Siju's படம்

அட மறுபடி நான்தாங்க!!! இப்போ இந்த வார இறுதில நடந்தது. சனிக்கிழமை. சொர்க்கம்... மணிய பாத்து பாத்து தூங்கலாம். அப்படி ஒரு நாள் அது. வாரா வாரம் சனி ஞாயிறுனு 2 நாள் மட்டும் இல்லனா சேகர் என்னைக்கோ செத்துருப்பான்... ஞாயிற்று கிழமையவிட சனி பெஸ்ட். ஏன்னா நாளைக்கும் லீவுதான்னு நனச்சு நனச்சு தூங்கலாம். அட தூக்கத்துல தான் எவ்ளோ ஆனந்தம்?? கண் முழிச்சு உலகத்தை பார்க்குற போது கிடைக்காத மகிழ்ச்சி கண்ண மூடி நமக்கு புடிச்சவங்கள நனைக்கும் போது வரும் பாருங்க...

12/11/2011‍‍_சனிக்கிழமை

மதியம் 11மணிக்கு எந்திருச்சு டிவி பாத்தேன். பாத்தா எனக்கு புடிச்ச நெஞ்சிருக்கும் வரை படம் ஓடுது கலைஞர் டிவி_ல. காலங்காத்தாலே க்ளைமேக்ஸ் பாத்து அழுதுட்டேன். என்ன படம்? என்ன கதை! படம் முடிஞ்சதும் ரொம்ப பசிச்சது. படம் பாக்குற இன்ட்ரஸ்ட் ல பசி எல்லாம் யாரு பாத்தா??? வேக வேகமா குளிச்சுட்டு ஃப்ரண்ட் பைக்ல லிஃப்ட் கேட்டு பெருங்களத்தூர்ல இருந்து தாம்பரம் வரைக்கும் வந்தேன் சாப்பிட. ஒரு கடையும் நல்லா இல்ல. அதனால மேடவாக்கத்துல இருக்க என் ஃப்ரண்ட் ரூம்_கு போய் அங்க உள்ள தலப்பாக்கட்டுக்கு ஃப்ரண்டோட போகலாம்_னு ஒரு பஸ் ஏறுனேன்.

ஃப்ரன்ட்டுக்கு கால் பண்ணேன். ஃப்ரன்டோட ரூம்மேட் எடுத்தான்.

"தின்னாவா ஷைவான்?"

"இன்கா லேது." இன்னும் ப்ரேக் ஃபாஸ்ட்டே முடிக்கலனு தெலுங்குல சொன்னான்.

"நல்லது. நான் வரேன்." ரெடியா இருங்கனு சொன்னேன்.

ரூம்_கு போனா என் ஃப்ரன்ட் அதுதாங்க காஜா, தூங்கிக்கிட்டு இருக்கான். மணியோ 1.45. பசினா பசி அப்படி ஒரு பசி. அவனை அரைமணி நேரமா எழுப்பி விட்டு 2.15கு பயபுள்ள எந்திரிச்சான். 2.45கு லாம் குளிச்சு முடிச்சு ரெடியாகிட்டான். அப்புறம் நானும் காஜாவும் பைக் எடுத்துக்கிட்டு தலப்பாக்கட்டு போய் கட்டு கட்டுனு கட்டுனோம் பிரியானி தந்தூரி.

காஜா: டேய் சிஜு! என் பைக்க யாரோ ஆட்டய போட பாத்துருக்காய்னுங்கடா.

சிஜு(நான் தான்): எங்கடா?

காஜா: நம்ம மெப்ஸ் ஆபிஸ்ல தான்.(சென்னைல இருக்கு) எவனோ சைட் லாக்க ஒடச்சுட்டான். நல்ல வேளை வண்டிய அவன் மூவ் பண்ணல.

சிஜு: அட பாவமே நேத்து தான் என் ப்ளாக்கர் ஃப்ரன்ட்டோட ஹெல்மெட் ஆட்டயப்போட்ட கதைய படிச்சேன். உனக்கு ஒரு படி மேல போய் பைக்கயே ஆட்டய போட பாதுருக்கானே. அட்மினுக்கு கம்ப்லைன்ட் குடு மச்சி.

