கும். அப்பல்லாம் நான் அவங்களுக்கு எதோ சின்ன தொந்தரவுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா ஒரு நாள் அவங்களுக்கு வலி வந்து துடிச்சுப்போன போதுதான் அவங்களுக்குப் புத்து நோய்ன்னு தெரிஞ்சி நான் ரொம்பவும் தவிச்சுப் போனேன். வ்ண்டி பக்கத்துல ஓடிப்போய் அம்மான்னு பாபு அண்ணனைக் கூப்பிட்டேன். அவரும் புரிஞ்சிக்கிட்டு வண்டியில என்னைப் பூட்டி அம்மாவை அதில ஏத்தினார். அப்பவும் அந்த அம்மா, "என்னங்க அதுக்கே கழுத்து சரி இல்லை அதைப் போய் வண்டியிலே பூட்டறிங்களே" அப்படின்னு சொல்லிக்கிட்டே மயக்கமா ஆயிட்டாங்க. அன்னிக்கு ஆஸ்பதிரிக்குப் பிடிச்சேன் பாருங்க ஒரு ஓட்டம்.. என் வாழ்க்கையிலே அது மாதிரி நான் ஓடினதே இல்லை. பல்லைக் கடிச்சிக்கிட்டு, கழுத்து வலியைத் தாங்கிக்கிட்டு நான் அப்படி ஒரு ஓட்டம் ஓடியும் திரும்பி வரும் போது அவங்க உடம்பைத்தான் கொண்டு வர முடிந்தது. க்ண்ணும் கண்ணீருமா நான் தான் அவங்களை சுடுகாடு வரை வண்டியிலே இழுத்துப் போனேன். அப்பற்ம் கொஞ்ச நாளுக்கு மனசே வெறுமையாப் போச்சு. ஆபீஸ்ல செலவு தாங்காம போகவும் என் வண்டி வாழ்க்கை மறுபடியும் ஆரம்பிச்சது. அதிலே இருந்து இன்னிக்கு வரைக்கும் இதோ இவரோட சேர்ந்து நாலு பேர் கிட்ட வேலை செய்தாச்சு. இந்த அண்ணன் ரொம்ப நல்லவர். ரொம்ப அடிச்சு ஓட்ட மாட்டார். கயித்தக்கூட இழுக்க மாட்டார். கழுத்துக் கயிற்றை என் மேலயே போட்டுட்டுக் கூடவே நடந்து தான் வருவார். ஆனா ரொம்ப கஷ்டப் படற் குடும்பம். அவறோட முதல் பொண்ணு கல்யாணத்துக்கு செலவு செஞ்சு கடன்காரனா ஆயிட்டார். பொண்ணு வேற் இப்போ ப்ரஸவத்துக்கு வீட்டுக்கு வந்து இருக்கா. பிள்ளயார் கோவிலத் தாண்டற்ப்போ, "ஆண்டவா, இவங்களுக்கு ஒரு உதவியும் செய்ய முடியாத ஜீவனா என்னைப் படைச்சிட்டியே" அப்படின்னு ஒரு நிமிஷம் கண் கலங்கி வேண்டிக் கிட்டேன். மனம் நொந்து வேண்டிக்கிட்டா ஆண்டவன் நல்லது செய்வாறுன்னு வாரியார் ஐயா சொல்லறது தான் எவ்வளவு உண்மை. உடனேயே கடவுள் கண்ணைத் திற்ந்துட்டார். எல்லாப் பஞ்சாயத்துக்கும் மோட்டார் வண்டி வந்துட்டதால இனி வண்டிக்கு வேலை இல்லைன்னு ஈஓ ஐயா ட்ரைவர் அண்ணனிடம் சொல்லவும் எனக்கு ரிடயர்மெண்ட் குடுக்கற்துன்னு முடிவு ஆச்சு. எப்படியோ பேசி என்னை சீப்பான விலைக்கு ட்ரைவர் அண்ணன் வாங்கிட்டார். திரும்பி வரப்போது அவர் கரிம் பாய் கடையில பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டப்ப தான் ரொம்ப சந்தோஷமா இருந்தது. "நல்ல எடை மாடு பாய். வெளியில வாங்கினா அஞ்சு ஆறு ஆயிரம் ஆகும். வீட்டுல பொண்ணுக்கு டிலவரி பாக்கணும். ஒரு நாலரை ஆயிரம் குடுத்துடுங்க. அப்படியே ஈஓ சாருக்கு ஒரு கிலோ கறியும் நம்ம வீட்டுக்கு அரை கிலோ கறியும் குடுத்துடுங்க" அப்படின்னு பேசி முடிச்சிட்டார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. எப்படியும் ஒரு