smariappan's படம்

முதலில் கல்யாணம் என்பது ரொம்ப அவசியமான ஒன்றுதானா? என்பதைப்பார்ப்போம்.

1. ஆம்

2. இல்லை

3. வேறு ஆப்ஷன் இல்லாததால் இருந்துவிட்டு போகட்டும்

இவ்வாறு கல்யாணமான ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு ப‌திலைச் சொல்கிறார்க‌ள். ஆனால் க‌ல்யாண‌ம் ஆகாத‌வ‌ர்க‌ளோ ஒருவித‌ ம‌ய‌க்க‌த்துட‌ன் எப்போதும் "ஆம்" என்றே சொல்கிறார்க‌ள். (எவ்வ‌ள‌வு எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள‌மாட்டேன்கிற‌துக‌ள்) .

ஒரு ந‌ண்பன் (கண்ணன் அல்ல) ஒருவ‌ன் அவ‌ன் க‌ருத்தாக‌வோ அல்ல‌து விவாத‌த்திற்காக‌வோ ஒரு கேள்வியை அடிக்க‌டி கேட்ப‌துண்டு. அது 'க‌ல்யாண‌த்தினால் உருப்ப‌டியான‌ இர‌வுக‌ளைத் த‌விர ஏதாகிலும் ப‌ய‌னுண்டா?'

நான் கீழே ஒரு சாம்பிள் லிஸ்ட் த‌ருகிறேன், பாருங்க‌ள்.

புத்த‌க‌ங்க‌ள், நட்பு, ஹோட்ட‌ல், சினிமா, ஷாப்பிங், ப‌ய‌ண‌ம், காத‌ல், அழ‌குண‌ர்ச்சி, ச‌மைய‌ல், வ‌ண்ண‌ங்க‌ள், எண்ண‌ங்க‌ள், சோம்ப‌ல், தூக்க‌ம், இசை, பொறுமை, க‌ட‌வுள், சிரிப்பு, ஒழுங்கு, வேக‌ம், ச‌த்த‌ம், முத்த‌ம், ப‌ண‌ம், ப‌ய‌ம், தைரிய‌ம், வெட்க‌ம், உற‌வுக‌ள், உண‌ர்வுக‌ள், உண‌வுகள்.. என‌ இது நீண்டுகொண்டே போகிற‌து. இத்தனையையும் பற்றிய இருவரது கருத்துக்களும் மோதவேண்டிய களமே திருமணம். (என்ன‌டா சொல்ல‌ வ‌ர்ரே.. ரித‌மிக்கா லிஸ்ட் போட்டுட்டா ஆச்சா?..ங்கிறீங்க‌ளா. ஒன்றிரண்டை விளக்க அனுமதியுங்கள்).

*டிவியில் 'மதுரக்கார மச்சானுக்கு ஜாஸ்திதான்.. மஸ்து ஜாஸ்திதான்..' என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென 'எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுங்க இது..' என்பாள். நீங்கள் என்ன செய்வீர்கள்?

*ஒரு ச‌ம‌ய‌ம் 'டூவீலரில் வ‌ர‌முடியாது, முதுகு வ‌லிக்கும். ஆட்டோ வேண்டாம், வீண்செல‌வு. ப‌ஸ்ஸில் வேண்டாம், ரொம்ப‌ கூட்டமாயிருக்கும்' என்பாள். பிறிதொரு ச‌ம‌ய‌ம் 'வீடுவீடுன்னே கிட‌க்கிறேனே.. எங்காவ‌து கூட்டிப்போயிருக்கீங்க‌ளா..?' என்பாள் நான்குபேர் இருக்கும் போது.

