kumaran's படம்

மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
ஒரு மீன்பாடி வண்டியில் ஒரு இளம் ஆடு கட்டப்பட்டு கிடக்கிறது.

அந்த வழியாக ஒரு மாடு மேய்ந்தபடி வருகிறது. ஒரு வண்டியில் ஆடு கட்டப்பட்டு கிடப்பதை பார்த்து முகர்ந்து பார்க்கிறது. அதை பார்த்தபடி இரும்பு அரிவாளுடன் ஒருவன் ஓடி வருகிறான்.

காட்சி இருளாகி மறைகிறது.

டைட்டில் தொடங்குகிறது.

‘’யுத்தம் செய்’’
பாகம் 2

காவல் நிலையம்.

சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் சோகமாக உள்ளே வருகிறார்.

இன்ஸ்பெக்டர் மாதவன் அருகில் சென்று தன் பதவி விலகல் கடிதத்தை கொடுக்கிறார். மாதவன் அதை வாங்க மறுத்துவிடுகிறார்.

பரந்தாமனை பார்த்து சொல்கிறார் ’’பரந்தாமன் உங்க மாடு காணாமல் போச்சுன்னு நீங்க வருத்தமா இருக்குறது உண்மைதான். அதுக்காக பதவி விலகுறது நல்லா இல்லை. நிச்சயமா உங்க மாட்டை கண்டுபிடிச்சு தர நான் எல்லாவகையிலும் முயற்சி பண்ணிகிட்டுதான் இருக்கேன்..(பரந்தாமனிடம் ஒரு ஃபைலை கொடுத்தபடி சொல்கிறார்)....இது இறந்து போன விவசாயி மாரப்பன் அவரோட மனைவி கேஸ் சம்பந்தப்பட்ட பைல்...உங்களுக்கு துணையா 2 பேரை நியமிச்சிருக்கேன்...இது அவங்க ஃபைல்..இந்த கேஸ்ல உங்களுக்கு துணையா இருப்பாங்க...

அந்த பைலை வாங்கிபடி வெளியே வந்து அதை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வெளியே வருகிறார். துணைக்கு நியமிக்கப்பட்ட இருவரும் அவருடன் ஒட்டிக்கொள்கிறார்கள்.

பிணவறை.

பல பிணங்களுக்கு மத்தியில் டாக்டர் சுந்தரம் பிணம் மாதிரி படுத்து தூங்கிகொண்டிருக்கிறார்.

பரந்தாமன் அவரை எழுப்புகிறார்.
டாக்டர் ஒரு பெட்டியை எடுத்து காட்டுகிறார்.
அதில் வெட்டப்பட்ட இரண்டு கைகள். அந்த வெட்டப்பட்ட கைகள் ,கிடைத்த இடம் இதைப்பற்றியெல்லாம் டாக்டர் பரந்தாமனுக்கு விளக்கமாக சொல்கிறார். அது ஒரு ஆணின் கைகள்.

நியூ இயர் பார்ட்டி நடந்துகொண்டிருக்கிறது. டெரரான இசை ஒலித்தபடி ஒரு பெட்டியை நோக்கி கேமரா நகர்கிறது. உள்ளே வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் இரண்டு கைகள்.

தொடர்ச்சியாக நகரத்தின் பல பகுதிகளிலும் பல வெட்டப்பட்ட கைகள் கிடைக்கின்றன.

விசாரணை சூடு பிடிக்கிறது.

விவசாயி மாரப்பன் சாவில் சந்தேகப்படும்படியான ஒரு ஆளை பிடித்து விசாரிக்கிறார்.

ஒரு ஹோட்டலில் பிரியாணி திருடி தின்ன ஆளை சிலர் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள். அவர் தான் திருடவே இல்லை என பரந்தாமனிடம் சத்தியம் செய்கிறார். தான்தான் அந்த ஹோட்டலின் முதலாளி என்றும் சொல்கிறான்.

பரந்தாமன் பலவாறு குற்றவாளிகளை தேடி ஒரு காட்டேஜ் பக்கம் வருகிறார். அவரை கடந்தபடி ஒரு ஆள் செல்கிறான். காட்டேஜ் உள்ளே செல்கிறார். அறையில் அவர் தேடி வந்த ஆள் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்கிறான். சுதாரித்தவராக வெளியே வெறிபிடித்தமாதிரி ஓடுகிறார். அவரை கடத்து சென்ற அந்த ஆள் வேகமாக அவருக்கு முன்பு ஓடுகிறான். இறுதியில் அவனை பிடிக்க முடியாமல் கோட்டை விடுகிறார்.

