VISWAM's படம்

ஒரு ஊருல ஒரு சிற்பி இருந்தானாம். அவன் பாறைகளை அழகான சிற்பமாக மாற்றுவதில் வல்லவன். அவன் வடிக்கும் சிற்பங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அன்னைக்கு ஒரு நாள் நல்லா வேலை பார்த்துட்டு இருந்தப்ப சூரியன் அவன் மண்டைய போளந்துசு. அவனால சிலை செதுக்க முடியல. அப்ப அவன் நெனச்சான், நாம இந்த பெரிய மலையை குடைஞ்சு பாறைகள் வெட்டி அதை கஷ்ட்டப்பட்டு சிலையா வடிக்குரோமே, நாம தான் பெரிய ஆளுன்னு நினைச்சா, இந்த மண்டைய பொளக்கர சூரியன பார்த்தா அது நம்மள விட பெரிய ஆளா இருக்கும் போல அப்படின்னு நெனச்சு அவன் யோசிக்க ஆரம்பிச்சான்.
அப்ப அவனுக்கு ஒரு யோசனை வந்துச்சு, நம்மள விட பெரிய ஆளா இருக்கற சூரியன போல தானும் மாறணும்னு நெனச்சு கடுமையா தவம் இருக்க ஆரம்பிச்சான் . அவன் கடும் தவத்தை பார்த்து கடவுள் மனசு இறங்கி, சிற்பியே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என கேட்க, அந்த சிற்பி சொன்னான், கடவுளே, என்னோட தவத்தை மெச்சி வரம் கொடுக்க வந்ததுக்கு நன்றி. என் ஆசை என்னானா, நான் அந்த சூரியனா மாறனும். அதுக்கு நீங்க வரம் தரணும்னு கேட்டான். கடவுளும் அவனோட ஆசையை நிறைவேற்றினார். சிற்பியும் சூரியனா மாறி வானத்துல வலம் வந்தான். நம்மள சுட்டெரிச்ச சூரியனை அவன் மாறினதா நினைச்சு பெருமை பட்டான்.
ஒரு நாள் பெரிய மேக கூட்டம் அவனை மறைச்சு ரொம்ப நேரமா இருந்துச்சு. அவனால மேகத்த விட்டு வெளியே வர முடியல. அப்பத்தான் அவன் யோசிச்சான், சூரியன் தான் பெரிசுன்னு நெனச்சு மாறினோம், இப்ப சூரியனையே மறைக்கற மேகம் தான் பெரிசு போல என நெனச்சு, மறுபடியும் தவம் இருக்க ஆரம்பிச்சான், கடவுளும் மனமிறங்கி, சிற்பியே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள், என கேட்டார். அவனும் கடவுளே சூரியனையே மறைக்கிற சக்தி மேகத்துக்கு இருக்கு, அதனால என்னை மேகமா மாத்திடுங்க என வரம் கேட்டான், கடவுளும் அவனை மேகமா மாத்திட்டார். அவனும் மேகமா மாறி வானத்துல வலம் வர ஆரம்பிச்சான், அப்ப ஒரு நாள் மேகமா இருந்த அவனை நாசமாக்க ஒரு பெரும் சக்தி வந்தது? அது என்னான்னா.......

