எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள் என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?
இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ? என்று கேள்வி வந்து விழுந்தது .
Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை, மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா என்று அடுத்த கேள்வி .
ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .
ரெண்டும் சேர்ந்து ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .
கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும் சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்
வேறு யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .
காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .
ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .
கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன் இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .
கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று கேவலமான கேள்வி .
பதில் தெரியாததால் நான் இது வரை காதலிக்க வில்லை .
போதுமா , போதுமா ..
இனிமே எவனாவது , மச்சி அப்புறம் உன் ஆளு என்ன சொல்றா ?
அப்படின்னு கேட்டீங்க ...!!!

கருத்துகள்
முடியல,ஆனா நல்லா இருக்கு,
முடியல,ஆனா நல்லா இருக்கு, 
uma
உங்களின் தாபம் தெளிவாக
உங்களின் தாபம் தெளிவாக தெரிகிறது.ஐயோ பாவம் 










