தளபதி’ 20 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த்,மம்முட்டி நடித்து வெளிவந்த மெஹா ஹிட திரைப்படம். இதில் கற்பனையாக, நாம் சில உல்டாக்களை செய்ய்யப்போகிறோம். அதாவது, பெண்களுக்கான கருப்பை இயற்கையின் மாற்றத்தால் கி.பி 1900ல் ஆண்களுக்கு வந்துவிடுகிறது. இந்நிலையில் தளபதி எடுக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஒரு கற்பனை. மணிரத்னம் பிரசவத்திற்காக அப்பா வீட்டுக்கு போய்விட சுஹாசினி இந்த படத்தை இயக்குகிறார். இனி.......
தளபதி-ரீ லோடட்
கி.பி 1959.
மலையோரக் கிராமம். ஊர் மக்கள் அனைவரும் போகி பண்டிகைக்கு கிடைத்த்தை போட்டு கொளுத்தி ஆடி பாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு வீட்டில் தன் கணவியை மருத்துவர் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்.
‘’டக்....டக்....டக்...’’ என கதவு தட்டப்படுகிறது.
‘’எனுங்க யாரோ கதவை தட்டுறாங்க யாருன்னு போயி பாருங்க’’ என மருத்துவரின் கணவி கூறினாள்.
மருத்துவர் கதவை திறந்து பார்க்கிறார். அங்கே.....
கதவுக்கு வெளியே.....ஒரு இளம்பையன் பிரசவ வேதனையில் துடித்தபடி நிற்கிறான். சற்று நேரம் ஏற இறங்க பார்த்த மருத்துவர் கதவை படாரென சாத்திவிட்டு உள்ளே போகிறார்.
‘’13,14 வயசு இருக்கும்...நிறை மாசம்’’ என மருத்துவர் சொல்கிறார்.
‘’பிரசவம் பார்க்க வேண்டியதுதானே’’ என அவரின் கணவி கூறினாள்.
.
‘’ அய்ய்யோ...நான் பார்க்க மாட்டேன்....அவன் கழுத்துல தாலி இல்லேங்குறேன்..என்னால முடியாது’’ என மருத்துவர் கூச்சலிடுகிறார்.
‘’மார்கழிதான் ஓடி போச்சு நந்தலாலா....என ஊரே பாடி குதூகலாமாயிருக்கிறது.
சற்று தொலைவில், ஒரு மாட்டுக்கொட்டகையில் அந்த இளம்பையன் பிரசவ வேதனையில் துடிக்கிறான். சிறிது நேரத்தில் பசு மாடுகளுக்கு மத்தியில் அவனுக்கு குழந்தை பிறக்கிறது.
குழந்தையை ஒரு கூட்ஸ் வண்டியில் அழுதபடியே வைக்கிறான். சிறிது நேரத்தில் வண்டி கிளம்பிவிடுகிறது. அந்த பையன் அழுது துடிக்கிறான்.
‘’சின்ன தந்தையவன் பெற்ற ராசாத்தி’’ என பிண்ணனி பாட்டுடன் அந்த குழந்தை ரயிலில் பயணிக்கிறது.
(பெயர் ஓடுகிறது)
கூட்ஸ் ஒரு ஊரில் போய் நிற்கிறது. சில சிறுமிகள் அரிசி திருட அந்த வண்டிக்குள் நுழைகிறார்க்ள. அப்போது ஒரு குழந்தை அழும் குரல் கேட்டு அதை தூக்குகிறார்கள். அதை ஒரு பரிசிலில் வைத்து ஆற்றில் அனுப்புகிறார்க்ள. அப்போது ஒரு போலிஸ்காரி வந்து துரத்த ஓடிவிடுகிறார்கள்.
அந்த பரிசில் ஆற்றில் ஓடி ஒரு பேட்டை பக்கம் வந்து ஒதுங்குகிறது. ஒரு கிழவன் அந்த குழந்தையை எடுக்கிறான்.
அந்த குழந்தை சற்று வளர்ந்து பெரியவளாகி ஆற்றோரம் நிற்கிறாள். அந்த கிழவன் அருகில் வருகிறான்.
‘’ஏன் தாயி ,இங்கே நிக்கிறே’’ என பரிவுடன் விசாரிக்கிறான்.
‘’ஏன் தாத்தா,என் அப்பன் என்னை தூக்கி போட்டுட்டான்’’ என வினவுகிறாள். கிழவன் பரிவுடன் அணைத்துக்கொள்கிறான்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு.....
