Kaipulla's படம்

அப்பொழுது நான் படித்து கொண்டிருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருந்ததால் ஒன்பதாவது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டேன்.அதுதான் எங்கள் ஊருக்கு அருகில் இருந்த ஒரே ஆங்கில பள்ளி.தினமும் பஸ்சில் தன செல்ல வேண்டும்.முதலில் சில நாட்கள் சிரமமாக இருந்தது.அதே பள்ளியில் படிக்கும் தினேஷும் நானும் நட்பானோம்.அவன் தான் என் தளபதி.தளபதி என்றால் நிஜமான தளபதி "மாப்ளே போய் அடிடா" என்றால் அடித்து விட்டு தான் "ஏன்டா அடிக்க சொன்னே" என்று கேட்பான்.அப்புறம் அடிவாங்கியவன் ஹெச்ம் கிட்டே கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு சொன்னா அவன் காலில் விழுந்து மன்னிப்பு எல்லாம் கேட்டபிறகும் எதற்க்கும் இருக்கட்டுமே என்று மூன்று நாள் ஸ்கூல்க்கு வரமாட்டான். அவ்ளோ பெரிய வீரன்.
நாங்கள் செல்லும் பஸ் இல் எங்கள் பள்ளியின் சீனியர் மாணவர்களும் மாணவிகளும் வேறு வருவார்கள்.எனக்கும் என் தளபதிக்கும் பஸ்சில் தனி இடம் ,ஜால்ராக்கு ஜூனியர் பசங்க வேறு என்று தினமும் பஸ் பயணம் களைகட்டும்.ஒருநாள் சீனியர் பெண் ஒருத்தி எங்கள் இடத்தில அவள் தோழியோடு உட்கார்ந்துவிட்டாள்.எனக்கு செம கோவம் என் தளபதியை அழைத்துக்கொண்டு போய் எனக்கு மட்டும் கேட்கும்படி சத்தமாக சண்டை போட்டேன்.அவள் அதற்கெல்லாம் அசருவதாக தெரியவில்லை ,அசால்டாக சமாளித்து விட்டாள்.பின்னர் நாங்கள் பெருந்தன்மையாக அந்த இடத்தை அவளுக்கே விட்டு கொடுத்துவிட்டு ஹையாக நின்றுகொண்டு வந்தோம்.
அப்பொழுது தளபதி கேட்டான் "மாப்ள அவள பாத்தியாட?"
நானே குடித்தனம் பறிபோன கடுப்பில் "அவளை எல்லாம் ஏன்டா பாக்ரே சீட்ட புடிச்சிடோம்னு திமிருல இருப்பா".
"இல்லடா அவ பக்கதுல அழகா"
கோபம் எல்லாம் காணமல் போக கூச்சமே இல்லாமல் திரும்பி பார்த்தேன் "ஆமா மாப்ள யாருடா இது புதுசா? "
அதற்குள் தளபதி அவளை காதலிக்க துவங்கிருந்தான்."நான் அவளை லவ் பண்ண போறேண்டா" எனக்கு பகீர் என்றது.
"லவ் " என்ற வார்த்தை அந்த வருடம் தான் எங்களுக்குப் பரிச்சயம். அந்த வயதில் அது கெட்ட வார்த்தை மாதிரி. மெதுவாக சொல்லிப் பார்த்துக் கொள்வோம், கிளுகிளுப்பாக இருக்கும். "என்னடா இன்னிக்கு சைட் அடிச்சியா" என்று ஒருவருக்கொருவர் பெருமையாக விசாரித்துக் கொள்வோம். முக்கல்வாசி பேருக்கு விவரம் தெரியாமல் வீம்புக்காக சொல்லவேண்டுமே என்று சைட் அடிப்பதாக சொல்லுவார்கள். சில பேர் "சே சே...நான் இல்லைப்பா" என்று நல்ல பையன்களாகப் படம் போடுவார்கள். "சைட்" என்ற இந்த வார்த்தையை உபயோகப் படுத்துவதில் அந்த வயதில் என்னவோ அப்பிடி ஒரு ஆனந்தம்.
"டேய் என்னடா சொல்றே"
"ஆமாட நான் அவள தான் லவ் பண்ண போறேன் "
"சரி என்னமோ பண்ணி தொலை"
நான் மீண்டும் திரும்பி பார்த்தேன் அவள் என்னையே பார்பதாக எனக்கும் தோன்றியது.
அப்புறம் பஸ் பயணம் ரொம்பவே பிடித்து விட்டது.அதற்குள் பத்தாவது வந்துவிட்டிருந்தோம்.அவர்கள் இருவருடன் பேசும் அளவுக்கு நண்பர்கள் ஆகியிருந்தோம்.அவளுக்கு "மயில்" என்று பெயர் வைத்திருந்தோம்.அதற்குள் தளபதி நாலாவது லவ் தாண்டி போய்கொண்டிருந்தான்.
