முனிவர் பரந்தாமனிடம் செல்வன் ஒருவன் வந்தான். ""ஐயா முனிவரே! தாங்கள் கோவில் கட்டுவதாக அறிந்தேன். அதற்காக நான் ஆயிரம் பொற்காசுகள் நன்கொடை தருவதாக உள்ளேன். தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றான். அவரும், ""கொண்டு வா!'' என்றார். அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தனர். தான் கொண்டு வந்திருந்த பையை அவரின் முன் ஆரவாரமாக வைத்தான் செல்வன். அதை அவிழ்த்துப் பொற்காசுகளைக் கீழே கொட்டினான். கலகலவென்ற ஓசையுடன் அவை விழுந்தன. ஒவ்வொரு பொற்காசையும் தரையில் ஓசை எழுப்புமாறு எண்ணினான் அவன். நீண்ட நேரம் ஆயிற்று. எல்லாரும் அவன் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பொற்காசுகளை எல்லாம் மீண்டும் பைக்குள் போட்டான். ""இதற்குள் ஆயிரம் பொற்காசுகள் உள்ளன,'' என்று பெருமையுடன் துறவியின் முன் நீட்டினான் அவன். ""அன்பனே! இந்தப் பொற்காசுகள் எதுவும் வேண்டாம். நீயே இவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்,'' என்றார் முனிவர். அதிர்ச்சி அடைந்த அவன், ""சற்று முன் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னீர்கள். இப்பொழுது மறுக்கிறீர்களே,'' என்று கேட்டான். ""அன்பனே! இந்த நல்ல செயலுக்கு உண்மையான அன்புடன் நீ நன்கொடை தருவதாக நினைத்தேன். விளம்பரத்திற்காகத்தான் நீ தருகிறாய் என்பது புரிந்துவிட்டது. அதனால்தான் வேண்டாம் என்றேன்,'' என்றார் அவர். நன்றி "சிறுவர் மலர்" Siruvar Kathaigal Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 1230 views கருத்துகள் nice nice Log in to post comments நன்றிங்க நன்றிங்க "கள்ளமில்லா உள்ளம் தைக்கும் முள்ளையும் ஏற்கும்" என்றும் நட்புடன், dharshi.http://siththarkal.blogspot.com/ Log in to post comments அருமை அருமை என்றென்றும் நட்புடன் தேன்மொழி. http://nanbargal-m.blogspot.com Log in to post comments நன்றிங்க நன்றிங்க "கள்ளமில்லா உள்ளம் தைக்கும் முள்ளையும் ஏற்கும்" என்றும் நட்புடன், dharshi.http://siththarkal.blogspot.com/ Log in to post comments சரியான தீர்ப்பு. சரியான தீர்ப்பு. சந்துரு Log in to post comments நன்றி சந்துரு நன்றி சந்துரு "கள்ளமில்லா உள்ளம் தைக்கும் முள்ளையும் ஏற்கும்" என்றும் நட்புடன், dharshi.http://siththarkal.blogspot.com/ Log in to post comments
நன்றிங்க நன்றிங்க "கள்ளமில்லா உள்ளம் தைக்கும் முள்ளையும் ஏற்கும்" என்றும் நட்புடன், dharshi.http://siththarkal.blogspot.com/ Log in to post comments
நன்றிங்க நன்றிங்க "கள்ளமில்லா உள்ளம் தைக்கும் முள்ளையும் ஏற்கும்" என்றும் நட்புடன், dharshi.http://siththarkal.blogspot.com/ Log in to post comments
நன்றி சந்துரு நன்றி சந்துரு "கள்ளமில்லா உள்ளம் தைக்கும் முள்ளையும் ஏற்கும்" என்றும் நட்புடன், dharshi.http://siththarkal.blogspot.com/ Log in to post comments
உடலுறவு கொண்டாலே அது சட்டரீதியான திருமணம்! உடலுறவு கொண்டாலே அது சட்டரீதியான திருமணம் தான் என்பதை ஆதரிக்கிறீர்களா? பேசலாம் வாங்க! ஆதரிக்கிறேன் இது தவறான முடிவு