நாள் போகப்போறோம். இப்படி நமக்கு நல்லது செய்தவங்க நாலு பேருக்கு உபகாரமாப் போற்து எவ்வளவு ஒரு பாக்கியம்னு ரொம்ப ஆனந்தப்பட்டுப் போய்ட்டேன். இதோ ரோட்டுக்கடையில் அண்ணன் டீ குடிக்கப் பொய் இருக்கார். பிள்ளயாரும் நானும்தான் தனியா இருககொம். சாமி கிட்டே வரம் கேட்டா குடுப்பாறாமே. கேக்கலாமான்னு தோணுது. நினைச்சிப் பாத்தா எனக்கு எதுவுமே தேவை இருக்கிற் மாதிரி தெரியல. நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டுப் போற உணர்வுதான் இருக்கு. சுகி சிவம் ஐயா சொல்லற மாதிரி எந்த நேரத்துலயும் யாருக்கும் ஒரே ஒரு தேவையாவது இருக்கும்னு யோசிச்சிப் பார்க்கறேன். ஆங்.. எனக்கும் ஒரு வரம் வேண்டி இருக்கு. பிள்ளயார் கிட்ட வேண்டிக்கிறேன், "சாமி, கடவுளே.. நாளைக்கு வெட்டும் போது என் கழுதுப் புண்ணுல கத்தி பட்டுடாம பாத்துக்கோ. பட்டா என்னாலே வலி தாங்க முடியாது". இதோ எனக்கு விடுதலை நாளும் வந்துட்டது. எனக்கு எல்லாம் என்ன மாலை போட்டு டீ பார்ட்டி வெச்சா ரிலீவ் பண்ணுவாங்க? அண்ணன் ஆர்டரோட வந்துட்டார். வண்டியிலேர்ந்து என்னை அவிழ்க்கும் போது கழுத்துக் கயித்தையே எடுத்துட்டார். நானே அவரோட நடக்க ஆரம்பிச்சிட்டேன். இதோ கரிம் பாய் கடையும் வந்துடுத்து. "என்னப்பா லேட்டா ஆயிடுத்தா? ஆர்டர் பார்ட்டி வெய்ட் பண்ணறாங்கப்பா" அப்படின்னு கரிம் பாய் அவசரப் படறாரு. "ஏய் மஸ்த்தான், மால் வந்துடுச்சி பாரு. பாத்து வெட்டுடா. கழுத்துல கட்டி இருக்கு பாரு. அதுல படாம பிஸ்மில்லா போடு" அப்படின்றாரு. "அட வந்துட்டாருடா புத்தரு" அப்படின்னு மஸ்த்தான் நக்கல் அடிக்கறான். எனக்கு என்னவோ உலகத்தைத் திரும்பிப் பாக்கணும்னு கூடத் தொணலே. நேரா அறுக்கும் இடத்துக்கு நானே நடந்து போறென். "இதோ பாறுடா.. இடுக்கு அவசரத்தை" என் கழுத்துல கட்டி பக்கத்து சுகப் பகுதியில் லேசாகத் தடவியபடி மஸ்த்தான் ஆச்சரியப்படறான். ஆகா என்ன சுகம். என்ன சுகம்.. ஆண்டவா உனக்கு நன்றி. இந்த உலக வாழ்க்கையில எனக்கு உபகாரமா இருந்த எல்லாருக்கும் நன்றிங்க. நான் போயிட்டு வற்..... (கடவுள் அந்த மாட்டுக்கு அது கெட்ட வரத்தை அளித்தார்). Siru Kathaigal Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 130 views கருத்துகள் மிருகங்களை தன் தேவைக்காக மட்டும் பயன்படுத்திவிட்டு அழித்துவிடும் மனிதனே ஒரு மிருகம். வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments :cry: அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments :cry: அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments மிக்க நன்றி சுந்தர். மிக்க நன்றி சுந்தர். Log in to post comments
மிருகங்களை தன் தேவைக்காக மட்டும் பயன்படுத்திவிட்டு அழித்துவிடும் மனிதனே ஒரு மிருகம். வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162