முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்
அவனுக்கு ஒரே மகள் அவள் அழகை பற்றி கேள்விப்பட்ட மூன்று இளவரசர்கள் அங்கு வந்தார்கள்.
மூவரையும் வரவேற்றான் அரசன் தன்மகளுக்கு மூவருமே பொருத்த மானவர்கள் என்று அறிந்தான்.
யாருக்கு திருமணம் செய்து வைப்பது என்று குழம்பினான்.
"உங்களுக்கு ஓர் ஆண்டு தவணை தருகிறேன் யார் கிடைதட்கரிய பொருளை கொண்டு வருகிறீர்களோ
அவருக்கே இளவரசியை திருமணம் செய்து தருவேன்" என்றான்.
அவர்கள் மூவரும் வேறொரு நாட்டிற்கு சென்று முயற்சியில் இறங்கினார்கள்.
அவர்களில் ஒருவனுக்கு எங்கு நிகழ்வதையும் பார்க்கக்கூடிய மாயக்கண்ணாடி கிடைத்தது
ஒருவனுக்கு எங்கு நினைத்தாலும் பறந்து செல்ல கூடிய மந்திர காலணி கிடைத்தது.
மற்றொருவனுக்கு எப்படி பட்ட கடுமையான நோயாக இருந்தாலும் தீர்க்க கூடிய அதிசய மாம்பழம் கிடைத்தது.
மீண்டும் மூவரும் ஒன்று சேர்ந்தனர். தங்களுக்கு கிடைத்த அறிய பொருட்களை பற்றி பெருமையாக பேசிக்கொண்டனர்.
முதலாமவன் தன்னிடம் இருந்த மாயக்கண்ணாடியை அவர்களிடம் காட்டி "மாயக்கண்ணாடியே இப்போது இளவரசி என்ன செய்கிறாள் என்பதைக்காட்டு " என்றான்.
உடனே கண்ணாடியில் இளவரசி தெரிந்தாள். அவள் கடும் நோயுற்று கிடப்பதும் மருத்துவர்கள் "இனி அவள் பிழைக்க மாட்டாள் சிறிது நேரத்தில் அவள் இறந்து விடுவாள்" என்று வருத்தத்துடன் சொல்வதும் தெரிந்தது.
இதைக்கண்ட மூவரும் திகைத்தனர்.
இரண்டாமவன் "என்னிடம் எங்கு நினைத்தாலும் உடனே செல்ல கூடிய காலணி உள்ளது யாராவது அவளை காப்பாற்றுவதாக இருந்தால் அணிந்து கொண்டு செல்லலாம் " என்றான்.
அதைகேட்ட மூன்றாமவன் காலணியை அணிந்து இளவரசியிடம் சென்றான். மந்திர மாம்பழத்தை உண்ண கொடுத்தான். அவள் அதை சாப்பிட்டு நலமாடைந்தாள்.
மற்ற இருவரும் சில நாட்களில் இளவரசியின் நாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
மூவரும் தன்னால் தான் இளவரசியின் நோய் தீர்ந்தது தனக்கே இளவரசியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றனர்.
இளவரசி யாரை மணக்க வேண்டும்?? ஏன்??
என்றென்றும் நட்புடன்
dharshi.
கருத்துகள்
இளவரசி யாரை மணக்க வேண்டும்?
இளவரசி யாரை மணக்க வேண்டும்? முதலாமவன்
ஏன்??
முதலாமவன் தன்னிடம் இருந்த மாயக்கண்ணாடியை அவர்களிடம் காட்டி "மாயக்கண்ணாடியே இப்போது இளவரசி என்ன செய்கிறாள் என்பதைக்காட்டு " என்றான்.
ஆகவே இளவரசி காப்பாற்றப்பட்டால்
"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
அதைகேட்ட மூன்றாமவன் காலணியை
அதைகேட்ட மூன்றாமவன் காலணியை அணிந்து இளவரசியிடம் சென்றான். மந்திர மாம்பழத்தை உண்ண கொடுத்தான். அவள் அதை சாப்பிட்டு நலமாடைந்தாள்.
1.மூன்றாமவன் மந்திர மாம்பழத்தில் தந்திரமா காதலையும் சோர்த்துடானோ ,
2.கனிய கொடுக்கு முன்னே உன்னை காப்பாற்றுகிறேன் ஆனால் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டளையுடன் .
3. இளவரசி தன் நன்றியாக மூன்றாமவனை மணக்கலாம்
"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
இரண்டாமவன் "என்னிடம் எங்கு
இரண்டாமவன் "என்னிடம் எங்கு நினைத்தாலும் உடனே செல்ல கூடிய காலணி உள்ளது யாராவது அவளை காப்பாற்றுவதாக இருந்தால் அணிந்து கொண்டு செல்லலாம் " என்றான்.
1. மாயக்கண்ணாடியால் தெரிந்து கொள்ள மட்டும் முடிந்தது
2. மந்திர பழத்தால் சென்றால்தான் காப்பாற்ற முடியும்
3. காலணியை பயன் படுத்தி அவளை காப்பாற்றுவதாக இருந்தால் அணிந்து கொண்டு செல்லலாம் " என்றான்.
so அவளை காப்பாற்றவேண்டும் என்று நினைத்தவனை மணப்பதும் காரணமாக இருக்கலாம்
"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
அவர்கள் மூவரும் வேறொரு
அவர்கள் மூவரும் வேறொரு நாட்டிற்கு சென்று முயற்சியில் இறங்கினார்கள்.///இதன் விழக்கம் புரியவில்லை ,,,அந்த நாட்டில் ஏன் முயற்ச்சியில் ஈடுபடமுடிய வில்லை,,,வேருநாட்டில் இந்த அனுமானிச சத்திக் கிடைக்கும் வாய்ப்பு இருந்திருக்குது,,ஆகையால் இந்த சக்தி இருந்த நாட்டின் மன்னனை திருமணம் செய்துக் கொண்டால் போதுமே,,,,இந்தமூன்றும் செயல்தான் ஆகையால் அதன் தன்மை பொற்ற சக்தியே கொடுத்தவன் தான் புருஷன்,,,
ம் அதுவும்
ம் அதுவும் சரிதான்,,,இருந்தாலும்,தெரிந்தாலும்,சென்றாலும் கொடுத்தவர் தான் பொரியவர்,,,அவளுக்கு பயன் மருந்து மட்டும் தான்,,,
கொடுத்தவர் தான்
கொடுத்தவர் தான் பொரியவர்,,,அவளுக்கு பயன் மருந்து மட்டும் தான்,,,பதில் சரிதானே,,,
தெரிந்தாலும்,சென்றாலும்
தெரிந்தாலும்,சென்றாலும் கொடுத்தவர் தான் பொரியவர்,,,அவளுக்கு பயன் மருந்து மட்டும் தான்,,,படித்துபார்