smariappan's படம்

ரவி செல்போனை வீட்டிலே வெச்சட்டுப் போயிட்டான். அவனோட ஃப்ரெண்ட்ஸ் அதுலே ஒரு மெஸேஜ் அனுப்பிச்சிருக்காங்க.

நாங்களெல்லாம் அரியர்ஸ் இல்லாம பாஸ் பண்ணிட்டோம். நீதான் இன்னமும் அரியர்ஸ் வெச்சிருக்கே … ஸாரி மச்சான்!

‘’‘என்னங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு! நல்லா

படிக்கிற நம்ம பையன் எப்படிங்க அரியர்ஸ் வைப்பான்!’’

உனக்கு எவ்வளவு தரம் படிச்சுப் படிச்சு சொல்றது. பசங்களோட செல்போனை துறுவி துறுவி பார்க்காதே!

பார்த்தா இப்படித்தான் ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி ஏதாவது மெஸேஜ் வரும்’’ சொல்லிக் கொண்டுருக்கும் போதே ரவி வந்தான்!

‘’ஏதோ நீ அரியர்ஸ் வெச்சிருக்கேன்னு ஒரு மெஸேஜ் வந்திருக்குடா! இவ்வளவு நாளா பொய்யா சொன்னே…’’

‘’அம்மா! என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாங்க..! எனக்கு மட்டும் இன்னும் கிடைக்கலே! அதைத்தான் என் ஃப்ரெண்ட்ஸ் அரியர்ஸ் வைச்சிருக்கேன்னு மெஸேஜா அனுப்பிச்சிருக்காங்க’’

‘’கருமம் கருமம்’’ என்றபடி போனை ரவியின் கையில் கொடுத்தாள் அம்மா!
Sad Sad Sad

6.33333
Your rating: None Average: 6.3 (3 votes)

கருத்துகள்

umami12's படம்

(No subject)


5

Clap Clap Clap


uma


jeyalakshmi's படம்

(No subject)


5

Big smile

zilverprinz's படம்

அப்படி என்றால் அரயர்சஸ்


9

அப்படி என்றால் அரயர்சஸ் இல்லாத பசங்கலே இருக்க மாட்டாங்க! Cry