இரவு நேரம்

இந்த கேஸை எப்படி கண்டுபிடிப்பது என்ற குழப்பத்தில் பரந்தாமன் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.தன் வீட்டு மாடு காணாமல் போன கவலை வேறு அவரை ஆட்கொள்கிறது.

வீட்டை சுற்றி யாரோ ஓடும் சத்தம் கேட்கிறது.
வெளியே வருகிறார்.

நடந்தபடியே வந்து ஒரு பாலத்தில் நடக்கிறார்.
பாலத்தின் இருபுறத்திலிருந்தும் சிலர் அவரை ரவுண்டு கட்டுகிறார்கள்.

தலை குனிந்தபடியே நின்ற இடத்திலிருந்தே எல்லோரையும் வெளுக்கிறார்.

இடைவேளை

இறந்துபோன விவசாயி மாரப்பன் வீட்டை பரந்தாமன் அலசி ஆராய்கிறார். அப்போது சில உண்மைகள் அவருக்குப் புலப்படுகின்றன. டாக்டர் மேல் சந்தேகம் வருகிறது. டாக்டரை தேடி கிளம்புகிறார். ஒரு இடத்தில் டாக்டர் சில முகமுடி அணிந்தவர்களுடன் ஒரு பிணத்தை கடத்தி சென்றுகொண்டிருக்கிறார்..

டாக்டரின் எதிரிகள் அவரை போட்டுத்தள்ளுகிறார்கள்..முகமுடி அணிந்த சிறுவன் கீழே விழுகிறான். அவனை காவல்துறை கைப்பற்றுகிறது. பரந்தாமன் இரத்தவெள்ளத்தில் கிடக்கும் டாக்டரை காப்பாற்ற முனைகிறார். ஆனால் டாக்டர் தடுக்கிறார்...’’ வேண்டாம் ..நான் இனிமேல் பிழைக்க மாட்டேன் ‘’என்கிறார். ‘’நான் ஒரு நல்ல காரியம் பண்ணிட்டேன், அது போதும் எனக்கு’’ என்று கூறியபடி ஒரு ப்ளாஷ் பேக் சொல்ல ஆரம்பிக்கிறார்.

நான் விவசாயி மாரப்பனோட பேமிலி ப்ரெண்ட். ஒரு நாள் மாரப்பன் தன் பொண்டாட்டி,தன்னோட ஆட்டுக் குட்டியோட சந்தைக்கு போயிருக்கார். போன இடத்துல ஒரு ஹோட்டல்ல சாப்பிட போயிருக்கார். அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு இருக்கும்போது அந்த குட்டி இளம் ஆடு புல் மேயுறத்துக்காக பின்னாடி போயிருக்கு.. அதை பார்த்த அந்த ஹோட்டல் முதலாளி அதை வெட்டி பிரியாணி போட முயற்சி பண்ணதை சில பேரு பாத்திட்டாங்க..அவனை தர்ம அடி கொடுத்து போலிஸ்ல ஒப்படைச்சட்டாங்க...
அந்த வன்மத்தை மனசுல வச்சிக்கிட்டு அந்த ஹோட்டல் முதலாளி ஒரு நாள் அந்த குட்டி இளம் ஆட்டை தன் ஆளுங்களை வச்சி கட்டி மீன்பாடி வண்டில தூக்கிட்டு வந்திட்டான். அப்படி கொண்டு வரும்போது வழில ஒரு மாடு அதை பாத்துடுச்சு...அதையும் தன்னோட கொட்டகைல கொண்டு வந்து கட்டி வச்சிருக்கான்..அதையும் ஒரு நாள் பொலி போடலாம்னு கட்டி வச்சிருக்கான்...
இந்த நிலைல காணாமல் போன தன் குட்டி ஆட்டை நினைச்சு விவசாயியும் அவரு பொண்டாட்டி,பையன் சோகமா இருந்தாங்க..அப்போ நானும் அவங்க கூடத்தான் இருந்தேன்..அப்போ பார்சல்ல ஒரு பொட்டலம் வந்திச்சு...பிரிச்சு பார்த்தா (டாக்டர் ..நா தழுதழுத்து அழுது அரற்றியபடியே சொல்கிறார்)...அவங்க ஆசை ஆசையா குழந்தை மாதிரி வளர்த்த அவங்க ஆட்டுக்குட்டியை அவனுங்க பிரியாணி போட்டு தின்னுட்டு இவங்களுக்கும் அடையாளத்துக்கு கொஞ்சம் அனுப்பி வச்சிருந்தான்... அந்த ஹோட்டல் முதலாளிக்கு வேலையே இதுதான் ..பல வீட்டு ஆட்டுக்குட்டியையும் திருடி வெட்டி பொலி போட்டு மட்டன் சுக்கா,மட்டன் பிரை, மட்டன் மசாலான்னு தினுசு தினுசா விக்கிறதும் தனக்கு வேண்ட பட்டவங்களுக்கு விருந்து வைக்கிறதும்தான் அவன் வேலை..இதுக்குன்னே 10 தடியன்களையும் 10 தடிச்சிகளையும் கூட வச்சிருக்கான்...