மேகமா இருந்த சிற்பியை கலைக்க ஒரு பெரும் சக்தி வந்துச்சு, அது என்னான்னா சூறாவளி காத்து தான். மேக கூட்டமா இருந்த சிற்பியை அந்த காத்து சின்னா பின்னாமாக சிதறி கலைத்தது. அப்ப அவன் நெனச்சான், சூரியன் பெரிசுன்னு மாறினோம், அப்புறமா மேகம் தான் பெரிசுன்னு மாறினோம்.
இப்ப மேகத்தையே கலக்கற இந்த சூறைக் காத்து தான் பெரிசு போல, அப்படின்னு அவன் நெனச்சு மறுபடியும் கடவுளிடம் வேண்டி கடுமையாக தவம் இருக்க ஆரம்பிச்சான். கடவுளும் சிற்பியின் தவத்தில் மயங்கி சிற்பியே உன் தவத்தில் மெச்சினேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் சிற்பியே, என கேட்டார். கடவுளே, மேகம் தான் பெரிசுனு மாறினேன், இப்ப அத விட சூறைக் காத்து தான் பெரிசுன்னு தெரியுது அதனால என்னை சூறைக் காத்தா மாத்திடுங்க என வரம் கேட்டான். கடவுளும் சிற்பியை சூறைக் காத்தா மாத்தினார். அவனும் கேட்ட வரம் கிடைத்த மகிழ்ச்சியில் வலம் வர ஆரம்பிச்சான்.
அப்ப அவனை ஓர் பெரும் மலை தடுத்தது. அவனால் அந்த மலையை தாண்டி போக முடியாமல் தவித்தான். ஐயோ என்னால் இந்த மலையை தாண்டி போக முடியலையே, அப்போ இந்த காத்தை விட மலை தான் பெரிசு போல அப்படின்னு யோச்க்க ஆரம்பிச்சான். அவனுக்கு காத்தா இருக்க மனசில்லை. பெரிய மலையா மாறணும்னு ஆசை வந்திருச்சு. அவன் கேட்டதை தர கடவள் இருக்காரே... மறுபடியும் கடவுளை வேண்டி கடுமையா தவம் இருக்க ஆரம்பிச்சான். கடவுளும் மனமிரங்கி சிற்பியே உனக்கு என்ன வரம் வேணும் கேள் என கேட்டார். கடவுளே காத்தை விட மலை தான் பெரிசு போல, அதனால என்னை மலையா மாத்திடுங்க என வரம் கேட்டான். கடவுளும் அவன் கேட்ட வரத்தை கொடுத்தார். மலையா மாறின சிற்பி பாய்ந்து போகும் நீரோடைகளையும், சந்தோசமா திரியும் விலங்குகளையும் கண்டு ஆனந்த பட்டான்.
இப்படி சந்தோசமா இருந்த அவனுக்கு ஒரு நாள் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் நடந்திச்சு. லாரி லாரியா ஆளுங்க வந்தாங்க. பெரிய பெரிய மெசின்கள் வந்து இறங்குச்சு. அந்த மலையை குடைஞ்சு பாறைகளை வெட்டி எடுக்க ஆரம்பிச்சாங்க. சிற்பிக்கு மலையா இருந்த நாம தான் பெரிசுன்னு நெனச்சா மலையை வெட்டி எடுக்கற மனுசங்க தான் பெரிசுன்னு நெனச்சான். அப்ப தான் அவன் யோசிச்சான். மனுசனா இருந்த அவன் சூரியனா, மேகமா, காத்தா, மலையா இருக்றதெல்லாம் பெரிசு இல்லை. மனுசனா இருக்கிறது தான் பெரிசுன்னு நெனச்சான். சிற்பி மறுபடியும் தவம் இருக்க ஆரம்பிச்சான். கடவுளும் அவனிடம் வந்தார். கடவுளே, நான் பேராசை பட்டு பல நிலைகளில் மாறினேன்.
ஆனா மனுசனா இருக்கிறது தான் பெரிசுன்னு இப்ப உணர்றேன். அதனால என்னை மனுசனா திரும்ப மாத்திடுங்க என கடவுளை கெஞ்சி வரம் கேட்டான். கடவுளும் அவன் தவத்தில் மனமிரங்கி அவனை திரும்ப மனுசனா மாத்திட்டார். சிற்பியே, நாம் செய்யும் வேலையும் நல்ல மனுசனா இருக்றதும் தான் பெரிசு, புரிஞ்சக்க.. அதிகமா ஆசைப்படாதே, அப்படின்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டார். சிற்பியும் மனுசனா மாறி மக்கள் விரும்புற சிலைகளை செதுக்க ஆரம்பிச்சான். சந்தோசமா வாழ்ந்தான்.
நீதி: செய்யும் தொழிலே தெய்வம். அதிக ஆசை ஆபத்து.

நன்றி : thaiprakash1@gmail.com (தமிழ்வாசி - Prakash)

7.55556
Your rating: None Average: 7.6 (9 votes)

கருத்துகள்

சரவணன்'s படம்

கதை நல்லாயிருக்கு.


6

கதை நல்லாயிருக்கு.


உ.சரவணன்
திருநெல்வேலி


VISWAM's படம்

நன்றி


நன்றி