ஒரு நாள் முஸ்லீம் பள்ளியில் பெருநாள் கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார்கள். இதைக் கண்ட, அங்கு குடியிருந்த புறாக்கள் அடுத்து உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் போய் வசிக்கத் தொடங்கின. அங்கும் சில நாள் கழித்து பெருநாள் கொண்டாட ஏற்பாடுகள் செய்வதைக் கண்டு, பக்கத்தில் உள்ள கோவிலில் போய் வாழத் தொடங்கின. சில நாட்களில் அங்கும் திருவிழா வர பழையபடி முஸ்லீம் பள்ளிக்கே திரும்பின.
தாய்ப் பறவையுடன் இவ்வாறு அலைந்த சேய்ப்புறா " ஏன் அம்மா, முஸ்லீம் பள்ளியில் இருக்கும்பொழுது மக்கள் எல்லாம் முஸ்லீம்களாகவும், கிற்ஸ்துவ தேவாலயத்தில் கிறிஸ்துவர்களாகவும், கோவிலுக்கு வருபவர்கள் இந்துக்களாகவும் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றுதானே? ஏன் இந்த வேறுபாடு.
ஆனால் நம்மை மட்டும் எங்கு இருந்தாலும் 'மாடப்புறா' என்றே கூறுகிறார்களே! ஏன்?" என்று கேட்டது.
அதற்கு தாய்ப்புறா "அவர்கள் இவ்வாறு பிரிந்திருப்பதால்தான் இன்னும் கீழேயே இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு மேலே இருக்கிறோம்" என்றதாம்.
சன்டிவி 'அசத்தப்போவது யார்?' நிகழ்ச்சியில் கேட்டது.
கருத்துகள்
சிறந்த எடுத்துக் காட்டு
சிறந்த எடுத்துக் காட்டு

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...











