அது நான் கல்லூரியில் சேர்ந்த காலம். ஆண்கள் பயிலும் பள்ளியில் படித்துவிட்டு, இருபாலரும் பயிலும் கல்லூரியில் அடி எடுத்து வைத்தேன். பெண்களிடம் பேசுறதுனாலே பயம் எனக்கு. கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் சராசரி மாணவனில் நானும் ஒருவனாக இருந்தேன்.
நான் காலேஜ்-கு கிளம்புறதே காமெடிதாங்க… காலைல 8.30 மணி பஸ் புடிக்க 8 மணிக்கு எந்திறிப்பாரு தலைவரு.[அட நான்தாங்க]. அவசர அவசரமா கெளம்பி ட்ரெஸ் சேஞ்ச் பண்ணா மணி 8.20-னு காட்டும். அங்கயும் இங்கயுமா ஒரு 5நிமிஷம் ஓடி ஒரு வழியா என் ஸாக்ஸ தேடி மாட்டுவேன் பாருங்க ஒரு பெரிய ஹாரன் சத்தம் கேட்கும். என்னனு பார்த்தா பஸ்ஸு… ஒரு பக்கம் எங்க அம்மா டிபன் ஊட்ட, இன்னொரு பக்கம் எங்க அக்கா அஸைன்மென்ட் ஷீட் எடுத்து வந்து குடுக்க [எங்க அக்கா தான் எனக்கு எப்பவுமே அஸைன்மென்ட் எழுதித் தருவாங்க] நான் பஸ் ஏறிடுவேன். உள்ள போய் எங்க அம்மா லன்ச் பாக்ஸ் எடுத்து வந்து பஸ் ஜன்னல் வழியா தருவாங்க. இது தினமும் நடக்குற தொடர் காமெடி ஸீனானது.
என் வீட்டு நிறுத்தத்திற்கு முந்தைய நிறுத்தத்தில் பேருந்தில் ஏறுபவள்தான் கிருத்திகா. நான் எப்பவும் ட்ரைவர் ஸீட்டுக்கு பின்னாடி ஸீட்ல உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு காலேஜ் போவேன். ஒரு நாள் கிருத்திகா நான் அமரும் ஸீட்டில் வேண்டுமென்றே அமர்ந்திருந்தாள். நான் எதுவும் சொல்லாமல் தயங்கியபடி அருகில் நின்றேன்.[பின்னாடி நிறைய காலி ஸீட் இருந்தது.]
“இங்க யார் பேரும் எழுதிருக்கல; யார் வேணாலும் எங்க வேணாலும் உட்காரலாம்”-கிருத்திகா.
“எந்திரி”- இது நான்.
உடனே பயந்தவளாக எழுந்து விட்டாள். நான் வழக்கம் போல் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சென்று விட்டேன்.
அதே நாள் என்னிடம் என் இங்க்லீஷ் லெக்சரர் இ.சி.இ டிபார்ட்மென்ட்-கு ஒரு வேலையாக லன்ச் வேளை-இல் அனுப்பினார்கள். நான் இ.சி.இ டெபார்ட்மென்ட் சென்றேன். அப்பொழுதுதான் கிருத்திகா இ.சி.இ என்று தெரியும். நான் சென்றதும் ரவுன்டு கட்டி ஸவுன்டு விட்டாங்க அவங்க ஃப்ரென்ட்ஸ் எல்லாம்.
“ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்டு ஒரு பொண்ணுகிட்ட பேசும் போது ‘டி’ சொல்லியா பேசுவ”-கோரஸ்
“நான் என்ன சொன்னேன்???”-நான்
“நீ எப்படி எந்திரிடீ னு சொல்லலாம்?”-கிருத்திகா.
“நான் எந்திரி-னு தான் சொன்னேங்க”-பயத்துடன் நான்.
“இல்ல நீ டி சொன்ன”-கிருத்திகா.
“இல்லங்க”-நான்
“நீ சொன்னடா லூஸு”-கிருத்திகா.
“இது வரைக்கும் சொல்லல, இனிமே அப்படிதான்டி சொல்லுவேன், நீதான்டி லூஸு, என்னடி பண்ணுவ?”-நான்
அவ ஃப்ரன்ட்ஸ் எல்லாம் கைத்தட்டி என் பக்கம் வந்துட்டாங்க.
அதுக்கு அப்புறம் காலேஜ் பஸ்-னாலே ஜாலி தான் எனக்கு. தினமும் கடலை தான்.
எல்லாத்த பத்தியும் உரையாடிருக்கோம். நாங்க விட்டு வச்ச டாப்பிக்கே இல்லைங்க. அவ சொன்ன அட்வைஸ் கேட்டுதான் காலேஜ் மாணவனா மாறினேன். நான் சீக்கிரம் கெளம்பி பஸ் ஏறினேன். காமெடி பீஸ் ல இருந்து ஸீரியஸ் ஆன பிள்ளயானேன்.
நான் படிச்ச நாலு வருஷத்துக்கும் என்னை முழுசா புரிஞ்ச என் பிரியமான தோழியானாள் கிருத்திகா.
சில பல புரளிகளைத் தாண்டி எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவள் கஷ்டங்களையும் என் கஷ்டங்களையும் பரிமாறினோம்.
என் கல்லூரி வாழ்க்கை இனிக்க எனக்கு கிடைத்த பொக்கிஷமான நட்பானவள் கிருத்திகா.
அவளுக்கு என்றும் நான் நல்ல தோழனாக, அண்ணனாக, அவளுடைய சந்தோஷத்திலும் கஷ்டத்திலும் பங்கேற்பவனாக நான் என்றும் அவள் நலத்தை விரும்பி வாழ்கின்றேன்.
இன்று பிறந்த நாள் காணும் என் அருமை கிர்த்து-கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
“அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கு சிஜு-னு பேர் வச்சது கிருத்திகா தான். இன்னைக்கும் எங்க அம்மாவிலிருந்து நெருங்கிய தோழர்/தோழிகள் வரை சிஜு என்று தான் அழைக்கிறார்கள்.”
Avalukku maapillai paathutu irukkaangalaam. Nalla maapillayaaga amayanum nu vaendikonga please…
Many more happy returns of the day my dear kirthu…










