dharshi's படம்

ஒரு ஞானியைப் பார்த்து ஒருவர், "ஞானத்தில் சிறந்த ஞானம் எது?" என்று கேட்டார்.

"இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தில் சொர்வளையாமலும் இருப்பதுதான் ஞானம்" என்றார் ஞானி.
வந்தவர், விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டார்.
அதற்கு ஞானி அருகில் மேய்ந்து கொண்டிருந்த வண்ணான் ஒருவனின் கழுதையை காட்டி இதை காலையிலும் மாலையிலும் பார்த்தால் உமக்கு புரியும் என்றார்.

ஞானி கூறிய படியே அவர் காலையும், மாலையும் கழுதையை கவனித்தார்.

அவருக்கு ஒன்றும் புரியாமல் போகவே ஞானியிடம் கேட்டார். ஞானி விளக்கினார், இந்தக்கழுதைக்கு, "காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டையை சுமந்து செல்கிறோமே என்ற வருத்தம் இல்லை, மாலையில் சுத்தம் செய்த துணிகளை சுமந்து செல்கிறோமே என்ற மகிழ்ச்சியும் இல்லை" இதை பார்த்து தான் நான் அத்தகைய ஞானம் பெற்றேன் என்றார்.
துன்பத்திலும், இன்பத்திலும் துவளாமல் இருப்பதே சிறந்த ஞானம் என்பதை உணர்ந்தார் அந்த நபர்.

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஐங்களின் போராட்டமே சிறந்தது"

என்றென்றும் நட்புடன்,
dharshi.

8
Your rating: None Average: 8 (1 vote)

கருத்துகள்

AANMEKAN's படம்

ஆணவம் கன்மம் மாயை ஆகிய


ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலமும் நீங்கி,ஆத்துமா அருளோடு கூடியது ஞானமாகும்,,,இதில் இருபடிமூலம் எல்லாம் கடந்த தன்னிலைதான் ஞானம்,,,,இருபடிமூலம் என்பது உண்டு-இல்லை,உன்மை-பொய்,நன்மை-தீமை,ஆண்-பொண்,,போண்ற அனைத்தும் இருபடிமூலமே,,,

dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


VISWAM's படம்

எளிய, அருமையான விளக்கம்.


எளிய, அருமையான விளக்கம்.

dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

mok


mok

Selvakumarnew's படம்

அதுக்குதான் கழுதை படத்த


அதுக்குதான் கழுதை படத்த வீட்டுல வச்சுருக்காங்கலோ...............


>>>Selvakumar<<<


dharshi's படம்

அப்படியும் இருக்கலாம்...


அப்படியும் இருக்கலாம்...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

அருமை..செல்வக்குமார்..நீங்கள்


அருமை..செல்வக்குமார்..நீங்கள் சொன்னது உண்மையாக கூட இருக்கலாம்....கழுதையைப்போல எப்பவும் நிலை மாறாமல் இரு என்பது கூட அர்த்தமாக இருக்கலாம். ஆனால் நம்மாளுங்கதான் வழக்கம்போல,கழுதை படத்தை பார்த்துட்டு வெளியே போனா ராசி,அதிர்ஷ்டம் அப்படி இப்படின்னு கிளப்பி விட்டுட்டாங்க....


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

பகிர்வுக்கு நன்றி


பகிர்வுக்கு நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

நன்றி வினோத்


நன்றி வினோத்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

தேவையான கருத்து... கல் போல்


தேவையான கருத்து...

கல் போல் மனது இருக்க வேண்டும்..!!
மழைக்கும் வெயிலுக்கும் அசராமல்..
ஆனால் பிறர் துயர் காணும்போது அல்ல...

அருமை..


annaa


dharshi's படம்

நன்றி annaa


நன்றி annaa


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

பிறர் துயர் /// இதன்


பிறர் துயர் /// இதன் பொருள்யாதோ,,,
கசாப்பு கடையில் போனால் தெரியும் பிறர் துயர் எது என்று,,,பசுவை வெட்டும்போது நாக்கில் தண்ணீர் ஊருது மனிதமிருகங்களுக்கு இதுவா பிறர்துயர்,,

annaa's படம்

அப்ப‌டிப் பார்த்தால்


அப்ப‌டிப் பார்த்தால் தாவரங்க‌ளுக்கும் உயிர் உண்டு என்று நாமே
ஏற்றுக் கொண்டிருக்கும்போது...
அதை சாப்பிடுவது மட்டும் எப்படி சைவமாகும்..!!
இது எனது சந்தேகமே..கேள்வியல்ல..
தயவு செய்து யாரேனும் விளக்குக..அறிந்தால்..


annaa


dharshi's படம்

இதை விளக்க முற்பட்டால் பல


இதை விளக்க முற்பட்டால் பல கருத்து மோதல்களுக்கு வழிவகுக்கும் என்ற காரணத்தால் நான் ஜகா வாங்கிக்கிறேன்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