*'ஹோட்ட‌ல் சாப்பாடே வேண்டாம். ஹைஜீனிக் இல்லை' என்பாள். நீங்க‌ள் உள்ளூர‌ ம‌கிழ்வீர்க‌ள். ஆனால் உடல் ந‌ல‌மில்லாம‌ல் போகும்போதும், ப‌ய‌ண‌ங்க‌ளின் போதும் தெரியும் சேதி. ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள். (சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மூடி சரியாக நிற்காம‌ல், முக‌மெங்கும் பாதி அரைபட்ட தேங்காய்,மிள‌காய் அப்பியிருக்க‌ அல‌றுவீர்க‌ள்)

* இரண்டு வகை கறிகள், குழம்பு, ரசம், தயிர் என மதிய உணவுக்கு அடுக்கிவைப்பாள். நீங்கள் விரும்பும் வத்தலோ, அப்பளமோ அவளுக்கு நினைவே வராது.

*'இன்னிக்கு ஆடிட் இருக்குது, அவசியமில்லாமல் போன் பண்ணாதே' என்று படித்து படித்து சொல்லிவிட்டு சென்றிருப்பீர்கள். ஏதோ நீங்கள் சொல்வதைத்தான் தினமும் சமையல் பண்ணுவதைப்போல 'சாய்ங்காலம் என்ன குழம்பு வைக்கலாம்?' என்று மூன்று முறை போன் செய்து கேட்டுக்கொள்வாள்.

*உங்களுக்கு கடிதங்கள், பிரிஸ்கிரிப்ஷன்கள், ரெசிப்டுகள், முக்கிய பொருட்களின் பில்கள், பேங்க்,எல்ஐஸி,டாக்ஸ் பேப்பர்கள் முக்கியமானவைகளாக தோன்றும். அவளுக்கு அப்படித் தோன்றாது. சில சமயங்களில் கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட் குப்பையில் காணக்கிடைக்கும்.

*முட்டையோ, நான்‍வெஜ்ஜோ எல்லாம் ஒன்றுதான் என்பீர்கள் நீங்கள். அவள் அவற்றை தனியாக ட்ரீட் செய்ய தனித் தனி பிளாஸ்டிக் தட்டுகளை வைத்திருப்பாள்.

* நீங்களும் துவைத்த மற்றும் துவைக்காத துணிகளை தனித்தனியாகத்தான் ட்ரீட் செய்வீர்கள். அவள் உங்களை விடவும் இரண்டும் தொட்டுவிடவே கூடாது என்பதில் சர்வ நிச்சயமாக இருப்பாள்.

* சில சமயங்களில் கோபத்தில் இரைந்து கத்துவாள். சமயங்களில் காதிலேயே விழாதவாறு முனங்கிக் கொண்டிருப்பாள்.

*பார்த்துப் பார்த்து எஸ்ரா புத்த‌க‌ம் ஒன்றை வாங்கி வந்திருப்பீர்க‌ள். போனில் பேசிக்கொண்டே அத‌ன் அட்டையில் கிறுக்கிவைப்பாள்.

ச‌ரி போதும்..
மேற்கூறிய‌ லிஸ்ட்டில் அதிகபட்ச விஷயங்கள் உங்க‌ளுக்கிடையே ஒத்துப்போனால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இப்போது இர‌ண்டு கேள்விக‌ள்.

இவற்றுள் ஒன்று ஒத்துப் போக‌வில்லை என்றாலும் நீங்க‌ள் ம‌ன‌முடைந்து போவீர்க‌ளா?

ஒன்று கூட‌ ஒத்துப்போக‌வில்லை எனினும் ம‌ன‌ம் த‌ள‌ர‌மாட்டீர்க‌ளா?

இர‌ண்டாவ‌து கேள்விக்கு நீங்க‌ள் ஆம் என்று பதில் தந்தால், கல்யாணம் பண்ணிக்கோங்க.!

உன் விதியை யார் மாற்ற முடியும்.... Crying Crying Crying

5.5
Your rating: None Average: 5.5 (2 votes)

கருத்துகள்

kumaran's படம்

(No subject)


5

Shock Shock Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

மிகவும் ரசிக்கத்தக்க வகையில்


6

மிகவும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது நண்பரே....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..