கலெக்டர் மதுபாலா தலைமையில் ஒரு ஊரில் நிலத்தடியிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சிக்கூத்தாடுகிறார்கள்.
அதில் ஒரு கிழவன் ஜெய்சங்கரிடம் சொல்கிறான் ‘’ஏம்பா ஒரு பொண்ணோட நிறுத்திட்டே...இன்னொன்னு பெத்து போட்டிருக்கலாம்ல,10 ஊரு பொழச்சிருக்குமேப்பா... என கிண்டி விட்டு போகிறான்.
ஜெய்சங்கர் அதைக்கேட்டு சோகமாகிறார். ஸ்ரீவித்யா பரிவுடன் அவர் தோளில் கை வைக்கிறார்.
‘’நடந்தது உங்க தப்பு இல்லீங்க’’ என ஸ்ரீவித்யா கூறுகிறார்.
ஜெய்சங்கர் அழுதபடியே ‘’அந்த பொண்ணு இப்ப எங்கிருக்காளோ...எப்படி இருக்காளோ’’ என வருத்தப்படுகிறார்.
காட்சி மாறுகிறது.
ஷோபனா கொட்டும் மழையில் பானுப்பிரியாவை முறைத்தபடி நிற்கிறாள். பானுப்பிரியாவும் ஷோபனாவை வெறியுடன் முறைத்துக்கொண்டிருக்கிறாள்.
குழாயடியில் கொட்டும் மழையில் இருவருக்கும் கடுமையான சண்டை நடக்கிறது.. ஷோபனா பானுப்பிரியாவை குடத்தாலேயே அடித்து குற்றுயிரும் குலையுயிறுமாக ஆக்குகிறாள்.
காட்சி மாறுகிறது.
வீட்டில் தாத்தாவுடன் கோவை சரளா அமர்ந்திருக்கிறாள்.
‘’இன்னிக்கி இவ என்ன பண்ணுனான்னு கேளு’’ என கோபமாக சரளா கூறினாள்.
‘’இவ யாரை அடிச்சான்னு தெரியுமா? அந்த பானுபிரியா யாருன்னு தெரியுதா? ‘’என மேலும் கோபத்துடன் கூறினாள்.
உடனே ஷோபனா கோபமாக ‘’ அவ யாரா இருந்தா எனக்கென்ன? அவ என்ன பண்ணினான்னு கேளு’’ என கூறினாள்.
அருகிலிருந்த ஒருத்தியை அழைத்து தாத்தா முன் நிற்க வைத்து’’சொல்லு, அவ என்ன செஞ்சான்னு சொல்லு’’ என கோபமாக கூறினாள்.
அவள் அழுதபடியே சொல்லத்தொடங்கினாள்
‘’பானுகிட்ட கடன் வாங்கியிருந்தேன். தவணையில திருப்பி கொடுத்துகிட்டிருந்தேன். இந்த மாசம் கட்ட முடியல...புள்ளையோட ஸ்கூல் செலவுக்கும் , மருத்துவமனை செலவுக்குமே சரியாப்ப்போச்சு....
‘’அதுக்கு அந்த பானு என்ன சொன்னா...சொல்லு’’ என ஷோபனா மேலும் கோபத்துடன் கூறினாள்.
‘’புள்ளைதான் முக்கியம்...பார்த்துக்கோ..அதுவரைக்கும் உன் கணவி என்னோட இருக்கட்டும்னு.......என் கண்ணு முன்னாலேயே அவரை இழுத்துகிட்டு போனாள்’’ என மேலும் அழுத படியே கூறினாள்.
ஷோபனா உச்ச வெறியில் கத்தினாள் ‘’அழாதே...அழாதே.....’’ எல்லாரும் வேடிக்கை பாத்துகிட்டு நிக்கிறாங்க...ஏன்....அவ கீதாவோட ஆளு.....கீதான்னா எல்லாருக்கும் அவ்ளோ பயம்...என்னடி பண்ணுவா அந்த கீதா..என்னடி பண்ணுவா அந்த கீதா ‘’ன்னு கோபமாக ஷோபனா கூறினாள்.
காட்சி மாறுகிறது.
மருத்துவமனை.
கீதா காரிலிருந்து இறங்கி உள்ளே வருகிறாள்.
பானுவின் அருகில் போய் நிற்கிறாள்.
‘’பானு....பானு’’ என எழுப்புகிறாள்...அவளிடம் அசைவில்லை.
