கிஷோர் மணியை பார்க்கிறான் செரியாக 9 அடிக்க நான்கு நிமிடங்கள் இருக்கிறது வானம் இருளை தலுவிகொண்டிருகிறது தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அந்த ஆள் நடமாட்டம் இல்லாத ரோடில் செல்கிறான் மனதில் ஒரு படபடப்பு, பயம் அதன் வெளிபாடு அவனது மிதிவண்டியீன் வேகம் அதிகரிக்கிறது சற்று தொலைவில் ஒரு புத்தக கடையை பார்க்கிறான் தனது மிதிவண்டியை நிறுத்திவிட்டு சுற்றி பார்க்கிறான் ஒரு மனிதனையும் காணவில்லை கடைக்குள் செல்கிறான் ஒரு 75 வயது மதிகதக்க முதியவர் ஒருவர் இருக்கிறார் கிஷோர் சில புத்தகங்களை பார்க்கிறான் அவன் கண்ணுக்கு அந்த புத்தகம் தென்படுகிறது அதன் அட்டை படத்தை பார்க்கிறான் அதில் ஒரு மனிதன் தனது இதயத்தை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறான் அதன் மேல் "வாழ்கையின் கடைசி நிமிடம்"
என்று தலைப்பு இருக்கிறது. அந்த புத்தகத்தின் விலையை கேட்கிறான் அதற்கு அந்த முதியவர் 500 ருபாய் என்று சொல்கிறார் மீண்டும் 500 ரூபாயா என்று கிஷோர் கேட்கிறான் தனது சட்டை பையில் இருந்து 500 நோட்டை எடுத்து அந்த முதியவரிடம் கொடுகிறான். அதை பெற்றுக்கொண்டு அந்த புத்தகத்தை அவன் கையில் கொடுக்கிறார் அவனை பார்த்துவிட்டு இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை மட்டும் பார்க்காதே அப்படி பார்த்தால் உன் உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறார் ஒரு வித பயத்தோடு அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டு தனது வீட்டுக்கு செல்கிறான் உள்ளே சென்று கதவை சாற்றிவிட்டு அந்த புத்தகத்தை நாற்காலியில் வைத்துவிட்டு அருகில் உள்ள தனது படுகையில் சாய்கிறான் கண்கள் இருளுகின்றது திடிரென்று கண்விழிக்கிறான் மின் விசிரியின் வேகத்தினால் அருகில் உள்ள மேஜையின் மேல் இருந்த அந்த புத்தகத்தின் பக்கங்கள் வேகமாக புரளுகிறது அவன் மனம் படபடக்கிறது அந்த 75 வயது முதியவர் சொன்ன அந்த வார்த்தை (இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை மட்டும் பார்க்காதே அப்படி பார்த்தால் உன் உயிருக்கு ஆபத்து) அவன் நினைவுக்கு வருகிறது திடிரென்று எழுந்து அந்த புத்தகத்தின் பக்கங்கள் அந்த காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் கை வைகிறான் அது கடைசி பக்கத்தில் நிற்கிறது அவனது இதயம் படபடக்கிறது பயத்தினால் அவனது முகம் வேர்வையில் நனைகிறது சற்று பயத்தை போகிகொண்டவனாய் அந்த பக்கத்தில் இருந்து தனது கையை மெல்ல வீலகி அதை படிக்கிறான்
எழுத்தாளர் - கு.பகவதிநாத்
11thhour பதிபகம், சென்னை
விலை - 74 ருபாய்
என்று அதில் எழுதி இருக்கிறது அதை பார்த்தவுடன்
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!
குறிப்பு
கதை புரியாதவர்கள் கவனத்திற்கு
(அவனை அந்த 75 வயது முதியவர் 500 ருபாய் என்று சொல்லி அதை விற்றுவிட்டார் அது அவனுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி ஒரு பொய் சொல்லி இருக்கிறார். அதை நினைத்து கிஷோர் பயம் கலந்த சிரிப்பை
சிரிக்கிறான் )
















