விடலை பருவம்.ஆண்,பெண் இருவருக்கும் மனரீதியாவும் உடல்ரீதியாகவும் நிறைய மாற்றங்களை கொண்டு வரும்.அதுவும் பசங்களுக்கு நல்ல இருந்த குரல், கோலிகுண்டை டால்டா டப்பாவில் போட்டு உருட்டியது போல் உடைந்து ஒலிக்கும்.மீசை வளர்ந்துவிட்ட நண்பன்மேல் பொறமை இருந்தாலும்,ரகசியமாய் "எப்புடி மாப்ள உனக்கு மட்டும் அதுக்குள்ள மீசை வளந்துரிச்சி" அவன் உடனே கட்டபொம்மனாக மாறி மீசையை முறுக்கியபடியே " அதெல்லாம் அப்படித்தானே மாப்ளே"என்பனே தவிர தப்பி தவறியும் ரகசியத்தை சொல்லிவிட மாட்டான்.பிறகு தான் அது ஹார்மோன் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது விளங்கும்.தலை முடி மீது திடீர் கவனம் அதிகரிக்கும். ஒருத்தருக்கும் தெரியாமல் ஃபேர் அன்ட் லவ்லி பயன்படுத்தி கலர் ஏத்த தோன்றும்.ரெண்டு நாள் ஜிம்முக்கு போய்விட்டு அர்நால்ட் போல் கக்கத்தை விரித்தபடியே நடக்க தோன்றும்.ஊரில் இருக்கும் எல்லா மயில்களும் நம்மை லவ் பண்ண வரிசையில் நிற்பதாய் தோன்றும்.மயில்கள் பார்க்கும்போது மட்டும் சும்மா தேமேவென தெருவில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை கதற கதற கொஞ்ச தோன்றும்.மொத்தத்தில் சுகமான இம்சையாக இருக்கும்.
எனக்கும் அப்படிதான் இருந்தது.எங்கள் தெருவிற்கு ஸம்மர் ஹாலிடேஸுக்கு புதியதாய் ஒரு மயில் வந்திருந்தது.சென்னையிலிருந்து வந்திருந்தது.அப்போதிருந்தே சென்னை என்றால் எனக்கு ஒரு கிறக்கம்,இன்று வரை அது மாறவில்லை.மயில் சாயந்திரம் வேளைகளில் தெருவில் சின்ன குழந்தைகளை சேர்த்துக்கொண்டு விளையாடும்.அதில்ஒரு குழந்தையை பிடித்து அவள் பெயரை கேட்டுவிட்டிருந்தேன்.மயிலின் பெயர் விஜி.பசங்களுக்கு நான் தான் சொன்னேன்.எல்லோருக்கும் புதிதாய் தெம்பு வந்து விட்டிருந்தது.
நாங்கள் எப்பொதும் விளையாடும் இடத்தில் பாட்டிங் செய்யும் இடம் தரமானதாக இல்லை எனவும் அது ஆட்டத்துக்கும் தெருவிற்கும் வாஸ்துபடி சரி இல்லை எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆடுகளம் மயிலின் வீட்டின் அருகில் மாற்றப்பட்டது.அங்கு ஆடினால் தான் விளையாட்டின் தரமும் உயரும் எனவும் சொல்லப்பட்டது.நிஜமாகவே தரமும் உயர்ந்தது,மயில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே பையன்கள் விழுந்து விழுந்து பௌலிங் போட்டார்கள்,"ஹௌவ்விஸ்தாட்..." என்று சத்தமாக மயிலுக்கு கேட்கவேண்டும் என்றே அவுட் கேட்டார்கள்.அதோடு பையன்களுக்கு விளையாடும் போது அடிக்கடி தாகம் எடுக்கும். அவ்வப்போது மயிலின் வீட்டில் தாகசாந்தி நடக்கும்.
