ramkumark5's படம்

தென்னையூர் என்ற ஒரு கிராமத்தில் எங்கு பார்த்தாலும் வீரணன் என்ற பெயரே ஓங்கி ஒலித்தது. அதற்கு காரணம் அவன் பெயருக்கு ஏற்றபடி கிராமத்தில் நடக்கும் வீர தீர செயல்களில் எல்லாம் வெற்றி பெறுபவன் அவனே. ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் என்றால் முன்னே நின்று முதல் இடத்தை தட்டி செல்பவன். சிறு வயதில் இருந்தே இதையே வேலையாக வைத்திருந்தான். பள்ளிக்கூட படிப்பை தன் ஐந்தாம் வகுப்புடன் முடித்துக்கொண்டான்.

இவனுடைய வீர செயல்களை பார்த்து ஈர்க்கப்பட்டவன் காளையன். பக்கத்து கிராமத்து ஜல்லிக்கட்டில் நண்பர்களான இவர்கள் அன்று முதல் எல்லா பந்தயத்திற்கும் ஒன்றாகவே சென்றனர். வீர்ணன் தான் காளையனுக்கும் தைரியம், தன்னம்பிக்கை கொடுத்து அவனை போலவே இன்னொரு வீரனை உருவாக்கினான். நாளடைவில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்று நிரூபிக்கும் அளவு வீரர்களாக எல்லா போட்டிகளிலும் வெற்றி மாலை சூடினர்.

வீரணனே காளையனின் வீரத்தை பார்த்து வியந்து போனான்.போட்டி இல்லாத காலங்களில் சீட்டாட்டத்திலே பொழுதை கழித்தனர். இப்படியே இவர்கள் வாழ்க்கையில் சில ஆண்டுகள் கழிந்தது. வேலைக்கு செல்லும் எண்ணமும் இல்லாமல் வாழ்க்கையை பற்றிய பயமும் இல்லாமல் எப்படியோ பொழுதை கழித்து வந்தனர்.

அன்றொரு நாள் அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நாள். இருவரும் மிக உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டிற்க்கு புறப்பட்டு சென்றனர். இருவரும் காளைகளை அடக்கும் முயற்சியில் முனைப்புடன் இருந்தனர். அப்பொழுது வீரணனின் பின்புறம் வந்த காளையை வீரணன் கவனிக்கவில்லை. அந்த காளை வீர்ணனை காப்பாற்ற வந்த காளையனின் வயிறை பதம் பார்த்தது. கூரிய கொம்பு வயிற்றில் இறங்கியதில் நிறைய ரத்தம் வெளி வந்தது. ஆம்புலன்ஸ் வசதி கூட சரியான நேரத்திற்கு கிடைக்காததால் காளையனை காப்பாற்ற முடியவில்லை.

அன்று தான் வாழ்க்கையில் பயம் என்ற உணர்வை அறிந்தான் காளையன். தனக்கும் இப்படி ஒருநிலை ஒரு நாள் ஏற்படும் என்ற பயத்தை விட தனக்கு உயிர் கொடுத்து உயிர் நீத்த நண்பனின் இறப்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று உணர்ந்த அவன் அன்று முதல் ஜல்லிக்கட்டை மறந்து வேலைக்கு புறப்பட்டான்....

5.8
Your rating: None Average: 5.8 (5 votes)

கருத்துகள்

Rukmani's படம்

நன்று


9

நன்று

yarlpavanan's படம்

நல்ல படிப்பினை


7

நல்ல படிப்பினை


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Ponvannan's படம்

நல்ல நட்பு. நல்ல கதை.


6

நல்ல நட்பு. நல்ல கதை.