மறு நாள் காலை செல்வி எப்போதும் போல வேலைக்கு சென்றாள். அவள் தோழி மலர் என்னம்மா கண்கள் எல்லாம் சிவந்து இருக்கு. இரவு முழுவதும் தூக்கம் இல்லையோ...
செல்வி அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.
மலர்: நீ பொய் சொன்னாலும் உன் கண்கள் சொல்லுதே உண்மையினை..'
செல்வி: நீ சொல்வது சரி தான்...
மலர்: உனக்கு அந்த ஆள் நியாபகம் தானே !....
செல்வி: இல்லை மலர்... நேற்று என் அப்பாவின் நினைவு நாள். நான் மறந்தே போனேன்.அம்மா சொன்னதும் மனசு கஷ்டமாக இருந்தது. அதான் தூக்கம் வரவில்லை.
மலர்: என்னை மன்னித்துவிடு செல்வி நான் உன்னை தப்பாக நினைத்துவிட்டேன்.
செல்வி: சரி சரி... நானும், என் குடும்ப சூழலும் இப்படி இருக்கும் போது நான் எப்படி மனம் தவறி செல்வது மலர்!..... எனக்கு விருப்பம் இருந்தாலும் என் 3 தங்கைகளின் எதிர்காலம் தான் எனக்கு முக்கியம்.
மலர்: ஆமாம் செல்வி. நீ சொல்வது சரி தான். நீ தானே அவர்களை வழி நடத்தி செல்லனும்...
செல்வி:ம்... அந்த ஆள் வந்தால் நீயே அவரை என்னை சந்திக்க விடாமல் செய்து விடு மலர்.
மலர்: சரி செல்வி நான் பார்த்து கொள்கிறேன் .....
(இரண்டு நாட்கள் கழிந்தது)
3 வது நாள் தாமரை காலை 9 மணிக்கு அவசரமாக வீட்டிலிருந்த்து கிளம்பி காலை உணவு கூட உண்ணாமல் செல்வி வேலை செய்யும் கடைக்கு சென்றான்.கடைக்குள் நுழைந்ததும் செல்வியை தேடினான். ஆனால் செல்வி அவனை பார்த்ததும் வேரொரு வாடிக்கையாளரை கவனிப்பது போல் நடித்தாள்.தாமரை வேண்டும் என்றே அவள் இருக்கும் இடத்திற்கு சென்று நான் உஙக கூட பேசனும் என்றான். செல்வியோ மலரை பார்த்தாள்.
மலர்: சார் உங்களுக்கு என்ன வேண்டும் சார்.
தாமரை: எனக்கு அவங்க கூட பேசனும்.
மலர்:சார் அவ உஙக கூட பேச விரும்பவில்லை.
தாமரை: ஏன் !....
மலர்: சார் நீங்க நினைக்கிற மாதிரி பொன்னு அவ இல்லை சார்..
தாமரை: நானும் அப்படி தாங்க...
மலர்: அவங்க குடும்பம் ரொம்ப கஷ்டம் படுர குடும்பம். தயவு செய்து அவளை பார்க்க அடிக்கடி வராதிங்க சார். எஙக முதலாலளிக்கு தெரிந்த்தால் அவளை வேலையிலிருந்து நிருத்திவிடுவாரு...
தாமு செல்வியை பார்த்தவாரே அமைதியாக கடையை விட்டு வெளியே சென்றான்.......
(தொடரும்)................... 