ஆனால் அது கொஞ்ச நாளைக்கு தான்.மயிலின் அத்தைக்கு அவ்வளவு பரந்த மனது இல்லை".எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போய் தண்ணி குடிச்சிகோங்கடா,இனி எங்க வீட்டுவாசல் ல குச்சிய நட்டிங்கன்ன அவ்ளோதான் சொல்லிட்டேன் ஆமா" மாமி மங்களம் பாடி விட்டார்.அன்றிலிருந்து மாமியும் எங்களுடன் பில்டிங்கில் இணைந்துகொண்டார்.தப்பி தவறி பந்து அவர் வீட்டு பக்கம் சென்றுவிட்டால் அவ்ளோதான்.பந்தை அரிவாள்மனையால் சரிபாதியாக வெட்டி வெளியே எறிந்துவிடுவார்.
"டேய் அவ வீட்டு வாசல்ல தானே ஸ்டும்ப் நடக்கூடாது,எதுத்த வீட்டு வாசல் ல நடுவோம்ட அப்போ பத்ரகாளி என்ன செய்றன்னு பாப்போம்"
"அதுக்காக பத்ரகளின்னு எல்லாம் சொல்லாதடா"
"தோடா நல்லவரு சொல்றாரு கேட்டுகொங்கடா,டேய் நீ மட்டும் தனிய ரூட் போடலாம்னு நினைக்காத"
ஒண்ணா மண்ணா இருந்த கூட்டத்தில் கலகம் ஏற்பட்டது.அப்புறம் பஞ்சாயத்து பண்ணி,வெற்றி பெறுபவன் தான் தலைவன் மற்றவரெல்லாம் தொண்டர்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது.அதற்க்கு பிறகு அனைவரும் தனி தனியாக வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்.
திறமை காட்டும் படலம் அரம்பமகிருந்தது.ரெண்டு கையை விட்டு சைக்கிள் ஓட்டுவது,எப்பொதும் காம்ப்ளான் குடித்தது போல் உற்சாகமாக எதாவது பாடியபடியே திரிவது,க்ரிகெட்டில் கோல் போடுவதன்று வகை தொகையில்லாமல் திறமையைக் காட்டினார்கள் பையன்கள்.
தெருவில் நான் எதற்கும் இருக்கட்டுமே என்று கொஞ்சம் நல்ல பெயர் வாங்கி வைத்திருந்தேன்.சின்ன குழந்தைங்களுடன் விளையாடுவது,பெரியர்வகளுக்கு மரியாதை குடுப்பது போல் நடிப்பது,அக்கம் பக்கத்தில் யார் சொன்னாலும் கடைக்கு போய் சாமான் வங்கி தருவது என்று பொறுப்பான சிடிசன் அக படம் போட்டு வைத்திருந்தேன்.அதனால் எல்லா தெருவில் குழந்தைகளும் எனக்கு பழக்கம்.அதில் இரண்டு குழந்தைகள் மயிலுக்கு நெருக்கமாகி இருந்தார்கள். ரொம்ப வசதியாய் போனது. வாண்டுகள் கிளியோடு இருக்கும் போது கண்டுக்காமல் செல்வேன். அவர்களும் நான் கண்டுக்காமல் போவதைப் பார்த்து கூப்பிடுவார்கள். நானும் சந்தடி சாக்கில் பராக்கிரமத்தைச் குழந்தைகளுக்குச் சொல்லுவதுபோல் ஒரு பிட்டைப் போடுவேன். இப்பிடி நான் நடத்திய மெகாசீரியல் ஒரு நாள் ஒர்க் அவுட்டானது. கண்டுக்காமல் போன என்னை கூப்பிட்டது குழந்தைகளல்ல...மயில் . ஆம் சும்மா போய் கொண்டிருந்த என்னை கூப்பிட்டது மயில்!!!!