டாக்டரிடம் செல்கிறாள். ‘’டாக்டர் பானு பிழைப்பாளா? என கேட்கிறாள். டாக்டர் ‘’சொல்ல முடியாது ‘’ என்கிறாள்.
கீதா மனோரமாவிடம் பார்த்து கேட்கிறாள்.
‘’எப்டி நடந்தது?’’
மனோரமா சொல்கிறார் ‘’கீதா கொஞ்சம் பொறுமையா....’’என இழுக்கிறார்.
கீதா கோபமாக’’எப்படி பொறுமையா இருக்குறது? அங்க பாருங்க...அப்புறம் பேசுங்க....எத்தனை பேரு? என கேட்டாள்.
‘’எத்தனை பேரு சேந்து செஞ்சாங்க’’ என மேலும் கோபமாக கேட்டாள்.
மனோரமா மெதுவாக’’ஒரு ஆள்’’ என கூறினார்.
‘’யாரு’’ கீதா.
‘’ஷோபனா....’’ என மனோரமா இழுத்தார்..
‘’போய் கூட்டிட்டு வா ‘’ என கூறிவிட்டு கோபமாக வெளியேறினாள்.
காட்சி மாறுகிறது
தனது பேட்டையில் ஷோபனா தன் தோழிகளுடன் ‘’ராக்கப்பா...கைய தட்டு ‘’ என குத்தாட்டம் போட்டு கொண்டிருக்கிறாள்.
ஆட்டத்தின் முடிவில் தன் தோழர்களுடன் தம் அடித்தபடி செல்லும் ரஜினியை பார்த்து காதலாகிறாள்.
ஆட்டம் முடிந்து வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் ஷோபனாவை கீதாவின் ஆட்கள் வழிமறிக்கிறார்கள்.
ஒருத்தி சொன்னாள்’’கீதா கூட்டிட்டு வரச்சொன்னா....நீயா வரியா இல்ல.....கூட்டிட்டு போகனுமா’’ என்கிறாள்.
ஷோபனா அவர்களை அற்பமாக பார்த்துவிட்டு கடக்க எத்தனிக்கிறாள். ஷோபனாவின் தோளில் கை விழுகிறது.
‘’கையை எடு’’ என ஷோபனா கூறுகிறாள்.
‘’எடுக்கலேன்னா என்னடி பண்ணுவே’’ என கூறிய கீதாவின் ஆட்களை தூக்கிபோட்டு மிதித்து குமுறுகிறாள்.
‘’என்னை பாக்கனும்னா...உங்க கீதாவை இங்க வரச்சொல்லு’’ என கூறிவிட்டு கிளம்பினாள்.
காட்சி மாறுகிறது
ஷோபனா தன் தோழிகளுடன் அமர்ந்திருக்கிறாள்.
ஒரு சிறுவன் அழுதபடி ஓடி வருகிறான். ‘’அம்மாவை மருத்துவமனைல சேத்திருக்கு..காசே இல்லை ‘’ என்கிறான்.
உடனே ஷோபனா...தன் தோழிகளிடம் பார்த்து ‘’உன்கிட்ட இருக்க..உன்கிட்ட இருக்கா’’ என கேட்கிறாள். தோழிகளிடம் இருப்பதை பிடுங்குகிறாள். பணம் பத்தவில்லை என்ன செய்வது என யோசிக்கிறாள்.தூரத்தில் ரஜினி வருவதைக கண்டு அவரை அழைக்கிறாள். ‘’கையில பணம் வச்சிருக்கியா’’ என கேட்கிறாள். அவர் திருதிருவென முழிக்கிறார். அவர் கையிலிருந்த வாட்சை கேட்கிறாள். அவர் தரமுடியாதென மறுக்க ...அதை பிடுங்கி அந்த சிறுவனிடம் கொடுத்தனுப்புகிறாள். அந்த சிறுவனின் அப்பாவுக்கு இரத்தம் கொடுக்கிறாள்.
கொடுத்துவிட்டு வீட்டுக்கு தன் தோழியுடன் வந்து கொண்டிருந்த ஷோபனாவை கீதாவின் கார் வழி மறிக்கிறது.
கீதா ஷோபனாவை நோக்கி வருகிறாள்.
‘’பானு ஹாஸ்பிடல்ல இருக்கா....அவளுக்கு எதாவது ஆச்சு ...நீ இருக்க மாட்டே..’ என கூறுகிறாள்.
திரும்பி நடக்கிறாள்.