டாக்டர் வெறியுடன் மேலும் சொல்கிறார்...அப்போ முடிவு பண்ணோம் சார்..அந்த ஹோட்டல் முதலாளியையும் அவன் ஆளுங்களையும் பழி வாங்குறதுன்னு....விவசாயி அவரு பொண்டாட்டி பையனோட செத்த மாதிரி செட்டப் செஞ்சோம்.. இப்போ அவங்க ஒரு காட்டு பங்களாவுல தலை மறைவா இருக்காங்க.. அந்த ஹோட்டல் முதலாளியோட ஆளுங்களை கடத்தினோம் ...பல வீட்டு குட்டி ஆடுங்களை ஈவு இரக்கமில்லாமல் வெட்டிக்கொன்னு பிரியாணி போட்ட அவங்க கைகளை வெட்டி பல பேர் நடமாடுற இடங்கள்ல போட்டோம்..அடுத்த ஆளை பழி வாங்க நாங்க முயற்சி பண்ணும்போதுதான் இப்படி ஆயிடுச்சு... என்று விக்கி விக்கி கூறியபடியே இறந்து போகிறார்..
விவசாயியின் பையனை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து வைக்கிறார் பரந்தாமன்.
இன்ஸ்பெக்டர் மாதவனிடம் ஆயுதங்கள் வேண்டுமென்று கூறி வாங்கி கொள்கிறார். விவசாயியையும் அவரது மனைவியையும் தேடி புறப்படுகிறார்.

அப்போது ஹோட்டல் முதலாளியின் ஆட்களிடமிருந்து போன் வருகிறது.

‘’பரந்தாமன் அந்த பையனை எங்க்கிட்ட ஒப்படைச்சுட்டு உன் மாட்டை கூப்பிட்ட போ’’ என மிரட்டுகிறார்கள். தன் மாடு கிடைத்த சந்தோசத்தில் பரந்தாமன் மகிழ்ச்சி அடைகிறார்.

ஆனால் இன்ஸ்பெக்டர் மாதவன் பையனை கொடுத்து ஆட்டை மீட்பதற்கு சம்மதிக்க மறுக்கிறார்.

பரந்தாமன் சோகமாக வீட்டில் அமர்ந்திருக்கிறார்.

அவரது ஆட்கள் விவசாயியின் பையனை அழைத்துக்கொண்டு வருகிறார்கள். பரந்தாமன் உற்சாகமாக புறப்படுகிறார்.

காட்டு பங்களா.

தப்பித்து வந்த விவசாயியும் அவரது மனைவியும் வெறியுடன் எதிரிகளை சந்திக்க எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள்.

பரந்தாமனும் அவர் ஆட்களும் விவசாயியையும் அவர் மனைவியையும் தேடுகிறார்கள்.

அப்போது ஹோட்டல் முதலாளியின் ஆட்கள் ஒரு காரில் வந்து சேருகிறார்கள்.

பரந்தாமனிடம் விவசாயி பையனை தங்களிடம் அனுப்ப சொல்கிறார்கள்.

பரந்தாமன் தயக்கத்துடன் அந்த பையனை அனுப்புகிறார். ஹோட்டல் முதலாளியின் ஆட்கள் காரில் கட்டி வைத்திருந்த பரந்தாமனின் அன்பு மாட்டை அவிழ்த்து விடுகிறார்கள்.