மயில் கூப்பிட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை களும் ஓடவில்லை,என்னதான் தூரத்தில் கலாய்த்திருந்தாலும் நேருக்கு நேர் பேசுவதற்கு என்னமோ செய்தது.ஆனால் மயில் கூப்பிட்டது என்னவோ உப்பு சப்பில்லாத சாதாரண மேட்டர்க்கு,நான் சந்தர்பத்தை நழுவ விடாமல்,கடலை சாகுபடி செய்வதற்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன்,அப்போது ஒரு குழந்தை
"அண்ணா உங்களுக்கு இந்த அக்கா ஒரு பேரு வச்சிருக்கிங்க "
"சொல்லாதேன்னு சொன்னேன்லே"குழந்தை சொல்லிவிடதே என்று மயிலுக்கு வெட்கம்.
"உங்களுக்கு இந்த அக்கா டெண்டுல்கர்ன்னு பேரு வச்சிருக்றாங்க,நீங்க அவர மாறியே கிரிக்கெட் விளையடுறேன்கலம் "
வெல்...இதெல்லாம் ஒன்னுமில்ல..போன மேட்சுல..." என்று நான் மானே தேனே போடுவதற்குள் தூரத்தில் வானரப் படை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களுக்காக கொஞ்ச நேரம் நல்ல சிரித்துப் பேசுவது மாதிரி படம் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வயத்தெரிச்சல் வானரம் என் வீட்டுக்கு ஓடியது. எதாவது செய்து நான் கடலை போடுவதை வீட்டில் மறைமுகமாக தெரியப்படுத்தும் வழக்கமான நல்லெண்ணம் தான். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியுமாகையால் எதிர் பக்கமாக நழுவினேன்.
"டெண்டுல்கர்,டெண்டுல்கர்,டெண்டுல்கர்" இந்த பெயரும் நல்லா தான் இருந்தது.
"டேய் டெண்டுல்கர் இங்க வாடா"அதற்குள் சிபிஐ ஒரு குழந்தையை மடக்கி விஷயத்தை கறந்திருன்தது. டீமில் ஒருத்தனுக்கு டெண்டுல்கர் ரொம்பப் பிடிக்கும். அவனும் டெண்டுல்கர் மாதிரி குட்டையாக கொஞ்சம் சதைப்பிடிப்புடன் இருப்பானாகையால் அவனுக்கு தான் தான் டெண்டுல்கர் என்று நினைப்பு.
"என்னடா சோலோ சோலையப்பன் மாதிரி அங்கே தனியா கச்சேரி நடத்திட்டு வந்தா எங்களுக்கு விஷயம் தெரியாதா என்ன?டெண்டுல்கர் .....க்ர்ர்ர்ர்ர் தூ...எல்லாம் நேரம் டா"
"டேய் நிப்பாட்டுடா...ரொம்ப ஓட்டாதீங்கடா...நான் டெண்டுல்கர் மாதிரி ஸ்கொயர் ட்ரைவ் பண்ணறேன்னு அந்தப் பொண்ணு பெயர் வைச்சிருக்கா...உனக்கு வேனும்ன்னா நீயும் நல்ல பவுலிங் போட்டு கபில் தேவ்னு பெயர் வாங்கிக்கோ யாரு வேணாம்ன்னா"
"யாரு ...நீ...கேட்டுக்கோங்கடா கிழிச்ச கோமணம் மாதிரி இருக்கற தெருவுல அய்யா ஸ்கொயர் ட்ரைவ் அடிச்சாராம் ..அவ பார்தாளாம் அதனால டெண்டுல்கராம் ...அவளுக்கு ஸ்கொயர் ட்ரைவ்ன்னா என்னன்னு தெரியுமாடா?" - டெண்டுல்கர் குட்டையனுக்கு ரொம்பவே வயித்தெரிச்சல்.
ஒருநாள் மயில் அவள் அத்தையுடன் கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்தது.நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். குட்டையன் தான் பேட்டிங்.
"டேய் டெண்டுல்கர்,ஒரிகினல் டெண்டுல்கர் எப்படி விளையாடுவார்ன்னு இப்போ காட்டறேன் பார்துக்கோ...எல்லாரையும் பார்த்துக்கச் சொல்லு...டேய் மொக்கை கரெக்டா பாலைப் போடுறா"
குட்டையன் அடித்த பந்து நேராக மயிலின் டிக்கியை பதம் பார்த்துவிட்டது.நான் ஃபீல்டிங்கில் இருந்ததால் நான் தான் பந்தைப் பொறுக்கப் போயிருந்தேன். மயிலுக்கு கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. அவள் அத்தைக்கு அதற்குள் சாமியேறியிருந்தது.
