உறவினர் ஒருவர் மருந்து விற்பனையாளராக உள்ளார். அவர் கம்பெனியின் மாதாந்திர கூட்டத்தில் வலி நிவாரணி பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியாம். அதில் பேசியவர், "விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்றவை சாதாரண நேரத்தில் தடவிக் கொண்டால் பயங்கரமாக எரியும், ஆனால் வலி இருக்கும் போது தடவிக்கொண்டால் குளிர்ந்த எரிச்சல் தன்மையை தரும், அதில் வலி குறைந்தாற் போல தோன்றும். இவை 'கௌண்ட்டர் இரிடெண்ட்' எனப்படும். இது போல வேற உதாரணம் சொல்ல முடியுமா?" என்று கேட்க, ஒரு விற்பனையாளர் பளிச்சென்று சொன்னாராம், "எனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் இருக்கிறார், அவர் ஊசி போடும் முன்பு நோயாளியின் காலை ஓங்கி ஒரு மிதி மிதிப்பார்."
கருத்துகள்
'கௌண்டர் இரிடெண்ட்'
'கௌண்டர் இரிடெண்ட்' என்றதும்
எனக்குத் தலையைச் சுற்றுது
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil










