ஓ! இது மழையல்ல!! ****************************** அன்றொரு நாள் மாலையில், நாங்கள் அலுவல்முடிந்து பேருந்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். வெயிலின் வெம்மையை அந்த மாலையிலும் எங்களால் நன்றாக உணரமுடிந்தது. அதைத் தாங்கவும் முடியாமல், பேருந்தில் உட்காரவும் இயலாமல், மிகவும் அவதிக்குள்ளான என் அருகில் அமர்ந்திருந்த நண்பர்,“பாருங்கள், இது என்ன? இம்முறை கோடை முடிந்தபின்னும் வெயில் இப்படி பாடாய்ப்படுத்துகிறதே.... அதிசயமாக இம்முறை கோடைமழை கூட பொய்த்துவிட்டது. அலுவலகத்தில் A.C. இருப்பதனால் தப்பித்தோம். இல்லையேல், வெந்து மடியவேண்டியதுதான்” என என்னிடம் குறைபட்டுக் கொண்டார். உண்மைதான் ! நான் எண்ணியதை, அவர் வாய்திறந்து சொல்லிவிட்டார். எனவே, அதை மறுக்காமல் தலையாட்டி ஆமோதித்தேன். ஒருவிதத்தில், அவர் சொன்ன இந்த குளிர்சாதனங்கள் கூட, பருவமாற்றத்தில் முக்கியபங்கு வகிக்கின்றனவே!? ஓசோன்-ஓட்டை விவகாரம் ஏனோ, என் கண்முன்னே நிழலாடியது. ஆனால், அதை அவருடன் விவாதிக்கும் நிலையில் என்உடலும் உள்ளமும் அந்நேரம் இல்லையென்பதால், மௌனமாய் கண்களை மூடியவாறு, என் இருக்கையில் சாய்ந்து கொண்டேன் . ஒரு பக்கம், மழைதரும் மரங்களை ஆக்கும் வேலையை மறந்துபோனோம்! அதோடு நிறுத்தினாலும் பரவாயில்லை . இருக்கும் மரங்களை அழித்தலையும் பருவங்களை அழித்திடும் குளிர்சாதனக் கருவிகளையும், குறைவின்றி பெருக்கிக் கொண்டல்லவா இருக்கிறோம்?! இது எரிகிற தீயில் எண்ணைவிடுதல் போலல்லவா ஆயிற்று?! பின், மழைபொய்த்தது…பருவம்பொய்த்தது என்று இயற்கையை நோவதில் என்ன லாபம் ?! இது நடந்து மூன்று வாரங்களாயின. இன்றும், அதே மாலைநேரம். அதே பேருந்துப்பயணம். அதே நண்பர், என்அருகில்! ஆனால் அன்றிருந்த வெம்மை, இன்றில்லை. வெளியே நல்ல குளிர்காற்றின் வீச்சும், கூடியிருந்த மேகங்களும், இன்னும் சிலநிமிடங்களில் மழைபொழியும் என பறையரைந்தது . இதனால், சந்தோஷமாக ஒருபாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த எனது உற்சாகத்தை, பன்மடங்காக்கியது சடாரென உகுத்த மழைச்சாரல். ஆஹா! என் குதூகலத்தைக் கட்டுக்கொள்ள இயலாமல், வேகமாய் என் நண்பரின் முதுகைத் தட்டி , “பாருங்கள் ஐயா! பாருங்கள்!! மழை… புதுமழை...ஆனந்தமழை….அற்புதமழை...”என நான் பிதற்றிக்கொண்டேயிருக்க, அவரோ முகச்சலனமேதுமின்றி, “அட, சும்மாயிருங்களய்யா! இன்னும் இரண்டு நிமிடத்தில் என்நிறுத்தம் வந்துவிடும். எப்படி மழையில் நனைந்து கொண்டு வீட்டுக்குச்செல்வது? இந்த பாழாய்ப்போன மழைக்கு இப்போதுதானா அவசரம்?” என்றவாறு முகத்தைத் திருப்பிக்கொண்டார். உறைந்துபோனேன் நான்! அட.. ‘வாழ்ந்தாலும் ஏசும்! தாழ்ந்தாலும் ஏசும்!!’ எனும் பழம்பாடலின் வரியைப்போலல்லவா இந்த மக்களின்மனமும் இருக்கிறது? இப்படிப்பட்ட இரண்டுங்கெட்ட மனமுடை மனிதர்களிடம் அகப்பட்டுக்கொண்டு பாவம், இந்த மழைதான் என்செய்யும்?! ஒருவேளை இன்று பொழிவதும் மழையல்லவோ? இவர்களின் எண்ணமறிந்து, தன்கண்ணீரைத்தான் அது இவ்விதம் வெளிப்படுத்துகிறதோ?! இவ்விதமான சிந்தனைகள் யாவும், முன்போலவே என்கண்முன் நிழலாடின. முன்போலவே, அவற்றை விவாதிக்கும் மனநிலையில் நான் இல்லாததால், முன்போலவே, என்கண்மூடி மௌனமாய் இருக்கையில் சாய்ந்துகொண்டேன். ********************************************** அன்புடன்,சுந்தரேசன் புருஷோத்தமன் Siru Kathaigalமழை Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 310 views கருத்துகள் வரிகள் யதார்த்தமானதாக வரிகள் யதார்த்தமானதாக இருக்கு Log in to post comments நன்றி நண்பரே! நன்றி நண்பரே! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments உண்மைதான் மழை வராவிட்டால் உண்மைதான் மழை வராவிட்டால் சூடு தாங்க முடியலை என்பார்கள் மழை வந்துவிட்டால் இது என்ன நைநைன்னு பெய்துகொண்டிருக்கேன்னு சலித்துக்கொள்வார்கள் வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments ஆப்பிடத்தகப்பட்ட ஆப்பிடத்தகப்பட்ட குரங்கின்வால் போல்தான் ஆனது மக்களின் நிலை! சூழல் எவ்விதம் ஒரு மனிதனின் மனமாற்றத்திற்கு காரணமாகிறது என்பதற்கு மழை ஒரு நல்லுதாரணம்! தாம் விரும்பிய ஒன்றையே, வெறுக்க ஆளாகும் மனநிலைக்கு மனிதன் தள்ளப்பட்டது; அவன், அவனாகவே அவனுக்கு ஏற்படுத்திக்கொண்ட சூழல் காரணம். என்ன செய்வது? அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments Nandhu Log in to post comments பாராட்டுதலுக்கு நன்றி தோழி! பாராட்டுதலுக்கு நன்றி தோழி! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
உண்மைதான் மழை வராவிட்டால் உண்மைதான் மழை வராவிட்டால் சூடு தாங்க முடியலை என்பார்கள் மழை வந்துவிட்டால் இது என்ன நைநைன்னு பெய்துகொண்டிருக்கேன்னு சலித்துக்கொள்வார்கள் வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
ஆப்பிடத்தகப்பட்ட ஆப்பிடத்தகப்பட்ட குரங்கின்வால் போல்தான் ஆனது மக்களின் நிலை! சூழல் எவ்விதம் ஒரு மனிதனின் மனமாற்றத்திற்கு காரணமாகிறது என்பதற்கு மழை ஒரு நல்லுதாரணம்! தாம் விரும்பிய ஒன்றையே, வெறுக்க ஆளாகும் மனநிலைக்கு மனிதன் தள்ளப்பட்டது; அவன், அவனாகவே அவனுக்கு ஏற்படுத்திக்கொண்ட சூழல் காரணம். என்ன செய்வது? அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
பாராட்டுதலுக்கு நன்றி தோழி! பாராட்டுதலுக்கு நன்றி தோழி! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162