அவளுடன் எனக்கு நட்பு இல்லை காதலும் இல்லை,இதை என்ன சொல்வது வயசு கோளறு என்று வைத்துகொள்ளலாம்,ஆனால் காமம் தெரியாத வயசு அது.காமம் இல்லாத இனக்கவர்ச்சி என்று வைத்து கொள்ளலாம்.தினமும் பஸ்சில் எதிர் எதிர் சீட்டில் உக்காந்து பேசிக்கொண்டே செல்வோம்.சிலருக்கு அந்த வயதில் சிலரை பிடிக்கும் எனக்கு அவளை பிடிக்கும்.எவ்ளோ பெரிய ஜோக் சொன்னாலும் பல் தெரியாமல் அழகாய் சிரிப்பாள்.நானும் பதிலுக்கு சிரிப்பேன்(வழிவேன்).
எங்கள் பள்ளியின் அருகில் ஒரு வடை கடை உண்டு.அங்கே அவள் அடிக்கடி எங்களுக்கு வடை வங்கி கொடுப்பாள்.நானும் கடுகு டப்பா,தம்பியின் உண்டியல் என்று காசை லவட்டி வந்து வடை வழங்கும் வள்ளல் ஆவேன்
.இப்படி நாளொரு ஸ்டாபும் பொழுதொரு வடையுமாக போய்கொண்டிருந்த எங்கள் பஸ் வாழ்க்கையில் ஒரு ஜூனியர் பையன் குறுக்கே வந்தான்.அவன் வகுப்பில் தான் ஜூனியர் ஆனால் ஒரு ஒரு வகுப்பிலும் ரெண்டு ரெண்டு வருஷம் படித்திருப்பான் போல.ஒருநாள் எங்கள் இருக்கையில் அவன் குடிவந்து விட்டான்.மயிலின் தோழி சும்மா இல்லாமல் என் தளபதியை வெறுப்பேத்த அவன் நேராக சண்டைக்கு போய்விட்டான்.ஜூனியர் வேறு ராஜ்கிரண் மாதிரி இருந்ததால் தளபதியை புரட்டி எடுத்துவிட்டான்.மயிலின் தோழி சும்மாயிராமல் என்னையும் வம்பில் மாட்டிவிட்டு விட்டது. தேமேன்னு உட்கார்ந்திருவனுக்கு அவள் பார்க்கிறாளே என்று இல்லாத ரோஷமெல்லாம் வந்து சிலிர்த்து எழுந்து தளபதியும் நானும் சேர்ந்து அந்தப் பையனை பொளந்து கட்டி விட்டோம்.
ஜூனியர் பையன் நாட்டமை வம்சம் போல ஒத்தைக்கு ஒத்தை வரீங்களாடா என்று கேட்க,நான் எப்போ வேணாலும் எங்க வேணாலும் ஆனா பஸ்ல இவங்க முன்னாடி வேணாம் ரண ரணமகிரும்னு சவால் விட்டு அவனுக்கு முந்தின ஸ்டாப்பில் எறங்கி வீட்டுக்கு போய்விட்டேன்.அவன் வீடு பக்கத்துக்கு தெருவில் தான் இருந்தது.கடைக்கு போகும்போதெல்லாம் அவன் மேல் இரக்கப்பட்டு ரெண்டு தெரு சுத்தி தான் போவேன்.அடுத்தநாள் ஜூனியர் பள்ளிக்கு வரவில்லை.என் தளபதிக்கு வேறு தலையில் பயங்கரமாக வயித்துவலி வந்துருந்தது.அடுத்தநாள் ஜூனியர் இன் அண்ணன் நாலு பேருடன் எங்கள் தெருவிற்கு வந்து இங்க கார்த்தி யாருடா என்று என்னிடமே கேட்டான்,"கார்த்தி என்னும் மாவீரன் இங்கே தான் இருக்கிறான் நான் போய் கூட்டிட்டு வரேன்" என்று கம்பி நீட்டி விட்டேன்.
அடுத்தநாள் அந்த பையன் தலையில் ஒரு ப்ளாஸ்திரியோடும் அவ அப்பாவோடும் வந்து ஸ்கூலில் பிரின்ஸ்பாலைப் பார்த்தான். பிரின்ஸ்பால் என்னையும் தளபதியையும் ப்யூனை விட்டு க்ளாசிலிருந்து கூப்பிட்டு காதைத் திருகி பிரம்பால் ஆளுக்குத் தலா இரண்டு அடியும் குடுத்தார். நான் பிரின்ஸ்பால் அருகில் நின்று கொண்டிருந்ததால் திரும்பிப் போகும் போது பிட்டத்தில் எனக்கு கூட ஒரு அடி கிடைத்தது. தளபதிக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம்.