தெருவுல நடக்கமுடியல...என்ன க்ரிக்கெட்டோ கருமாந்திரமோ...க்ரவுண்டுக்குப் போங்கடான்ன ...கேட்டாத்தானே...எல்லாம் வானரக் கூட்டமா இருக்கு...யாருடா பந்த அடிச்சது"
இன்னொரு தீவிரவாதியும் சேர்ந்து கொண்டார். "பையன்கள் மாதிரியா நடந்துகரனுங்க ...எல்லாம் பிசாசுகள்"
நான் அடிக்கல மாமி...நான் பீல்டிங் தான்...அவன் தான்..." - எங்கே அடிச்ச மறுநிமிடமே இடமே காலியாயிருந்தது. தெரு கிரிக்கெட் விதிமுறைகளின் தலையாய கோட்பாடே இது தான். ஆள் மேல் பட்டுவிட்டால் மறுநிமிடமே எஸ்.வீ.சேகர் ட்ராமாவில் வருவது மாதிரி மறைந்துவிட வேண்டும். விட்டிருந்தார்கள். நான் தான் பேக்கு மாதிரி மாமி சாமி என்று நின்று கொண்டிருந்தேன்.
நல்ல வேளை என் தலை தப்பியது. பந்தைக் கேட்டால் பல்லை உடைத்துவிடுவார்களோ என்று அப்பிடியே ஓடிவிட்டேன். அடுத்த நாள் மயிலை பார்த்து மன்னிப்பு கேட்கலாமென்று போன போது...குட்டையன் என்க்கு முன்னால் ஆஜராகியிருந்தான். என்னமோ சிரித்து சிரித்துப் பசப்பிக் கொண்டிருந்தான். நான் பார்க்கிறேன் என்று ஓவராய் பல்லைக் காட்டிக்கொண்டிருந்தான்.
"பார்தீல்ல...எப்பிடி சிரிச்சு சிரிச்சு பேசின்னேன்னு...." குட்டையன் சாயங்காலம் கெக்கலித்தான்.
"அவளுக்கு நான் விளையாடற ஸ்டையில் பிடிச்சிருக்காம்...நான் கங்குலி மாதிரி விளையாடறேனாம்...அதனால எனக்கு கங்குலின்னு பெயர் வைச்சிருக்காளாம்"
"இந்த விஷயம் அவளுக்கு தெரியுமா?"
"தோடா இவரு மட்டும் டெண்டுல்கரம் நாம நம்பனுமாம்...ஆனா இவரு மாட்டாராம்"
அப்புறம் கபில் தேவ், ஸ்ரிகாந், என்று நிறைய பேர் வந்தார்கள். போட்டியும் பலமாக இருந்தது. இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை...அப்புறம் கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து..கிளி கூண்டவிட்டு பறந்து போயிடுத்து...!
----------தொடரும்
கருத்துகள்
எப்படி உன்னால மட்டும்
எப்படி உன்னால மட்டும் இப்படிலாம் எழுத முடியுது... 
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
மச்சி ஹுமௌர் கொஞ்சம் கம்மி
மச்சி ஹுமௌர் கொஞ்சம் கம்மி தான் டா, ஆனா நல்ல இருக்கு டா 
மச்சி எனகென்னமோ உன் தோஸ்து
மச்சி எனகென்னமோ உன் தோஸ்து மேல டவுட்...அவன் அநேகமா மாமி டிக்கிய தான் எய்ம் பண்ருபானு தோணுது???? 
Best யாரு... ???
Best யாரு...
??? :* ???
அருமையான கதை

உங்களில் ஒருவன்...
சத்யன் அ.
super
super

சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்




















