ranjitsachin's படம்

முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம்.
பல நாட்கள் வரை முல்லா பானையைத் திருப்பித் தராததால், பக்கத்து வீட்டுக்காரர்
வந்து பானையைத் திருப்பிக் கேட்டார். அதற்கு முல்லா...

"அடடே..., உங்களிடம் வாங்கிய பானையை திருப்பிக் கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது.
அந்தப் பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது, "... என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார்.
பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு பானையும் வாங்கிச் சென்றார்.

அதேபோல் சில நாட்களுக்குப் பின் முல்லா அந்தப் பக்கத்து வீட்டுக்காரரிடம் போய்...

"முன்பு கொடுத்ததை விட பெரிய பானை ஒன்று இரவல் கொடுக்க முடியுமா?" ... என்று கேட்டார்.

பக்கத்து வீட்டுகாரர் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பெரிய பானை ஒன்றைக் கொடுத்தார்.

பல நாட்கள் ஆகியும் முல்லா பானையைத் திருப்பித் தரவில்லை. பின் தயங்கித் தயங்கி...
பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து பானையை திருப்பி கேட்டார்.

" அத ஏன் கேட்கிறீக... அந்தப் பானை நேற்றுத்தான் செத்துப் போச்சு" ... என்றார் முல்லா.
கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்...

"என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா?... பானை எப்படி செத்து போகும்...? "
என்று கோபமுற்றார்.

அதற்கு முல்லா...

" பானை குட்டி போட்டதை நம்பும் பொழுது ஏன் செத்துப் போனதை நம்பமுடியாது...? "
என்று முல்லா கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்று விட்டார்.

ஆமா... பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கிறோமோ...
அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புத்தானே...?

Source :: http://www.thamilworld.com/

7
Your rating: None Average: 7 (6 votes)

கருத்துகள்

kadhar's படம்

arumai


arumai

annaa's படம்

நன்றாய்ச் சொன்னீர்கள்


நன்றாய்ச் சொன்னீர்கள் போங்கள்..!!!
அருமை..!!


annaa