அப்போது விவசாயியும் அவரது மனைவியும் களத்தில் குதிக்கிறார்கள்..ஹோட்டல் முதலாளியின் ஆட்களை வெட்டி பொலி போடுகிறார்கள்..

பரந்தாமனின் அன்பு மாடு ஆசையுடன் பரந்தாமனிடம் ஓடி வருகிறது. ஹோட்டல் முதலாளியின் ஆட்கள் அந்த மாட்டை சுட முயற்சிக்கிறார்கள். அப்போது விவசாயி மனைவி குறுக்கே பாய்ந்து குண்டை தன் மார்பில் வாங்கி சாய்கிறாள். விவசாயியும் சுடப்படுகிறார். இதைப்பார்த்த பரந்தாமன் ஹோட்டல் முதலாளியின் ஆட்களை என்கவுண்டர் செய்கிறார்.

ஒரு அறையின் உள்ளேயிருந்து ஹோட்டல் முதலாளியும் அவருடன் பிரியாணி விருந்து சாப்பிடும் நண்பர்களும் வாய்கள் உடைக்கப்பட்டு கைகள் வெட்டப்ட்ட நிலையில் வெளியே வருகிறார்கள்.

பரந்தாமன் விவசாயி மகனை யாருக்கும் தெரியாமல் தன் பொறுப்பில் அழைத்துச் செல்கிறார். அவனை கால்நடை மருத்துவம் படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.
-------------------------முற்றும்----------------------------------------
நீதி; மனித பெண்குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு ஆண்களுக்கு விருந்தானால் , ‘யுத்தம் செய் ‘என படமெடுத்து தன் குழந்தைகள் நாசம் செய்யப்பட்டுவிட்டதாக கதறும் மனித வர்க்கம் , ஆடுகளையும் கோழிகளையும் வெட்டிக்கொன்று தின்னும்போது அதை பெற்ற ஆடு மாடு, கோழிகள் எவ்வளவு கண்ணீர் வடித்து கதறியழும் என்பதை உணர வேண்டும்.

A FILM BY
I.KUMARAN Smile

5
Your rating: None Average: 5 (5 votes)

கருத்துகள்

vinoth's படம்

நீதி; மனித பெண்குழந்தைகள்


7

நீதி; மனித பெண்குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு ஆண்களுக்கு விருந்தானால் , ‘யுத்தம் செய் ‘என படமெடுத்து தன் குழந்தைகள் நாசம் செய்யப்பட்டுவிட்டதாக கதறும் மனித வர்க்கம் , ஆடுகளையும் கோழிகளையும் வெட்டிக்கொன்று தின்னும்போது அதை பெற்ற ஆடு மாடு, கோழிகள் எவ்வளவு கண்ணீர் வடித்து கதறியழும் என்பதை உணர வேண்டும்.

மிக அருமை குமரன்
Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

நன்றி


Smile நன்றி


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


sugiri's படம்

கலக்கிட்டீங்க போங்க


4

கலக்கிட்டீங்க போங்க bye Smile Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


kumaran's படம்

நன்றி


நன்றி bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


saravanamuthu's படம்

ஒரே கலக்கல் தான்


4

ஒரே கலக்கல் தான் போங்க!!!!!!!! Smile Smile

kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Tamizh's படம்

நீதி; மனித பெண்குழந்தைகள்


7

நீதி; மனித பெண்குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு ஆண்களுக்கு விருந்தானால் , ‘யுத்தம் செய் ‘என படமெடுத்து தன் குழந்தைகள் நாசம் செய்யப்பட்டுவிட்டதாக கதறும் மனித வர்க்கம் , ஆடுகளையும் கோழிகளையும் வெட்டிக்கொன்று தின்னும்போது அதை பெற்ற ஆடு மாடு, கோழிகள் எவ்வளவு கண்ணீர் வடித்து கதறியழும் என்பதை உணர வேண்டும்.

உண்மை குமரன். தாய்மையின் வலி,அன்பென்பது அனைத்து உயிர்களுக்கும் சமம்.
அருமை. Clap Clap

kumaran's படம்

நன்றி


நன்றி Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

(No subject)


3

Clap

kumaran's படம்

நன்றி


Smile நன்றி


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.