Skip to main content

மூட பழக்கம்

URI: http://tamilnanbargal.com/node/41068
கருத்துகள்: 3Likes: 1342 views

மூட பழக்கம்

saro007's படம்

ஏதாவது முக்கியமான பிரச்சினைக்கு முடிவு காண இயலாத சூழ்நிலையில் ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு பூவா தலையா என்று பார்த்து முடிவெடுக்கும் பழக்கம் அனேகரிடம் உண்டு அல்லவா?

இந்தப் பழக்கம் எப்படி வந்தது?

இதற்கு காரணகர்த்தா யார்? உளவியலின் தந்தை சிக்மன்ட் பிராய்ட் தான்முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த தன நண்பர்களுக்கு
இந்த வழியை சொல்லிக் கொடுத்தவர்.இதை மூடப் பழக்கம் என்று நிறையப் பேர் நினைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு யோசனையை எப்படி ஒரு பெரிய அறிஞரான பிராய்ட் சொன்னார். ஒரு நாணயம் ஒரு மனிதனின் பிரச்சினைக்கு முடிவு காண்பதா?

இந்தக் கேள்விக்கு  அவரே விடை சொன்னார். 

''ஒரு மனிதன் முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒரு நாணயத்தை சுண்டிப் பார்க்க வேண்டும்.அவன் பூ என்று நினைத்து பூவே விழுந்து விட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதா ,வருத்தம் ஏற்படுகிறதா என்று அவனே கவனித்துப் பார்க்க வேண்டும்.மகிழ்ச்சி ஏற்பட்டால் அந்தக் காரியத்தை செய்யலாம். வருத்தம் ஏற்பட்டால் அதை நிறுத்தி விடலாம்.தலை விழுந்தாலும் இதே லாஜிக் தான்.

''இப்போது சொல்லுங்கள், இது மூடப்பழக்கமா? சரியான முடிவை எடுக்க ஒரு சரியான வழிதானே!

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

vinoth's படம்

நம் வாழ்க்கை நாணயத்தால் நிர்ணயிக்கப்பட வேண்டியதல்ல என்பது என் கருத்து.

நம் மனமும் அறிவும் சேர்ந்து முடிவு எடுத்து நாம் வாழ வேண்டும்.

 

நாளை இண்டர்வியூ இருக்கிறது, அதே நேரம் காதலி கூப்பிட்டிருக்கிறாள் என வைத்துக்கொள்வோம்.

இதில் எது நம் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை நம் அறிவு தான் முடிவு செய்ய வேண்டும்.

காதலியை சந்திக்க போனால் சந்தோஷம் கிடைக்கலாம்.  இதற்கு சாதகமாக தலை விழுந்தால் மனம் சந்தோஷப்படலாம். அதற்காக அதை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை அறிவு உணர வேண்டும். நம் வாழ்க்கையை உயர்த்தும் வேலை கிடைப்பதை தடுப்பது நல்ல காதலாக இருக்க முடியாது என்பதையும் அறிவால் யோசித்தால் போதும்.

காதலர்கள் அடிக்க வராதீங்கபா, ஒரு உதாரணத்துக்காக தான் இதை சொன்னேன்.

நம்மால் முடிவு எடுக்கவே முடியாத நிலையில் பழியை வேற ஒருவர் மேல் போட்டுவிடுவது தான் நாணயம் சுண்டும் பழக்கம்.

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...