காஜா: அதை மண்டே பாத்துக்கலாம். இப்போ வா நம்ம அடையார் ல இருக்க ஷோரூம் போய்ட்டு சைட் லாக்க சரி பண்ணிட்டு வரலாம்.

நமக்கு பைக்ல பின்னாடி உட்காந்து சைட் அடிச்சுட்டு போறதுனா ரொம்ப பிரியம்.

அப்புறம் அடையார்ல சனிக்கிழமை சர்வீஸ் பாக்கிறதில்ல, வீக் டேஸ்ல வந்த வண்டிகள முடிக்கனும்னு சொல்லிட்டான். அடையார் மசூதில தொழுதுட்டு பெசன்ட் நகர் பீச்சுக்கு போனோம். உங்க வீட்டு சாய் இல்ல எங்க வீட்டு சாய் இல்ல, என்சாய் தான் அங்க. சில பல நொருக்கு தீனிகளுக்குப் பிறகு ஐஸ் கிரீம் வாங்கி பொறுமையா இயற்கையை ரசிச்சுட்டே சாப்பிட்டோம்.

காஜா: சரி சிஜு! ரூம்_கு போலாமா??

சிஜு: ரூம்_கு போய்த் தூங்கதானடா போறோம்? வேற எங்காச்சும்?

காஜா: மணிய பாத்தியா?

சிஜு: 6.30

3மணி நேரம் போனதே தெரியல. மசூதி போனது, ஷோரூம் போனதெல்லாம் ஒரு 1மணி நேரம் ஓடிருந்தாலும், பீச்சுல உலகம் கொஞ்சம் வேகமா இல்ல கடிகாரம் ரொம்ப வேகமா சுத்திருக்கு.

அப்புற‌ம் கெள‌ம்பிட்டோம். வ‌ண்டில‌ போய்கிட்டு இருக்கும் போது காஜா ட‌க்குனு ஒரு ஐடியா கேட்டான். "டேய் ஷ‌பீன் ரூம்கு போலாமா?"

மேடவாக்கம் போற‌ வ‌ழில‌ ப‌ள்ளிக்க‌ர‌னை போக‌ முடிவு ப‌ன்னிட்டோம் ச‌ட‌னா. எதுவுமே ப்ளான் ப‌டி ந‌ட‌க்க‌லை. நாங்க‌ ப்ளான் ப‌ண்ண‌து கோவ‌ள‌ம் த‌ர்கா. க‌டைசிவ‌ரைக்கும் போக‌வே இல்ல‌ அங்க‌. ஆனா திடீர் ப்ளான் எல்லாமே ஸ‌க்ஸ‌ஸ்.

ஒரு வ‌ழியா ஷ‌பீன் ரூம் ல‌ த‌ங்கிருக்குற‌ எங்க‌ இன்னொரு ஃப்ர‌ன்ட் ப‌வ‌ன் வ‌ந்து கூட்டிட்டு போனான் அவ‌ங்க‌ ரூமுக்கு. ரூம் ல‌ யாருமே இல்ல‌. எல்லாரும் அவ‌ங்க‌வ‌ங்க‌ வீட்டுக்கு போயிருந்தானுங்க‌. ப‌வ‌ன் நான் காஜா மூனு பேர் தான் அவ்ளோ பெரிய‌ 3பி.எச்.கே வீட்டுல‌.

இதுவ‌ரை சொன்ன‌து வெறும் இன்ட்ரோ. அதுதான் போரா போயிருக்கும். அந்த‌ வீட்டுல‌ ந‌ட‌ந்த‌ காமெடியான‌ ஸ்ட‌ண்ட் தான் நான் சொல்ல‌ வ‌ந்த‌ மேட்ட‌ர். அடுத்த‌ போஸ்ட்ல‌ க‌ன்டினியூ ப‌ண்றேன். டைம் ஆச்சு...

0
Your rating: None