பாலைவனத்தில் வந்த தவளைகளுள் இரண்டு ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டன. இரண்டு தவளைகளும் குதிக்க ஆரம்பித்தன. பள்ளத்தின் விளிம்பில் சுற்றி நின்ற பிற தவளைகள் அனைத்தும் வெகு நேரத்திற்குப்பின் "முடியாது, முயற்சியைக்கைவிடுஙகள்" எனக்கத்தின.
கேட்ட மாத்திரத்தில் ஒரு தவளை துவண்டு விட்டது. மரணத்திற்குத் தயாராகிவிட்டது. குதிக்கவே முயலவில்லை.
மற்றது குதித்து மேலும் மேலும் குதித்து வெளியே வந்து விட்டது. "நாஙகள் எவ்வளவோ அவநம்பிக்கை ஊட்டியும் நீ முயற்சியைக் கைவிடாததை மனமாரப்பாராட்டுகிறோம்" என்றன மற்ற தவளைகள்.
"அவநம்பிக்கையா?", கேட்டது வீரத்தவளை,"நீங்கள் 'முயற்சி செய்' என்று உற்சாகமூட்டியதாக அல்லவா எண்ணினேன்!"
கருத்துகள்
கேளாதே யாரும் சொன்னால்....
நிச்சயமாக. . . . .
மற்றவர்கள் எது சொனாலும்
அதை நமக்கு சாதகமாக மாற்றினால்
வெற்றி நம் கையில் என்ற நம்பிக்கையிருந்தல்
வாழ்க்கையில் வானம் தொட்டுவிடும் தூரம்தான்
??????? ???????? ??????????????



