kumar.k's படம்

விநாயக சதுர்த்தி

ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.

5.14286
Your rating: None Average: 5.1 (7 votes)

கருத்துகள்

VEZHAVAN's படம்

நல்ல காரணப்பெயர்....


3

நல்ல காரணப்பெயர்....


தில்லை.வேழவன்


kumar.k's படம்

தாங்கள் அறியாதது


தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை..


நட்புடன்
குமார்


yarlpavanan's படம்

காரணப்பெயர் வந்த கதை


6

காரணப்பெயர் வந்த கதை நல்லயிருக்கு


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kumar.k's படம்

நன்றி யாழ்பாவாணன்..


நன்றி யாழ்பாவாணன்..


நட்புடன்
குமார்


saravanamuthu's படம்

கதை நல்லாருக்கே! பிள்ளையார்


4

கதை நல்லாருக்கே!
பிள்ளையார் பேருக்கு பின்னால் இப்படி ஒரு கதையா?

சரவணன்'s படம்

கதை நல்லாயிருக்கு . இது


6

கதை நல்லாயிருக்கு . இது கற்பனை கதை தானே?


உ.சரவணன்
திருநெல்வேலி


kumar.k's படம்

நான் படித்த ஒரு சில


நான் படித்த ஒரு சில வரிகள்.....


நட்புடன்
குமார்