இது தான் படைப்பின்


இது தான் படைப்பின் ரகசியம்,,பாம்புக்கு-எலி,,எலிக்கி பாம்பு அல்ல,,பரிணாமத்தின் முதிற்ச்சி மனிதன் என்கிறது வேதம்,,,ஒவ்வெறு ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசையம்,,அந்த குணாதிசையத்தை பொருத்துதான் உணவு தேடுதல் நடைபெருகின்றாது,,மற்றஜீவராசிகளை எடுத்துக்கொண்டால் அதற்கு என்று இயல்பான ஒரு கட்டுபாடு இருக்கின்றது,,அது அந்த குணாதிசைய உணவைதான் சாப்பிடும்,,ஆனால் மனிதனுக்கு அப்படியில்லாமல் மிருகத்தைவிட மோசம் என்று சொல்கிறேன்,,,இந்தநோக்கில் பார்ததால் சைவம்,அசைவம் என்றபேதம் உண்டாவதில்லை,,நன்றி

kumaran's படம்

அருமையாக சொன்னீர்கள்


அருமையாக சொன்னீர்கள் அனா.....இது பற்றி அறிந்து கொள்ள 'சைவமா ? அசைவமா?-ஒரு கருத்தாய்வு'- என்ற என் பதிவை படிக்கவும்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


annaa's படம்

மிகவும்


மிகவும் எதிர்பார்த்தேன்...!!
(இந்த பதிலையா..அல்லது கேள்விக்கான பதிலையா என்று வினவாதீர்கள்..!!)
யாரேனும் விளக்குங்களேன்..!!
என் தூக்கம் கொள்ளை போகப் போகிறது..!!!


annaa


dharshi's படம்

பொதுவாக எந்த


பொதுவாக எந்த உயிரினத்திட்க்கும் இல்லாத தனித்தன்மை ஒன்று தாவரங்களுக்கு உள்ளது. அதாவது தான் இழக்கும் தனது பாகங்களை தானே மீள் உருவாக்கம் செய்துகொள்ளும் தனித்தன்மை உடையது தாவரங்கள் ஆனால் அந்த தன்மை விலங்குகளில் இல்லை அவற்றை உணவாக உட்கொள்ளும் பொது அதன் வம்சமே அழிவடையும் ஆனால் தாவரங்களுக்கு அப்படியில்லை தானே தன்னை மீள் நிரப்பிக்கொள்ளும். அதனால் அவற்றின் பாகங்களை உண்ணுவது உயிர்கொலை ஆகாது.

அத்துடன் மாமிச உணவை உண்ணும் மற்ற விலங்குகளுக்கு உள்ளது போல( உ + ம் :- புலிக்கு பல், நகம் ) உடல் வாகு மனிதருக்கு இல்லை. ஆகவே தாவரஉண்ணியாகவே மனிதன் படைக்க பட்டு உள்ளான்.

"கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்"
- திருவள்ளுவர் -

இதற்கு மேல் கேட்டால் சொல்ல ஒன்றும் இல்லை.

"இத்தளத்தில் நான் பகிரும் கருத்துகள் அல்லது ஆக்கங்கள், சக நண்பர்கள் எவரையும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது வேறு எவ்விதத்திலோ புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல...."


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

உலகில் அனைவரும் அசைவம்தான்.


உலகில் அனைவரும் அசைவம்தான். பாவக்கணக்கில் ஒவ்வொருவரும் முன்னே பின்னே இருப்பது போன்றதுதான் இதுவும். யானையைக்கொன்றாலும் சிறிய எறும்பைக்கொன்றாலும் பாவக்கணக்கு ஒன்றுதான். அதுபோல சிறிய செடிய சாப்பிட்டாலும் பெரிய யானையை அடித்து சாப்பிட்டாலும் பாவக்கண்க்கு ஒன்றுதான். செடியை கொன்றால் அது துடிப்பதை நாம் உணரமுடிவதில்லை. யானையை கொன்றால் அது துடிதுடித்து சாவதை பார்க்க முடியும் .அதுதான் வித்தியாசம்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


AANMEKAN's படம்

நன்றா சொன்னீர் கள் முடிவை,,


நன்றா சொன்னீர் கள் முடிவை,, நன்றி,,,புல்,மரம்,செடி இவை ஓரறிவுடையவை,,,இவை பரிசமறியும்,,,வேறு எதுவும் அறியாது,,,தொடுபுலன் மட்டும் தான் அதற்கு உண்டு வேறு புலன்இல்லை

annaa's படம்

ஆகா..!! அருமையான விளக்கங்கள்


ஆகா..!! அருமையான விளக்கங்கள் ...!!
அனைவருக்கும் மிக்க நன்றி..!!

சரி..!! அப்படிப்பார்த்தால் உயிர்தான் கணக்கேயொழிய
உடற்கூறு அடிப்படையில் அல்ல என்கிறீர்களா..??
அல்லது...
வெட்டும்போது தாவரம் விசும்பலை வெளிப்படுத்துவதில்லை..!!
மேலும் குருதியின் நிறமும் அறிவதில்லை...!!
அதனால் அது சைவமாகிறதா..??
(அப்படிப் பல்லையெல்லாம் நற நறக்கக்கூடாது...சரியா..!!)


annaa


VISWAM's படம்

நல்ல கருத்து மோதல்கள்.


நல்ல கருத்து மோதல்கள். விவாதத்திற்கு விடிவில்லை.

dharshi's படம்

சரியாக சொன்னீர்கள் நன்றி


சரியாக சொன்னீர்கள் நன்றி அய்யா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

ஆடியே பல விலங்கினங்கள் கொன்று


ஆடியே பல விலங்கினங்கள் கொன்று தின்பேன்...!!
வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடுவேன்..!!!!
மூடியே பசுத்தோல் போர்த்தி முழுவிலங்கை மறைப்பேன்..!!
நாடியே நன்மை செய்வேன்..!! நலங்களும் புரிந்திடுவேன்..!!

நானும் மனிதனென்பேன்..!!!
ஆயினும் என்னவென்று என்னையே நான் கூற..!!


annaa


dharshi's படம்

நன்றி தோழா அண்ணாமலை


நன்றி தோழா அண்ணாமலை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

அப்படியே ஆகட்டும்... தோழி


அப்படியே ஆகட்டும்...
தோழி அவர்களே..!!


annaa