Siju's படம்

என்னங்க ஒரு தமிழ் போஸ்ட் போட்டுடலாம்னு கை லாம் நம நம‍_னு அறிக்குது. ஒரு டாப்பிக்கும் சிக்க மாட்டுதே…

அப்பாடா சிக்கிடுச்சுங்க சிக்கிடுச்சு…

இருக்கவே இருக்கு காலேஜ் கதை…

ஒரு 4வருஷம் காலேஜ் படிச்சுட்டு 4000 பக்கத்துக்கு புக் போடலாம்ற அளவுக்கு கதை வச்சிருக்கேன். அப்போ நான் 2வது வருஷம் படிச்சுட்டு இருந்தேன். உங்களுக்குலாம் தெரியும் எஸ்.ஏ.எஸ்_னு ஒரு சப்ஜெக்ட். அதாங்க ஸிக்னல் அன்ட் ஸிஸ்டம். தல வலி நம்ம தலை விதி_னு படிச்சேங்க எலக்ட்ரானிக்ஸ் ஸப்ஜெக்ட்டெல்லாம்…

சரி சரி மேட்டருக்கு வருவோம். ஒரு சனிக்கிழமை ஆர்வமா உட்காந்து படிச்சுட்டு இருந்தேன் எஸ்.ஏ.எஸ். ஏன்னா சனிக்கிழமை காலேஜ் வைக்குறதே கொடுமை, அதுலயும் டெஸ்ட் வச்சா??? என்னடா பயபுள்ள படிச்சேன்னு சொல்றானே_னு புருவத்த தூக்காதீங்க. எங்களுக்கு எஸ்.ஏ.எஸ் எடுத்த ப்ரதீபா மேடம்காக படிச்சேன். புரிஞ்சுருக்குமே. சரி சரி பேச்சு பேச்சா தான் இருக்கனும். துப்பிடாதிங்க. ஏன்னா வள்ளுவர் என்னா சொல்லிருக்காரு???

“துப்பார்க்கு துப்பாயத் துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாயத் தூவு மழை”

நீங்க துப்பித் துப்பி நாட்டை அசுத்தம் பண்ணா துப்பாக்கியால நாட்டாமை சரத்குமார் மழை மாதிரி வெத்தல போட்டு துப்பிடுவாராம். தேவையா நமக்கு… (உங்க மைன்ட் வாய்ஸ்::பையன் என்னமோ சொல்ல ட்ரை பண்றான்.) புரிஞ்சுக்கிட்டாங்க வாசு. பாபு பாபு…

கதைய எங்க விட்டேன்.. ஆ…ம்… படிச்சுட்டு இருக்கும் போது எனக்கு முன்னாடி பெஞ்ச் ல ஒருத்தனுக்கும் பின்னாடி பெஞ்ச்ல ஒருத்தனுக்கும் கடுமையான வாய்க்கா தகராறு. பயபுள்ள எவன் சண்ட போட்டாலும் ஒதுக்கி விட ட்ரை பண்ணக் கூடாதுனு நம்ம வடிவேல் அண்ணன் சொல்லிருக்காரு இல்ல? அதனால நான் படிப்ப மட்டும் பாத்தேன். சண்ட சீரியஸ் ஆகுறதப் பத்தி கவலைப்படலை.

படிச்சுட்டே இருக்கையில ஃப்ரென்ட்ஸ் படத்துல வடிவேல் தலையில சுத்தி விழுமே. அந்த எஃபெக்ட்ல ஒரு அடி தலைல விழுந்துச்சு. என்னானு பாத்தா ஒரு உடைஞ்சு போன‌ ஃபேபர் கேஸ்டில் ஸ்கேல். கூர் பகுதி தலைல ஃபோர்ஸா செம வேகமா தலையில பாஞ்சுட்டிருக்கு…