எல்லாம் முடிஞ்சுது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது பி.டி. வாத்தியார் கூப்பிட்டு அனுப்பினார். அந்தப் பையனுடைய அப்பா போகிற போக்கில் பி.டி. வத்தியார் தான் நல்லா தீர்ப்பு சொல்லுவார் என்று கொளுத்திப் போட்டுவிட்டு போய்விட்டார். இந்தமுறை உஷாராக நான் பி.டி.வாத்தியார் பக்கத்தில் நிற்காமல் தளபதிக்குப் பின்னால் போய்விட்டேன். பி.டி. வாத்தியார் கேள்விகளே கேட்காமல் மண்டகப்படியை ஆரம்பித்தார். தளபதிக்கு இரண்டும் எனக்கு ஒன்றும் கண்ணத்தில் நச்சென்று கிடைத்தது. அந்த சமயத்தில் ஸார் என்று யாரோ வந்து குரல் குடுக்க திரும்பினால் "மயில்". வாத்தியார் அடிச்சது முட்டியில் இடித்த சுகமாக இருந்தாலும் முகத்தில் வலியைக் காடிக்கொள்ளாமல் இறுக்கமாக வைத்துக் கொண்டேன். அடித்ததை ஒரு வேளை அவள் பார்த்திருப்பாளோ என்று குழம்பிக் கொண்டிருந்த போது, பாழாய்ப் போன வாத்தியார் வந்தவளுக்கு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று கேட்க வேண்டாமோ? போகிற போக்கில் பின்னால் நின்று கொண்டிருந்த எனக்கு மானாவரியாக இன்னொரு அடி குடுத்துவிட்டு போனார்.
அவளும் நேரம் காலம் தெரியாமல் 'க்ளுக்' என்று எனக்கு மட்டும் கேட்குமாறு சிரித்தாள். வடை வாங்கிக் குடுத்ததுக்கு காட்டுகிற நன்றியா இது என்று நான் கோபத்தோடு முறைக்க அவள் டக்கென்று சிரிப்பதை நிறுத்திவிட்டாள்.

------தொடரும்

7
Your rating: None Average: 7 (10 votes)

கருத்துகள்

sugiri's படம்

ம்ம்ம்.... அப்புறம்?


3

Smile ம்ம்ம்.... அப்புறம்?


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


Kaipulla's படம்

நன்றி ஸுகிரி....


நன்றி ஸுகிரி....


Kaipulla


kumar.k's படம்

வடை போச்செ......


4

வடை போச்செ......


நட்புடன்
குமார்


Kaipulla's படம்

நன்றி குமார்......


நன்றி குமார்......


Kaipulla


kishore1490's படம்

(No subject)


7

Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud


கிஷொர் குமார்


Kaipulla's படம்

நன்றி கிஷொர்குமார்..........


நன்றி கிஷொர்குமார்..........


Kaipulla


saravanamuthu's படம்

(No subject)


4

Laughing out loud Laughing out loud

Kaipulla's படம்

நன்றி சரவணன்...


நன்றி சரவணன்...


Kaipulla


Ragavan's படம்

ஐயய்யோ முடியலப்பா


9

Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile
ஐயய்யோ முடியலப்பா கைப்புள்ள.....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


Kaipulla's படம்

நன்றி நண்பா....


6

நன்றி நண்பா.... Smile


Kaipulla


Navaneethan's படம்

மச்சி அப்பாலிக்கா என்னாச்சு


10

மச்சி அப்பாலிக்கா என்னாச்சு Quest Quest Quest