அப்போது ஷோபனா சத்தமாக ‘’கீதா,என்ன பண்ணுவே...உன ஆளுங்களை வச்சு என்னை கொல்லுவியா? நியாயம்னு ஒன்னு இருக்கு? உன பானு என்ன செஞ்சான்னு கேளு’’ என கூறினான்.
தன் ஆட்களிடம் கீதா கேட்கிறாள்’’என்ன செஞ்சா’’
அவர்கள் அமைதியாக இருக்கிறாள்.
மீண்டும் கீதா ஷோபனாவின் அருகே வருகிறாள்.
‘’பானு என்ன செஞ்சான்னு எனக்கு தெரியாது...பத்து வருஷமா எங்கூட இருந்திருக்கா...அவ வரலே..நீ இருக்க மாட்டே ‘’என கூறிவிட்டு கீதா செல்கிறாள்.
காட்சி மாறுகிறது
ரஜினி நடனம் கற்றுகொண்டிருக்கும் இடத்திற்கு ஷோபனா வருகிறாள். அன்று பிடுங்கிய வாட்சை திருப்பி வைத்துவிட்டு திரும்பி நடக்கிறாள். வாட்சை எடுத்துக்கொண்டு ரஜினி ஷோபனாவிடம் வருகிறார். அதை அவளிடமே திருப்பி கொடுக்கிறார்.
‘’உன் பேரு என்ன’’ என்றாள் ஷோபனா.
‘’சுப்பு’’
‘’சுப்ரமணி’’ என்கிறார் ரஜினி.
அதை வாங்க மறுத்த ஷோபனா ‘’இங்க பாரு சுப்பு,நல்லது செய்ய நினைச்சா அதை உன் கையாலேயே செய்’’ என சொல்லிவிட்டு திரும்பி நடக்கிறாள்.
காட்சி மாறுகிறது
மருத்துவமனையில் பானு இறந்துவிடுகிறாள். அவளது நிறைமாத மனைவன் தினேஷ் இருட்டான மூலையில் அழுத படியே அமர்கிறான்.
காட்சி மாறுகிறது
ஒரு இஸ்லாமிய இறுதி ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் ஷோபனாவை காவல் துறை கைது செய்கிறது.
காட்சி மாறுகிறது.
காவல் நிலையம்.
தலைமைக்காவலி ஷோபனாவிடம் ‘’உன் பெயர் என்ன ‘’ என கேட்கிறாள்.
‘’ஷோபனா’’ என்கிறாள்.
‘’உன் அம்மா பெயர் என்ன?
ஷோபனா ஒன்றும் கூறாமல் அமைதியாக இருக்கிறாள்.
போலிஸ்காரி வடிவுக்கரசி அவள் அருகில் வருகிறாள்.
‘’காது கேக்கல.....உன் அம்மா பேரு என்னடி?’’
‘’தெரியாது’’
‘’உன் அப்பா பேரு என்னடி?’’
‘’தெரியாது’’
வடிவுக்கரசி ஷோபனா மேல் காறித்துப்புகிறாள்...’’அம்மா பேரு தெரியாது....அப்பா பேரு தெரியாது’’ என ஏளமாக பேசிய வடிவுக்கரசியை அங்கேயே ஷோபனா குத்தி குமுறுகிறாள்.
‘’தெரியாதுடி’’
காட்சி மாறுகிறது
லாக் அப்பில் ஷோபனாவை காட்டிவைத்து வடிவுக்கரசி லாடம் கட்டுகிறாள்.
ஷோபனா அடி தாங்க முடியாமல் ‘’அப்பா ‘’என அலறுகிறாள்.
காட்சி மாறுகிறது
மைன்ட் வாயஸ் கேட்டு ஜெய்சங்கர் திடுக்கிட்டு விழிக்கிறார்.
காட்சி மாறுகிறது
உண்மையை உணர்ந்த கீதா சிறையில் இருக்கும் ஷோபனாவை வெளியில் எடுக்கிறாள். அன்றிலிருந்து இருவரும் இணைபிரியா நண்பர்களாகிறார்கள்.
(ஹி....ஹி...ஹி...மீதியை இதே ஸ்டைலில் மனத்திரையில் காண்க)
கருத்துகள்
சிறப்பு நண்பரே...நல்லவேளை
சிறப்பு நண்பரே...நல்லவேளை நீங்க டைரக்டரா ஆகலை...
ayyo samy ... mudiyala pa..
ayyo samy ... mudiyala pa..
க்ளைமாக்ஸ் எழுதாம
க்ளைமாக்ஸ் எழுதாம விட்டுட்டிங்களே.......







