“முன் தினம் பார்த்தேனே, பார்த்ததும் பூத்தேனே” என்று காதலித்து பின் மணமுடித்த அல்லது “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று அம்மா/அப்பா பார்த்த பெண்ணை மணந்துகொண்ட திருமணமான ஆண்களின், அன்றைய (திருமணத்திற்கு முன்) இன்றைய (திருமணத்திற்குப் பின்) சுவாரசியமான உரையாடல்களை ரிவைண்ட் செய்யலாமா?
தி.மு. (தொலைபேசியில்) — இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே.
தி.பி. — என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு. எனக்கு ஆஃபிஸில் நிறைய வேலை இருக்கு.
தி.மு. (பீச்சில்) – இந்த அலை எவ்வளவு அழகா இருக்கு. உன் கூட நிறைய நேரம் இப்படியே உட்கார்ந்திருக்கலாம் போல இருக்கு.
தி.பி. — போலாமா ? ரொம்ப நேரமாச்சு.
தி.மு. (ஹோட்டலில்) – நீ ஐஸ்கிரீம் சாப்பிடற அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தினமும் இங்கேயே மீட் பண்ணலாமா?
தி.பி. — ஹோட்டல் எதுக்கு, ரொம்ப நேரம் வெய்ட் பண்ணனும். வீட்டிலேயே சிம்பிளா ஏதாவது பண்ணிடேன்.
தி.மு. (பஸ் ஸ்டாப்பில்)– ரொம்ப நேரமா பஸ்ஸுக்காக வெய்ட் பண்றீங்க போல இருக்கு. நான் வேணா டிராப் பண்ணட்டுமா?
தி.பி. — நீ பஸ்ல போய்டறியா? எனக்கு ஆஃபிஸுக்கு சீக்கிரம் போகணும்.
தி.மு. – ஆஃபிஸில இன்னிக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சு. அதான் பர்மிஷன் போட்டு உன்னைப் பார்க்க வந்தேன்.
தி.பி. – ஆஃபிஸில இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. ஈவ்னிங் வர லேட்டாகும்.
தி.மு. – நீ பேசறத கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கு.
தி.பி. – ஏன் தொணதொணன்னு பேசிண்டே இருக்கே?
தி.மு. – இந்த லெமன் எல்லோ கலர் டிரஸ்ஸில தேவதை மாதிரி இருக்கீங்க.
தி.பி. – ஏதாவது ஒரு டிரஸ் போட்டுண்டு சீக்கிரம் கிளம்பேன், எவ்ளோ நேரம்.
தி.மு. – உன் கையால பண்ணா சாதாரண சாப்பாடு கூட விருந்து மாதிரி இருக்கு.
தி.பி. – சே, மனுஷன் சாப்பிடுவானா இந்த சாப்பாட்டை.
தி.மு. – இன்னிக்கு ஹாலிடே தான, எங்கயாவது வெளில போலாமா?
தி.பி. – நாளைக்கு கண்டிப்பா இந்த வேலையை முடிச்சு கொடுத்தாணும். அதனால வீட்டில பண்ணலாமேன்னு இருக்கேன்.
தி.மு. – ஒண்ணே ஒண்ணு தரட்டுமா ?
தி.பி. – ஒண்ணு குடுத்தேன்னா கன்னம் வீங்கிடும், ஜாக்கிரதை.

கருத்துகள்
மம்ம் மெயில்ல
மம்ம்
மெயில்ல படிச்சிருக்கேன். யாரோ எழுதியது.
ஒரு வேண்டுகோள், இதையெல்லாம் கதைல போடாம வலைப்பதிவுல போட்டா பொருத்தமா இருக்கும்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
இந்த ஆண்களே இப்படித்தான்.
இந்த ஆண்களே இப்படித்தான்.

uma
hello girls marriageka
hello girls marriageka appuram opposite ayiruvanka 
நீங்க மட்டும் (ஆண்கள்)மட்டும்
நீங்க மட்டும் (ஆண்கள்)மட்டும் ஒழுங்கா? 
uma



