ஒரு நிமிஷம் உலகமே நின்னு போன மாதிரி ஒரு ஃபீல். நான் பாட்டுக்கும் செவனேனுதானடா போய்க்கிட்டு இருந்தேன். எவன் வம்பு தும்புக்காச்சும் போனனா? அடிச்சவனும் சேஃப் அடி வாங்க வேண்டியவனும் சேஃப். சம்மந்தமே இல்லாம என் தலையில அஸ்த்திவாரம் தோண்டிட்டானுங்க. யார்றா அடிச்சதுனு நான் பாக்குறதுக்கு முன்னாடியே என் ரத்தம் வெளில வந்து குடம் குடமா கொட்டி யார்றா அடிச்சானு செவப்பா கோவமா விட்டுச்சு பாருங்க லுக்கு?? டேய் ரத்தம் வருதுடானு ஒருத்தன் சொல்ல (வலிக்காமலா வருதுனு தலையத் தொட்டுப்பார்த்தா ரத்தம்…) இன்னொருத்தன் அதாங்க அடிச்சானே அவன் அவனோட பைக்குல என்னை ஆஸ்பத்திரில சேத்து தையல் போட்டு விட்டு எங்க வீட்டுலயும் விட்டுட்டு போனான். வீட்டுல அவந்தான் அடிச்சான்னு சொல்லல. ஏன்னா தெரியாம நடந்துடுச்சு. அதுவும் இல்லாம அடிச்சு சொருவிட்டு ஸாரி கேட்டான் அந்த பய.

அன்னைக்கு எக்ஸாம் கட்டு. மண்டையிலயும் பெரிய கட்டு. 3 நாள் காலேஜ் கட்டு. பத்தாததுக்கு வீட்டுல வேற பவர் கட்டு. இப்படி கட்டு கட்டா கட்டிடுச்சுங்க ஒரு வாரம். அதுக்கு அப்புறம் காலேஜ்க்கு போய் சொன்னேன். ப்ரித்திவ்க்கும் தீனாக்கும் சண்ட. ஆனா உடஞ்சது என்னோட மண்ட_னு. நான் மண்டையில போட்டுருந்த கட்டு பாக்க சங்கி மங்கி மண்டயில இருக்க கொண்டை மாதிரி இருந்த்துச்சு. அப்புறம் மீதி உள்ள 2வருஷத்துக்கும் அதை மையமா வச்சே ஒரு பட்ட பேரும் வச்சாங்க. ம்ம்ம்ம்… இப்போ நினச்சாலும் தல சுத்துது சிரிப்பும் கூடவே வருது.

ஓகே! ஓகே! டைம் பாஸ் பண்ணது போதும். அடுத்த போஸ்ட் ல மீட் பண்றேன்…

8.75
Your rating: None Average: 8.8 (8 votes)

கருத்துகள்

Kaipulla's படம்

செம கலக்கல்.....அதுலயும்


10

செம கலக்கல்.....அதுலயும் "புரிஞ்சுக்கிட்டாங்க வாசு. பாபு பாபு…" ல விழுந்து விழுந்து சிரிச்சேன்..... Laughing out loud Laughing out loud Laughing out loud Big smile Big smile Big smile


Kaipulla


Siju's படம்

நன்றி கைப்புள்ள...


10

நன்றி கைப்புள்ள... Smile

sugiri's படம்

உங்க சங்கேத செய்தி புரியல...


4

உங்க சங்கேத செய்தி புரியல... இருந்தாலும் படிக்க சுவாரசியமா இருந்தது Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


kishore1490's படம்

yow signals and systemla


10

Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud yow signals and systemla padikka ennaya iruku adhu fullaa sums dhaana... signals and system paduchadhuke mandaya odachu maavelaku vachitaanunga... digital signal processingkulaam padichirundhaa enna pannirupaanungalo...


கிஷொர் குமார்


Siju's படம்

ஹ்ம்ம்ம்ம்... நண்பரே


10

ஹ்ம்ம்ம்ம்... நண்பரே நீங்களும் படிச்சிருக்கீங்க போலிருக்கே... அந்த பட்டர்ஃப்லை டையக்ராம் ஸம் பாக்கையிலே தான் தலைக்கு மகுடம் சூட்டிட்டானுங்க...