dharshi's படம்

அந்த நாட்டின் அரசனுக்கு இரண்டு மகன்கள். அவனுக்குப் பின் நாட்டை ஆட்சி செய்ய வேண்டியவர்கள். எனவே அவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஓர் ஆசிரியரிடம் கல்வி கற்பதற்கு அனுப்பி வைத்தான்.

கல்வி கற்பதற்குப் புறப்பட்ட மகன்களுக்குச் சில அறிவுரைகளைப் போதித்தான் அரசன்.

``பிள்ளைகளே... உங்களுக்கு அறிவுக் கண்ணை அளிப்பவர் ஆசிரியர். அவரை பெற்றோரைப் போல நேசிக்க வேண்டும். அடக்கமாக நடந்துகொள்ள வேண்டும். குருவின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

அவர் முன் சத்தமாகப் பேசக் கூடாது. அவரைச் சந்திக்கும்போது வணக்கம் செலுத்த வேண்டும். அவரிடம் அன்பாகவும், அடக்கமாகவும் இருக்க வேண்டும். கல்வி கற்கும் இடம் ஒரு கோவில், புத்தகங்கள் அறிவுப் பெட்டகங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்'' என்று கூறி அனுப்பி வைத்தான் அரசன்.

பிள்ளைகள் இருவரும் கல்வி கற்பதற்குப் புறப்பட்டுச் சென்றனர். தந்தையின் சொல்படி தங்களது ஆசிரியரிடம் மிகவும் மரியாதையாக நடந்து வந்தனர்.

ஒருசமயம் ஆசிரியர் கல்வி போதித்துவிட்டு வெளியே செல்லப் புறப்பட்டார். உடனே மாணவர்கள் இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு ஆசிரியரின் காலணியை எடுத்துவர முண்டியடித்து ஓடினர். ஆளுக்கொரு காலணியை எடுத்துவந்து ஆசிரியரின் கால்களில் அணிவித்தார்கள். குருவும் மிகவும் மனம் மகிழ்ந்து நல்லாசி வழங்கினார்.

அதை அறிந்த அரசன் தனது மகன்களைப் பாராட்டினான்.

அந்தப் பிள்ளைகள் இருவரும் பிற்காலத்தில் சிறந்த மன்னர்களாகத் திகழ்ந்தார்கள். சிறுவயதில் தங்களுக்குப் பாடம் போதித்த குருவையும் மறவாமல் உதவி செய்து உரிய கவுரவம் அளித்தனர்.

நன்றி "சிறுவர் மலர்"

0
Your rating: None

கருத்துகள்

VISWAM's படம்

nice


nice

dharshi's படம்

நன்றிங்க


நன்றிங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

நன்றிங்க


நன்றிங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

குருவே சரணம்.


குருவே சரணம்.


சந்துரு


dharshi's படம்

எந்தக் குருவ சொல்லுறீங்க


எந்தக் குருவ சொல்லுறீங்க சந்துரு....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

என் வாழ்க்கையின் முதல் குரு


என் வாழ்க்கையின் முதல் குரு எங்க அப்பாவைதான்.


சந்துரு


hrpsharma's படம்

சிறுவர் மலருக்கு நன்றி


சிறுவர் மலருக்கு நன்றி


H.Rampradeep


dharshi's படம்

சரிங்க


சரிங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


ranjitsachin's படம்

அருமை தோழி...


dharshi's படம்

மிக்க நன்றி தோழா


மிக்க நன்றி தோழா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/